Latest Updates
-
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...!
சந்திர கிரகணத்தைப் பற்றி உலகில் கூறப்படும் சில கட்டுக்கதைகள்!!!
உலகத்தில் உள்ள அனைத்து மரபுகள் படியும், கிரகணம் என்றாலே ஏதோ ஒரு தீய சக்தியோடு தொடர்புடையதாக பார்க்கப்படுகிறது. அது சூரிய கிரகணமாக இருந்தாலும் சரி, சந்திர கிரகணமாக இருந்தாலும் சரி, உலகத்தில் உள்ள பல மர
தற்போதைய நவீன காலத்தில் கூட கிரகணம் என்பது கொண்டாடும் வகையிலான ஒரு நிகழ்வாக திகழ்கிறது. உலகத்தில் அனைத்து இடங்களிலும் பல மக்கள் கிரகணத்தை காண ஆவல் கொள்கின்றனர். சிலர் கிரகணத்தை காண்பதற்கு பார்ட்டி கொண்டாடுகிறார்கள்; இன்னும் சிலரோ அதனை காண சாலை வழி பயணம் மேற்கொள்கின்றனர். இருப்பினும் பழங்காலத்தில் இதுவல்ல நிலைமை.
உலகத்தில் உள்ள அனைத்து மரபுகள் படியும், கிரகணம் என்றாலே ஏதோ ஒரு தீய சக்தியோடு தொடர்புடையதாக பார்க்கப்படுகிறது. அது சூரிய கிரகணமாக இருந்தாலும் சரி, சந்திர கிரகணமாக இருந்தாலும் சரி, உலகத்தில் உள்ள பல மரபுகளும், சூரியனோ சந்திரனோ மறைவதை ஒரு தீயவையாக பார்த்தது.
சுவாரஸ்யமான வேறு: புகழ்பெற்ற சில இந்திய மூட நம்பிக்கைகள்!!!
நிலவு மறைவது குழப்பங்கள் மற்றும் ஆபத்துக்கள் நிறைந்த நேரமாக கருதப்பட்டது. சந்திர கிரகணம் என்பது சாத்தான்கள், சிறுத்தைகள் மற்றும் அனைத்து ஈனத்தனமான விலங்குகளுடன் தொடர்புடையதாக பார்க்கப்படுகிறது. சிவப்பு நிலவு என்று கருத்தப்படுவதும் பல மரபுகளிலும் உள்ளது. அதன் படி அது ஒரு தீய சக்தியாக கருதப்படுகிறது. இதுப்போக மனநிலை சரியில்லாமல் இருப்பவர்களுக்கு சந்திர கிரகணத்தின் போது, மனநிலை உச்சநிலையில் பாதிக்கப்படும் என்றும் நம்பப்படுகிறது. காரணம் அவர்களை தீய சக்தி தான் ஆட்டி படைக்கிறது என்று நம்புகின்றனர்.
எது எப்படியிருந்தாலும் சரி, உலகத்தை சுற்றியுள்ள சந்திர கிரகண கட்டுக்கதைகளை கேட்பதற்கு சுவாரஸ்யமாகத் தான் இருக்கும். இப்போது உலகத்தை சுற்றிப் பேசப்படும் கட்டுக்கதைகளைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோமா?

இன்கா: இறப்பு ஏற்படுத்தும் தாக்குதல்
கொலம்பியா-அமெரிக்காவுக்கு முந்தைய இன்கா நாகரீக மக்கள், சந்திர கிரகணத்தை ஒரு அசாதாரண நிகழ்வாக பார்த்தனர். இன்காவின் புராணத்தின் படி, சந்திர கிரகணத்தின் போது, ஒரு சிறுத்தை நிலவை தாக்கி அதனை உட்கொண்டு விட்டது. நிலவை தாக்கிய பின் அந்த சிறுத்தை பூமிக்கு வந்து மனிதர்களை தாக்கும் என அந்த மக்கள் பயந்தனர். அதனால் அச்சிறுத்தையை விரட்டவும், அது நிலவை உண்ணாமல் இருக்கவும், அந்த மக்கள் அதிக அளவிலான ஓசை எழுப்பி, கொட்டு அடித்து தங்கள் நாய்களை ஊளையிட விடுவார்கள்.

