வெளிநாடுகளில் உள்ள விசித்திரமான தடை உத்தரவுகள்!!!

Posted By:
Subscribe to Boldsky

ஒவ்வொரு நாட்டிற்கும் அந்தந்த நாட்டிற்கு ஏற்ப சில கட்டுபாடுகளும், தடை உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டிருக்கும். அது அவர்களின் கலாச்சாரம் மற்றும் வாழ்வு முறைகளுக்கு ஏற்ப விதிக்கப்பட்டிருக்கும். ஆயினும், சில நாடுகளில் சில பல விசித்திரமான தடை உத்தரவுகளும், விதிகளும் கடைப்பிடிக்கப்படுகிறது. நமது நாட்டில் தேசியக் கொடியை அவமதிப்பது, தேசிய கீதத்தை அவமதிப்பது, தேசிய தலைவர்கள், சின்னங்கள் என்று எல்லாமே தேசம் சார்ந்த விஷயங்களை அவமதித்தால் தண்டனை கொடுப்பதைப் பார்த்திருப்போம்.

உலகத்தில் உள்ள கிறுக்குத்தனமான 10 சட்டங்கள்!!!

ஆனால், கால்களில் செருப்பு போட்டு நடந்தால், மீன் பிடித்தால், உள்நாட்டு பணத்தை உபயோகப்படுத்த, நாய்களுடன் நடைபயிற்சி செல்ல, ஸ்விம்மிங் பூலில் குளிக்க, ஸ்பா மற்றும் அழகு நிலையங்களுக்கு செல்ல எல்லாம் கூட தடை விதிக்கப்பட்டு நீங்கள் பார்த்ததுண்டா? ஆம்! சில வெளிநாடுகள் கொஞ்சம் குசும்புத்தனமாய் இது போல சில விஷயங்களுக்கு தடை பிறப்பித்துள்ளது. இதுப்போல பல காமெடியான தடை பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் பற்றி தெரிந்துக் கொள்ளலாம், தொடர்ந்துப் படியுங்கள்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வட கொரிய

வட கொரிய

வட கொரியா நாடு மிகவும் கடுமையான சட்டத்திட்டங்கள் கொண்ட நாடு. இங்கு வெளிநாட்டவர்கள் அந்த நாட்டு பணத்தை உபயோகிக்க தடை செய்யப்பட்டுள்ளதாம். வெளிநாட்டவர்கள் அங்குள்ள மளிகை கடைகளில் கூட பொருள் வாங்க முடியாதாம்.

அழகு நிலையம் செல்ல தடை

அழகு நிலையம் செல்ல தடை

சவுதி அரேபியாவில் பெண்களுக்கு பல கடுமையான சட்டத்திட்டங்களும், ஒழுங்கு நடவடிக்கைகளும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. ஆயினும் அங்கு பெண்கள் அழகு நிலையங்கள் மற்றும் முடி திருத்தும் நிலையங்களுக்கு கூட செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

சத்தமாக பாட

சத்தமாக பாட

ஹவாய் விடுமுறைக்கு புகழ்ப்பெற்ற நாடு. உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் இருந்து மக்கள் அவர்களது விடுமுறையை சந்தோசமாக கொண்டாட விரும்பி செல்லும் நாடு. அங்கு மாலை சூரிய அஸ்தமனம் ஆகிய பின்பு சத்தமாக பாடுவது தடை செய்யப்பட்டுள்ளது.

அசுத்தமான கார்

அசுத்தமான கார்

ரஷ்யாவில் உள்ள செல்யாபின்ஸ்க் (Chelyabinsk) எனும் ஊரில். அழுக்கு நிறைந்த கார்களை ஓடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் 30 அமெரிக்க டாலர்கள் அபராதம் விதிக்கப்படுகிறது.

மேலாடை இன்றி நடக்க

மேலாடை இன்றி நடக்க

கால்பந்தாட்டத்திற்கு பிரபலமான லிவர்பூல் நகரில் பெண்கள் மேலாடையின்றி நடப்பதற்கு தடை விதிக்கபட்டுள்ளது. ஆனால், கவர்ச்சியான மீன்களை விற்கும் பெண்கள் மட்டும் அவ்வாறு இருக்கலாம் என அவர்களது சட்டம் கூறுகிறது. இது ஏதோ எழுத தெரியாதவன் எழுதியது போல அல்லவா இருக்கிறது (அம்மி கல்லை கொத்த தெரியாதவன் கொத்தியதை போல)

தங்க மீனை வீட்டில் வளர்க்க

தங்க மீனை வீட்டில் வளர்க்க

மிலன் நகரில் இருந்து 15 கி.மீ தொலைவில் மோன்ஜா என்ற ஊர் இருக்கிறது. அங்கு வீட்டில் தங்க மீன்களை வளர்க்க தடை செய்யப்பட்டுள்ளது. இது இயற்கைக்கு புறம்பான செயலாக கருதுகின்றனர்.

எச்சில் துப்ப

எச்சில் துப்ப

பிரெஞ்சில் 2009 ஆண்டில் பன்றி காய்ச்சல் ஏற்பட்டதிலிருந்து நகர வீதிகளில் எச்சில் துப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது.

புரளி பேசுவது

புரளி பேசுவது

கொலம்பியாவில் 2005 ஆண்டு புரளி பேசுவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. இதனால், பலரது வாழ்க்கை பாதிக்கப்படுவதாய், அங்குள்ள ஊர் தலைவர் இந்த விதியை பிறப்பித்துள்ளார்.

செருப்பு அணிய

செருப்பு அணிய

இத்தாலியில் உள்ள கப்ரி எனும் தீவில் செருப்பு அணிந்து நடக்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஏனெனில், அதிலிருந்து வெளிப்படும் சத்தம் இரைச்சலாக இருப்பதாய் அவர்கள் கூறுகின்றனர்.

சூயிங் கம்

சூயிங் கம்

சிங்கப்பூரில் கடந்த 2004 ஆம் ஆண்டு சூயிங் கம் உபயோகிக்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அதையும் மீறி அங்குள்ள நகர தெருக்களில் நீங்கள் சூயிங் கம் மென்று துப்பினால் 500 சிங்கப்பூர் டாலர்கள் அபராதமாக தர வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

10 Strange Things Banned Around The World

Do you know about 10 strange things banned around the world? If no, read here
Story first published: Saturday, March 7, 2015, 15:16 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter