Latest Updates
-
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்! -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க...
ஆண்கள் செய்யும் வேடிக்கையான மற்றும் விந்தையான விஷயங்கள்!!!
பெண்களை போலவே ஆண்களுக்கும் ஒரு மென்மையான பக்கம் இருக்கும். காதல் படங்கள், நகைச்சுவை, வாசனை மெழுகுவர்த்திகள், ஏன், பெண்கள் விரும்பும் அனைத்தையுமே ஆண்கள் விரும்புவார்கள். ஆனால் அதனை அரிதாகவே அவர்கள் வெளிக்காட்டுவார்கள்.
வேடிக்கையான மற்றும் விந்தையான இவ்வகை ஆசைகளை கொண்ட ஆண்கள், பெண்மை உணர்வு மிக்கவர்களாக வகைப்படுத்தப்படுகின்றனர். இருப்பினும் இவ்வகை ஆசைகள் இயல்பான ஒன்றே. இவ்வகை வேடிக்கையான விஷயங்களை செய்யும் ஆண்களுடன் இருக்கும் பெண்கள் அவர்களுடன் இருப்பதை மிகவும் விரும்புவார்கள். காரணம் பெண்ணின் வாழ்க்கை முறையோடு இவ்வகை ஆண்கள் சுலபமாக ஒத்துப்போவார்கள்.
சுவாரஸ்யமான வேறு: 10 வகையான கனவுகளும்... அவற்றிற்கான அர்த்தங்களும்...
பாதிக்கு பாதியான ஆண்கள், தனியாக இருக்கும் போதோ அல்லது துணையுடன் இருக்கும் போதோ, இவ்வகையான வேடிக்கை மற்றும் விந்தையான விஷயங்களை செய்து வருகின்றனர். ஆண்கள் அப்படி என்ன தான் வேடிக்கையாகவும் விந்தையாகவும் செய்வார்கள் என்பதை பார்க்கலாமா? உங்களுக்கு ஏதேனும் தெரிந்தால், அதையும் இந்த பட்டியலோடு சேர்த்துக் கொள்ளுங்கள்.
உலகின் உயரமான கட்டிடமான புர்ஜ் கலீபாவை ஒரம் கட்ட வரப்போகும் கிங்டம் டவர்!!!

தன்னை தானே புகைப்படம் எடுத்தல்
தன்னை தானே புகைப்படம் எடுப்பது இப்போது ஒரு ஃபேஷனாக மாறி விட்டது. இதற்கு பல ஆண்கள் அடிமையாகியும் இருக்கின்றனர். நண்பர்களுடன் இருக்கும் போதோ அல்லது வீட்டில் தனியாக இருக்கும் போதோ, ஆண்கள் இந்த வேடிக்கையான மற்றும் விந்தையான பழக்கத்தில் ஈடுபடுவதுண்டு.

நகைச்சுவை கலந்த காதல் படங்களின் மீது பைத்தியமாக இருப்பது
ஆம், எப்படி காதல் படங்களை பார்க்கும் போது பெண்கள் கண்ணீர் விடுவார்களோ, அதே உணர்வு ஆண்களுக்கும் ஏற்படும். என்ன ஒன்று, அதை அவர்கள் வெளிப்படையாக காட்டமாட்டார்கள்.

வாசனை கொண்ட சோப்புக்கள்
வாசனை மிகுந்த சோப்புக்களை வாங்குவதும் கூட ஆண்கள் செய்யும் வேடிக்கையான மற்றொரு விஷயமாகும். அதனை பயன்படுத்தினால் அதிக நற்பதத்துடன் இருக்கலாம் என்பது அவர்களின் உணர்வு.

தொலைகாட்சி நாடக பிரியர்கள்
திருமணத்திற்கு பிறகு தங்களின் மனைவியுடன் சேர்ந்து தொலைக்காட்சியில் நாடகங்கள் பார்ப்பதை ஆண்கள் விரும்புவார்கள். நன்றாக கவனித்தால், பெண்களை விட ஆண்கள் இதனை அதிகமாக ரசிப்பதை உணரலாம்.

