இந்தியத் திருமணங்களில் நடக்கும் தனித்தன்மையான நிகழ்வுகள்!!!

By Boopathi Lakshmanan

இந்தியத் திருமணங்கள் என்றாலே அதில் பின்பற்றப்படும் நெடுங்கால வழக்கங்கள் மற்றும் பாரம்பரிய மரபுகளும் தான் நினைவுக்கு வரும். இவற்றைப் பற்றி ஆராய்ச்சி செய்தால். அவை முடிவில்லாமல் நீண்டு கொண்டே செல்லும். சில நேரங்களில் விளையாட்டாகவும், சில நேரங்களில் உன்னதமாகவும் மற்றும் சில நேரங்களில் அறிவுக்கு ஒவ்வாத விஷயமாகவும் கூட இந்தியத் திருமண நிகழ்வுகள் இருக்கின்றன.

இவ்வாறு நடக்கும் சடங்குகளை காணும் போது. நாம் மூர்ச்சையடையக் கூடச் செய்வோம். இந்தியத் திருமணங்கள் எல்லாப் பேய்களும் ஒன்று கூடிய இடமாகத் தோன்றுகின்றன. இதன் காரணமாகத் தான் இந்தியத் திருமணங்களில் என்னவெல்லாம் நடக்கும் என்பதை நீங்கள் தெரிந்து கொண்டிருக்க வேண்டியது நல்லது என்று சொல்கிறார்கள். இந்தியத் திருமணங்களில் நடக்கும் சில விஷயங்கள் உங்களை சிரிக்கச் செய்யவும் மற்றும் சில விஷயங்கள் காயப்படுத்தவும் கூட செய்யும்.

இந்து மதத்தில் உள்ள 8 வகையான திருமணங்கள்!!!

இந்தியத் திருமணங்களின் போது மனிதர்களின் மனநிலை எப்பொழுதும் உற்சாகமாக இருக்கும் என்பது தான் இதில் குறிப்பிட வேண்டிய அம்சமாகும். எத்தனை குழப்பங்கள் மற்றும் எத்தனை சண்டைகள் வந்தாலும். இந்தியத் திருமணங்கள் மகிழ்சசியாகவே நடைபெற்று வருகின்றன.

அது மட்டுமல்லாமல் இந்தியத் திருமணச் சடங்குகளும் உற்சாகத்தை மிகுதிப்படுத்துவதாக இருக்கின்றன. இந்தியாவிலுள்ள ஒவ்வொரு இனமும் தங்களுடைய திருமணங்களுக்கென தனித்தனியான சடங்குகள் மற்றும் பாரம்பரியங்களைக் கொண்டிருப்பதால். மிகவும் உற்சாகமூட்டுபவையாக அவை இருக்கும்.

பிடாய் என்றழைக்கப்படும் சடங்கு மணமகள் கிளம்பிச் செல்லும் முன்னதாக நடக்கக் கூடிய சடங்காகும். இந்த காட்சியை மட்டும் நீங்கள் பார்க்காமல் இருந்து விட வேண்டாம். அந்நேரத்தில் எழும் ஆரவாரமும், இதயத் துடிப்பின் வேகமும் தான் இந்த திருமணம் ஏன் நடக்கிறது என்பதை உலகத்திற்கு தெரியப்படுத்துகின்றன. எனவே, இந்தியத் திருமணங்களைக் கண்டு ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடையாமல் இருக்க விரும்பினால், அங்கு நடக்கும் நிகழ்வுகளை முன்கூட்டியே நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது முக்கியமான விஷயமாகும்.

இந்த கட்டுரையில் இந்தியத் திருமணங்களில் நடக்கும் மிகவும் விநோதமான பழக்கவழக்கங்கள் மற்றும் சடங்குகளைப் பற்றி கொடுத்துள்ளோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எதுவும் தவறும்!

எதுவும் தவறும்!

யாராவது ஒருவர் திடீரென உங்களிடம் வந்து என்னுடைய வாட்சை பார்த்தீர்களா, மோதிரம் அல்லது சேஃப்டி பின்னை பார்த்தீர்களா என்று கேட்டால் ஆச்சரியப்பட வேண்டாம். இந்தியத் திருமணங்களின் போது சாதாரணமாக நடக்கக் கூடிய கேலிக்கூத்துகளில் இதற்கு பிரதானமான இடம் உண்டு. நீங்கள் திருடினீர்கள் என்று யாரும் இங்கு சந்தேகப்படுவதில்லை. அனைவரும் அவரவர் பொருட்களை சாதாரணமாகத் தேடிக் கொண்டிருப்பார்கள்.

உங்களைத் தெரிந்தவர் இருப்பார்கள், ஆனால் அவர்களை நீங்கள் அறிய மாட்டீர்கள்

உங்களைத் தெரிந்தவர் இருப்பார்கள், ஆனால் அவர்களை நீங்கள் அறிய மாட்டீர்கள்

இந்தியத் திருமணங்கள் மிகவும் இறுக்கமான நிலையில் நடைபெறுவதில்லை. இந்த திருமணங்கள் கலகலப்பாகவும், ஆரவாரமாகவும் நடக்கும். இந்த திருமணங்களின் போது பலருக்கும் உங்களைத் தெரிந்திருக்கும். ஆனால் உங்களால் அவர்களை அடையாளம் காண முடியாது.

பந்திக்கு முந்து!

பந்திக்கு முந்து!

திருமணங்களின் போது அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் விஷயம் உணவு தான். மாப்பிள்ளை அல்லது பெண்ணை வாழ்த்தும் முன்னதாகவே பந்தியைத் தேடிப் படையெடுப்போர் இங்கு அதிகம்!

