Latest Updates
-
உலகின் டாப் 10 பணக்கார குட்டி நாடுகள் என்னென்ன தெரியுமா? இந்த நாடுகளில் சில ஆயிரம் பேரே வாழ்கிறார்களாம் -
இந்த 4 ராசிக்காரங்க எல்லோருக்கும் பிரச்சினைகளை கொடுப்பதற்காகவே பிறந்த ஆபத்தான ஆன்மாக்களாம் -
2 மாம்பழமும் 6 பிரட்டும் இருந்தா.. ஸ்கூல் விட்டு வர பிள்ளைகளுக்கு 10 நிமிஷத்துல இந்த ஸ்வீட் செஞ்சு குடுங்க... -
International Yoga Day 2026: சர்வதேச யோகா தினத்தின் வரலாறு என்ன தெரியுமா? இந்த வருட யோகா தினத்தின் சிறப்பு என் -
சனி பகவான் நிலையால் இனி 2027 வரை இந்த 3 ராசிக்காரங்க நல்ல வளர்ச்சியை காண்பார்களாம்! -
ஆந்திரா மெஸ் ஸ்டைல் கோவைக்காய் துவையல் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க -
International Yoga Day 2026: முதுகு வலி அதிகமா இருக்கா? அப்ப இந்த 4 யோகாசனங்களை தினமும் செய்யுங்க.. -
சூரியன் மிதுன ராசி செல்வதால் உருவாகும் ராஜயோகம் இந்த 3 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் கொடுக்கப்போகுதாம் -
சாணக்கிய நீதி படி பெண்கள் இந்த 5 வகை ஆண்களுடன் நட்போ, காதலோ வைத்துக் கொள்ளக்கூடாதாம் - ஜாக்கிரதை
தென்னிந்திய பெண்ணுடன் டேட்டிங் செல்வதற்கான முதன்மையான சில காரணங்கள்!!!
நம் இந்தியாவில் இனவெறி பிடித்த பல பேரை காணலாம். இந்தியாவில் உள்ள அனைத்து சமுதாயத்திற்கும் ஏதாவது பட்டப்பெயர் வைத்திருக்கிறோம். பெங்காலிகளை பாங் என்றும், தமிழ் பிராமிணர்களை தம் ப்ராம்ஸ் என்றும், இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இது மிகப்பெரிய பட்டியலாகும்.
அதனால் தான், இந்தியாவின் பல பகுதிகளில் ஒரே மாதிரியான பல பெண்களை நாம் காணலாம். பல வகை சமுதாயத்தில் காணப்படும் பல வகை பெண்களுக்கு மத்தியில், தென்னிந்திய பெண்களுக்கு தனிச்சிறப்பு உண்டு. அதனால் தான் தென்னிந்திய பெண்களுடன் டேட்டிங் செல்ல பல காரணங்கள் உள்ளது.
சுவாரஸ்யமான வேறு: இந்தியத் திருமணங்களில் நடக்கும் தனித்தன்மையான நிகழ்வுகள்!!!
தென்னிந்திய பெண்களுடன் டேட்டிங் செல்வது புத்திசாலித் தனமானதாகும். அதற்கு காரணம் அவர்கள் தங்களையே அற்பணிக்கும் மனைவியாக திகழ்வார்கள். இந்த நம்பிக்கை இழிவை ஏற்படுத்துவதை போலவும் இல்லை. புத்திசாலியாகவும் கலகலவென இருக்கும் அவர்களை திருமணம் செய்தால் சரியான மனைவியாகவும் இருப்பார்கள்.
தென்னிந்திய பெண்களுடன் டேட்டிங் செல்வதால் ருசி மிக்க தென்னிந்திய உணவுகளான இட்லி, வடை, சாம்பார் போன்றவைகளை ருசிக்கலாம். தலைவர் சூப்பர் ஸ்டார் தரிசனத்தையும் பெறலாம். இப்போது தென்னிந்திய பெண்களை டேட்டிங் செய்ய சில காரணங்களைப் பார்க்கலாமா?
இதுப்போன்று வேறு: உண்மையான ஆண் மகன்களிடம் இருக்கும் 8 சிறந்த குணங்கள்!!!

இடிச்சபுளி போல் இருப்பதில்லை
பொதுவாகவே இடிச்சப்புளி போன்ற தென்னிந்திய பெண்ணை காண்பது அரிது. பொதுவாகவே தென்னிந்திய பெண்கள் பள்ளி காலத்தில் துருதுருவென இருப்பார்கள். கணிதத்தில் சிறப்பாக இருப்பது அவர்களின் இரத்தத்தில் ஊறி போனது.