அழகு சாதனப்பொருட்களை நாடுதல்
பல வகையான ஃபேஸ் மாஸ்க்குகளை ஆண்கள் முயற்சிப்பது கூட வேடிக்கையான மற்றும் விந்தையான ஒரு செயலே. தன முகத்தை சுத்தமாகவும் பருக்கள் இல்லாமலும் வைத்திட ஆண்கள் விரும்புகிறார்கள்.

நுரை குளியல்
மீண்டும் ஆணுக்கும் பெண்ணுக்குமான போட்டி இது. நுரையில் அமர்ந்து குளிப்பது ஆண்களுக்கு பிடிக்கும். குளியல் தொட்டியிலேயே பலமணி நேரம் அமர்ந்து குளிக்க அவர்களுக்கு பிடிக்கும்.

பத்திரிகைகள்
பெண்கள் பின்னால் சுற்றும் ஆண்களிடம் கண்டிப்பாக கிசுகிசு போடப்பட்டிருக்கும் பத்திரிகைகள் குவிந்து கிடக்கும். ஆண்கள் செய்யும் வேடிக்கையான மற்றும் விந்தையான விஷயங்களில் இதுவும் ஒன்றாகும்.

குழந்தைகளின் மீது பிரியம்
ஆம், பெண்களுக்கு மட்டும் தான் குழந்தைகளின் மீது பிரியம் இருக்குமா என்ன? ஆண்களுக்கு குழந்தைகள் என்றால் அலாதி பிரியமே. அதனால் தனக்கென குழந்தைகள் வேண்டும் என்று அவர்கள் விரும்புவார்கள்.

பிங்க் நிறத்தின் மீது காதல்
பொதுவாகவே பிங்க் நிற ஆடை அணிய ஆண்கள் அறிவுறுத்தப் படுவதில்லை. இருந்தாலும் கூட சில ஆண்களுக்கு இந்த மெல்லிய வண்ணத்தின் மீது காதல் உள்ளது. இதுவும் அவர்கள் செய்யும் ஒரு விந்தையான விஷயமே.

பெண்கள் பயன்படுத்தும் ஷாம்பு
பெண்கள் பயன்படுத்தும் ஷாம்பு மீது ஆண்கள் ஏன் காதல் கொள்கிறார்கள் என்பதற்கு விளக்கமே கிடையாது. அவர்கள் ஏன் அதனை மிகவும் விரும்புகிறார்கள் என பார்த்தால், பெண்களின் ஷாம்புவில் அதிக மனம் இருக்கும். அதுவாக கூட இருக்கலாம்.

பாப் ஸ்டார்ஸ்
பாப் ஸ்டார்ஸ் என்றால் சில ஆண்களுக்கு பைத்தியம். அவர்கள் எவ்வளவு வயதானவர்களாக இருந்தாலும் சரி அல்லது இளைஞர்களாக இருந்தாலும் சரி, அவர்களை அதிகமாக நேசிப்பார்கள்.

அழகு நிலையம் செல்வது
ஆண்கள் ஒரு தேதியை ஒதுக்கி கொண்டு, அழகு நிலையம் சென்று, ஃபேஷியல், பெடிக்யூர், மேனிக்யூர் போன்றவைகளை செய்து கொள்வது வேடிக்கையான விஷயங்களில் முக்கியமான ஒன்றாகும்.

கட்டிப்பிடிப்பதே சிறந்தது
நட்பையும், காதலையும் அன்பையும் வெளிப்படுத்த கட்டிப்பிடிப்பது ஒரு சிறந்த வழியாக உள்ளது. ஆண்கள் செய்யும் மற்றொரு விந்தையான விஷயம் என்ன தெரியுமா? தனக்கு அதிக பரீட்சயம் இல்லாதவர்களை கூட அவர்கள் கட்டிப்பிடிப்பதுண்டு.

பொது இடத்தில் சொரிந்து கொள்வது
பல ஆண்களுக்கு இந்த பழக்கம் பிடிக்கும், முக்கியமாக இந்தியாவில். அருகில் யார் இருந்தாலும் கவலைப்படாமல் தன மனதார சொரிந்து கொண்டு இருப்பார்கள்.



Click it and Unblock the Notifications