மெசொபோடாமியன் நம்பிக்கை: அரசன் மீதான தாக்குதல்
மெசொபோடாமியன் புராணத்தின் படி, சந்திர கிரகணத்தின் போது, ஏழு சாத்தான்களால் நிலவு தாக்கப்படுகிறது. இது அவர்கள் அரசன் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு சமமானவை என்று மெசொபோடாமியன் மக்கள் நம்பினார். அதனால் சாத்தான்களின் தாக்குதலை தாங்க, சந்திர கிரகணத்தின் போது, அரசனுக்கு மாற்றாக வேறு ஒருவருக்கு மகுடம் சூட்டப்படும். அந்த நேரத்தில் உண்மையான அரசன் மக்களில் மக்களோடு ஒழித்து வைக்கப்பட்டிருப்பார். கிரகணம் முடிந்தவுடன், அந்த மாற்று அரசன் ஒன்று கொல்லப்படுவான் அல்லது மாயமாக மறைந்து விடுவான்.

சந்திர கிரகணத்தைப் பற்றிய இந்திய புராணம்
இந்திய புராணத்தின் படி, சந்திர கிரகணத்தின் போது, ராகு என்ற அரக்கன் நிலவை உண்ணுகிறான். இதனை ஒரு தீய நிகழ்வாக கருதும் மக்கள், கிரகணத்தின் போது உணவு உண்ணுவதையோ சமைப்பதையோ தவிர்ப்பார்கள்.

சந்திர கிரகணத்தைப் பற்றிய சீன புராணம்
சந்திர கிரகணத்தின் போது நிலவை நாய்களும் இதர வனவிலங்குகளும் கடித்து உண்ணுகின்றன என பழங்கால சீனர்கள் நம்பினார்கள். அதனால் இந்த மிருகங்களின் தாக்குதலில் இருந்து நிலவை காப்பாற்ற மக்கள் கனமான சத்தம் வரும் அளவிற்கு மணிகளை அடித்தனர்.

தெற்கு ஆப்ரிக்கா புராணம்: சிறந்த சண்டை
டோகோ மற்றும் பெனின் மக்களின் நம்பிக்கை படி, கிரகணத்தின் போது சூரியனும் சந்திரனும் சண்டையிட்டு கொள்கின்றன. அந்த சண்டையை நிறுத்த மக்கள் பாடுபட்டனர். அதனால் கிரகணம் என்பது பழைய சண்டைகளை மறந்து சமாதானமாகும் ஒரு நிகழ்வாக எடுத்துக் கொள்ளப்பட்டது.

அமெரிக்க பிறப்பிட நம்பிக்கைகள்: கசியும் நிலவு
ஹுபா பழங்குடியினரின் நம்பிக்கைப்படி, நிலவிற்கு 20 மனைவிகளும், மலை சிங்கங்கள் மற்றும் பாம்புகள் என பல செல்லப்பிராணிகளும் இருந்தன. அவர்களுக்கு போதிய உணவுகளை கொண்டு வர நிலவு தவறி விட்டால், அவைகள் நிலைவை தாக்கி குருதி கசியச் செய்யும். நிலவின் மனைவிகள் அதனை காக்க, அதன் இரத்தத்தை பிடித்து அதனை குணமாக்கும். இப்படி செய்யும் போது கிரகணம் முடிவடையும். சந்திர கிரகணத்தின் போது நிலவு சிவந்த நிறத்தில் இருப்பதை அதன் குருதி கசிவு என நம்புகின்றனர்.



Click it and Unblock the Notifications