செலவு குறைவு
தென்னிந்திய பெண்ணை டேட்டிங் செய்தால் அதனால் ஏற்படும் செலவு குறைவே. ஷாப்பிங் செய்வதிலும் ப்ராண்ட் மீது பைத்தியமாக இருப்பதும் குறைவே; டெல்லியில் பிறந்து வளர்ந்த தென்னிந்திய பெண்ணாக இருந்தாலோ ஒழிய.

தங்கத்தை கிலோ கணக்கில் கொண்டு வருவார்கள்
தென்னிந்திய பெண்ணை திருமணம் செய்து கொண்டால், திருமணத்தின் போது தங்கத்தை கிலோ கணக்கில் அணிந்து கொண்டு வருவார்கள். இந்த தங்கம் அனைத்தும் உங்களுக்கு வரப்போவதில்லை என்றாலும், உங்கள் வருங்காலம் தங்க எழுத்துகளால் எழுதப்பட்டிருக்கிறது என்பதை அறியும் போது அன்னராக இருக்கும் அல்லவா.

பண்பாடு நிறைந்தவள்
முக்கால்வாசி தென்னிந்திய பெண்கள் பாரம்பரிய குடும்ப மதிப்புகளில் ஊறியவர்களாக இருப்பார்கள். வீட்டை எதிர்த்து நடப்பவர்கள் மிகவும் அரிதே. நீங்கள் உங்கள் தாயின் செல்லப்பிள்ளை என்றால், உங்கள் மனைவியாக வரப்போகும் பெண்ணை தென்னிந்திய பெண்ணாக தேர்ந்தெடுங்கள்.

உங்களை சாம்பாரில் குளிப்பாட்டுவாள்
தென்னிந்திய பெண் என்றால் இரண்டு விஷயங்கள் ஆழமாக பதிந்திருக்கும்; ஒன்று அவளின் கண்கள், மற்றொன்று சாம்பார் மீதான அவளின் காதல். ஒன்று உங்களை அவள் கண்ணால் சொக்க வைப்பாள், இல்லை சாம்பார் பானையில் உங்களை குளிப்பாட்டி விடுவாள்.

அறைகுறையான ஆடையை விட காஞ்சிபுர சேலையில் எடுப்பாக இருப்பாள்
எந்த ஒரு தென்னிந்திய பெண்ணாக இருந்தாலும் சரி, காஞ்சிபுர சேலையில் தேவதை போல் இருப்பாள். நீங்கள் பந்தையமே கட்டலாம். அரைகுறை ஆடைகளில் மிக அரிதாகவே அவள் நன்றாக இருப்பாள்.

அரைகுறை இந்தி... மயங்கி விடுவீர்கள்
பல தென்னிந்திய பெண்களும் இப்போது பல பாஷைகளை பேசி வருகின்றனர். இருப்பினும் அவர்கள் உங்களிடம் அரைகுறை இந்தியில் பேசும் போது, உங்கள் இதயம் அப்படியே ஐஸ் போல் உருகி விடும்.

கூரறிவான ஆங்கிலம்... என்ன ஒரு நேர்த்தி
ஆனால் அவர்களின் ஆங்கிலம் மிகவும் கூர் அறிவுடன் குறிப்பிடத்தக்க இருக்கும். சொல்லப்போனால், சரியாக ஆங்கிலம் பேசாத தென்னிந்திய பெண்கள் மிகவும் குறைவே.

போதிய வளைவுகளை கொண்ட அவள் அதனை பெருமையாக கருதுவாள்
தங்கள் மனைவி சற்று கொழு கொழுவென இருப்பதை தான் ஆண்கள் விரும்புவார்கள் - அவர்களை பற்றி அவர்கள் அளிக்கும் விளக்கம் இது. உங்கள் காதலி ஒல்லியாக இல்லாவிட்டாலும் கூட, உங்களை பார்த்து, 'நான் குண்டாக இருக்கிறேனே' என்று கேட்டு நச்சரிக்க மாட்டாள்.

பாடுவதிலோ அல்லது ஆடுவதிலோ அல்லது இரண்டிலுமே திறன் வாய்ந்து விளங்குவார்கள்
இவ்வகை திறமைகளுக்கு பயிற்சு எடுக்காத தென்னிந்திய பெண்களை காண்பது மிகவும் அரிது. பரதநாட்டியம், கர்நாடக இசை என ஏதாவது ஒரு பயிற்சியை பெற்றிருப்பார்கள்.

பெண்ணின் நறுமணம்
பெண்ணின் நறுமணத்திற்காக அவர்கள் பெரிதும் அறியப்படுகின்றனர். முக்கியமாக தென்னிந்திய பெண்கள் தங்கள் கூந்தலில் பூச்சூடுவதால், அவர்களிடம் கூடுதல் நறுமணம் வீசும்.



Click it and Unblock the Notifications