ஒரு நாள் சிறப்பாக அமைய எந்நாளில் எந்த நிற உடைகளை அணிவது சிறந்தது என்று தெரியுமா?

By: Srinivasan P M
Subscribe to Boldsky

வாழ்க்கை வண்ணமயமானது. வண்ணங்கள் நம்முடைய மனநிலையையும் நமது செயல்பாட்டையும் பாதிக்கக்கூடியவை. வாரத்தில் ஒவ்வொரு நாளும் சூரியக் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு கோளினை அடிப்படையாகக் கொண்டது என்பதை நீங்கள் அறிவீர்களா? இந்த கோள்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை என்பதோடு நம்முடைய வாழ்வை பல்வேறு விதமாக பாதிக்கக்கூடியவையும் கூட.

ஒவ்வொரு கோளும் தனக்கே உரிய வண்ணத்தையும் முன்னிறுத்துவதாக உள்ளது. அதேப்போல் ஒவ்வொரு நாளுக்கும் உரிய வண்ணமும் உண்டு. இந்து மதத்தின் அடிப்படையில் ஒவ்வொரு நாளும் ஒரு கடவுளுக்குரியதாகக் கருதப்படுகிறது. எனவே, அந்தந்த நாளுக்குரிய வண்ணத்தை அணிந்து அந்தந்த கோளின் நல்ல பலன்களை அடைந்து அந்த நாளை சிறப்பானதாக்குங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
திங்கள்: வெள்ளை நிறத்துடன் தொடர்புடையது

திங்கள்: வெள்ளை நிறத்துடன் தொடர்புடையது

திங்கள் சந்திரனைக் குறிக்கும் சொல் என்பதால் அதன் வெள்ளை நிறம் அனைத்திலும் சிறந்ததைக் குறிக்கிறது. எனவே வெள்ளை நிற உடைகளை அணிவது நல்ல அதிர்ஷ்டத்தை தரும். இந்த உடைகள் வெள்ளை நிற நகைகள் அதாவது முத்து, வைரம் ஆகியவற்றினையும் குறிக்கும்.

செவ்வாய்: சிவப்பைச் சார்ந்த நிறங்களைக் குறிக்கும்

செவ்வாய்: சிவப்பைச் சார்ந்த நிறங்களைக் குறிக்கும்

சிவப்பு வண்ண உடைகளையும், சிவப்புக்கல் அல்லது பவளம் ஆகிய நகைகளையும் அணியுங்கள்

புதன்: பசுமையைக் குறிக்கும்

புதன்: பசுமையைக் குறிக்கும்

புதன்கிழமையில் பச்சை நிறம் முக்கியத்துவம் பெறுகிறது. பச்சை நிற உடைகள், மரகதம் உள்ளிட்ட பச்சை நிறக் கற்கள் ஆகியவற்றை அணியலாம்.

வியாழன்: மஞ்சள்

வியாழன்: மஞ்சள்

வியாழக்கிழமைகளில் மஞ்சள் நகைகள் மற்றும் தங்க நிற உடைகளை அணிவது மங்களகரமாக இருக்கும்.

வெள்ளிக்கிழமை: இளம்சிவப்பு (பிங்க்)

வெள்ளிக்கிழமை: இளம்சிவப்பு (பிங்க்)

வெள்ளிக்கிழமைகளில் இளம்சிவப்பு நிறத்தை தேர்வு செய்யுங்கள். இந்த பிங்க் நிறத்தில் உடைகள், மாணிக்கம் உள்ளிட்ட சிவப்பு நிறக்கற்களை கொண்ட நகைகள் ஆகியவற்றை அணியலாம்.

சனிக்கிழமை: கருப்பு

சனிக்கிழமை: கருப்பு

சனிக்கிழமை கருப்பு நிறம் சிறந்தது. அதேப்போல் நீலம், ஊதா மற்றும் வாடாமல்லி நிறங்களையும் அணியலாம். நீலக்கல் உள்ளிட்ட இந்த நிறங்களை ஒத்த கற்களைக் கொண்ட நகைகளையும் அணியலாம்.

ஞாயிற்றுக்கிழமை: சூரியனுக்குரிய நிறங்கள்

ஞாயிற்றுக்கிழமை: சூரியனுக்குரிய நிறங்கள்

இந்த நாளில் சூரியனை ஒத்த நிறங்கள் சிறந்தவை. மஞ்சள் நிறம் எதிரிகளை விலக்க வல்லது மற்றும் உடனடியாக பலன் தர வல்லது. விஷம் உள்ளிட்ட ஆபத்துக்களிலிருந்து பாதுகாப்பு அளிக்கவல்லது. எனவே அன்று ஆரஞ்சு நிற உடைகள் மற்றும் நகைகளை அணிவது பொருத்தமானதாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Auspicious Colours For Each Day Of Week

Wear the colour for each day to remain connected with the planets and increase your prosperity.
Subscribe Newsletter