உங்களுடைய நகைகளை கவனிப்பார்கள்

உங்களுடைய நகைகளை கவனிப்பார்கள்

நீங்கள் அணிந்திருக்கும் நகைகளை மற்றவர்கள் கவனிக்கவும், அதைத் தொட்டுப் பார்க்கவும், பார்வையிலேயே அதனை மதிப்பிடவும் செய்வார்கள். அது எவ்வளவு விலை என்று கூட உங்களிடமே கேட்கவும் செய்வார்கள். திருமணங்களின் போது இவ்வாறு கேட்பது ஒரு வழக்கமாகவே உள்ளது.

தங்கத்தை அணிய மறக்க வேண்டாம்

தங்கத்தை அணிய மறக்க வேண்டாம்

இந்தியர்கள் அதிகமாக முதலீடு செய்யும் விஷயங்களில் முக்கியமானதாக இருப்பது தங்க நகைகள். எனவே, இந்தியத் திருமணங்களின் போது தங்க நகைகளை அணிய மறக்க வேண்டாம். ஆனால், நீங்கள் வைரத்தை அணிந்து வந்தால், அது போலி அல்லது கவரிங் என்று அவர்கள் நினைக்கும் வாய்ப்புகள் உள்ளன.

அடுத்த ஆண்டின் திருமண டைரி!

அடுத்த ஆண்டின் திருமண டைரி!

அடுத்த சீசனுக்கான திருமண நிகழ்வுகள் தொடக்கம் பெறும் இடங்களாக இந்திய திருமணங்கள் உள்ளன. திருமண வயதை உடையவர்களை உடன் அழைத்து வரும் பெண்மணிகளை நீங்கள் பார்க்கும் போது, அவர்கள் தங்களுடைய வாரிசுகளுக்கு திருமணங்களின் போது வரன் அல்லது பெண் தேடுவதை அறிந்து கொள்ள முடியும்.

பெண்ணை காற்றில் பறக்க விடுதல்

பெண்ணை காற்றில் பறக்க விடுதல்

இந்தியாவில் நடக்கும் திருமணங்கள் சிலவற்றில், மணமகளை திருமணம் நடக்கும் இடத்திற்கு தூக்கிச் செல்வார்கள், பிறகு அவளை காற்றில் தூக்கி எறிவார்கள். இது மணமகள்களுக்கு மட்டுமல்ல, மணமகன்களுக்கும் கூட நடக்கும்.

மாலை வேளையின் நட்சத்திரம்

மாலை வேளையின் நட்சத்திரம்

பெரிய பெரிய பன்னாட்டு நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளை விட மிகவும் முக்கியமானவராக திருமணத்தை நடத்தி வைக்கும் பண்டிதர் (புரோகிதர்) இருப்பார். திருமணத்தின் போது அனைவருடைய சேவையையும் பெற விழைவார் அந்த புரோகிதர் மற்றும் அவருடைய ஒரு சொல் வார்த்தையை சிரம் தாழ்த்தி ஏற்றுக் கொள்ள விரும்புபவர்கள் பல பேர்!

திருடு திருடு திருடு – யாரும் கேட்கப் போவதில்லை

திருடு திருடு திருடு – யாரும் கேட்கப் போவதில்லை

மணமகளின் சகோதரிகள் மணமகனின் காலணிகளை திருட அனுமதிக்கப்படுகிறார்கள் மற்றும் அதை திரும்ப கொடுக்க வேண்டுமானால் மணமகனிடமிருந்து எதையாவது பெறவும் நிர்ப்பந்தம் செய்வார்கள்!

தீயில் போட்டு எரிக்க உதவுபவை!!!

தீயில் போட்டு எரிக்க உதவுபவை!!!

இந்தியத் திருமணங்களில் நெருப்புக்கு தனி இடம் உண்டு. இது பற்றி எரியும் நெருப்பல்ல, ஆனால் திருமணத்திற்காக ஏற்றப்படும் அக்னியாகும். இந்த அக்னியில் பல்வேறு விதமான பொருட்களைப் போட்டு எரிப்பதை உங்களால் காண முடியும்.

இந்தியத் திருமணங்களின் சிவப்புக் கம்பள வரவேற்பு

இந்தியத் திருமணங்களின் சிவப்புக் கம்பள வரவேற்பு

இந்தியத் திருமணங்களில் சிவப்புக் கம்பள வரவேற்புகளுக்குத் தனி இடம் உண்டு. இந்த திருமணங்களில் கலந்து கொள்பவர்கள் அணிந்து கொள்ளும் உடைகளைப் பார்க்கும் போது, புகழ்பெற்ற பாலிவுட் நட்சத்திரங்களும் கூட வெட்கப்படுவார்கள்.

பிடாய் என்ற விடை கொடுக்கும் நிகழ்வு

பிடாய் என்ற விடை கொடுக்கும் நிகழ்வு

இந்தியத் திருமணங்களில் நடக்கும் 'பிடாய்' என்ற விடை கொடுக்கும் நிகழ்வு மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த நிகழ்வின் போது மணமகள் விடை பெற்றுச் செல்வார். இந்நிகழ்வின் போது பிரியா விடை கொடுக்கும் அழுகைகளுக்கும், இதயம் கலந்த துடிப்புகளும் ஏற்படுவதைக் காணும் போது திருமணம் ஏன் நடக்கிறது என்று ஆச்சரியமாக இருக்கும். பிடாய் நிகழ்வின் போது, தங்களுடைய மகளைப் பிரிந்திருக்க சிறிதும் விரும்பாதவர்களைப் போல மணமகளின் வீட்டார்கள் தோற்றமளிப்பார்கள். இதே எண்ணமே மணமகளின் செயல்பாடுகளிலும் தெரியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion