Latest Updates
-
நாக பஞ்சமி 2026: இந்த வருட நாக பஞ்சமி எந்த நாளில் வருகிறது? இந்த நாளில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
வெஜ் கோலாப்பூரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு சூப்பரா இருக்கும் -
சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சுதந்திர தின ஸ்பெஷல் மூவர்ண பூரியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 15 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டத்தின் சாவி கைக்கு வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது! -
புதன் ஆயில்ய நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கும் யோகமுள்ள 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்தன்று இந்த ஸ்டைலில் வாழ்த்துக்களை சொல்லுங்க.. -
தேசியக்கொடியின் நடுவில் அசோக சக்கரம் ஏன் நீல நிறத்தில் உள்ளது? அதில் ஏன் 24 ஆரங்கள் உள்ளது தெரியுமா? -
ரோட்டுக்கடை இட்லி தக்காளி சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. அள்ளும்..
இந்தியர்கள் கைகளால் உணவருந்துவதற்கான 8 காரணங்கள்!!!
ஏன் கைகளால் உண்ணுவதை இந்தியர்கள் விரும்புகிறார்கள் என என்றாவது எண்ணியுள்ளீர்களா? அதற்கு காரணம் வெறும் கைகளால் உணவுகளை உண்ணும் போது உணவின் சுவை கூடுதலாக இருக்கும். குழந்தைகளையும் கைகளாலேயே உண்ணுவதற்கு பழக்கப்படுத்துகின்றனர். இதனால் உணவருந்தும் மேஜையில் சிந்தி சிதறமால் உண்ணுவார்கள் அல்லவா?
இந்தியர்களுக்கு ஏன் வெள்ளைத்தோலின் மீது மோகம் அதிகம் உள்ளது?
கைகளால் உண்ணும் போது, அவை உணவின் அமைப்பை உணர்ந்து கொள்ளும் வாய்ப்பையும் நமக்கு அளிக்கும். ஸ்பூன் மற்றும் ஃபோர்க் பயன்படுத்தி உண்ணும் போது இந்த அமைப்பை நம்மால் உணர முடிவதில்லை. பல இந்தியர்களுக்கு தங்கள் உள்ளங்கையால் உருளைக்கிழங்கை அல்லது இட்லியை சாம்பார் மற்றும் சட்னியுடன் பிசைந்து சாப்பிட மிகவும் விரும்புவார்கள்.
உண்மையான ஆண் மகன்களிடம் இருக்கும் 8 சிறந்த குணங்கள்!!!
வெறும் கைகளால் உணவருந்தினால் மட்டுமே இந்த ஆசைகள் நிறைவேறும். இந்த பேரின்ப உணர்வை அனுபவிக்க வேண்டுமானால், முதலில் வெறும் கைகளால் உண்ண ஏன் இந்தியர்கள் விரும்புகிறார்கள் என்ற காரணங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்.

கைகளால் உண்ணும் போது உணவின் ருசி அதிகரிக்கிறது
கைகளால் உண்ணும் போது உணவின் ருசி அதிகரிக்கிறது. அடுத்த முறை உங்கள் முன்னால் ஒரு தட்டில் சாப்பாடுடன் ஸ்பூன் மற்றும் ஃபோர்க் ஆகியவைகள் வைக்கப்பட்டால், அவைகளை தவிர்த்து உங்கள் அழகான விரல்களால் உணவை அள்ளி சாப்பிட்டு பாருங்கள். பல வகை உணவுகளுக்கு பெயர் போனவர்கள் இந்தியர்கள். இந்திய உணவுகளின் வளமையை உணருவதற்கு கைகளால் அவைகளை உண்ணுவதே சிறந்த வழியாகும்.

வசதியாக உணர்வீர்கள்
சாப்ஸ்டிக்ஸ் மற்றும் ஸ்பூன் போன்றவைகளை கொண்டு உண்ணுவதை விட கைகளால் உணவருந்தினால் தான் வசதியாக இருக்கும். இதனை ஒத்துக்கொள்வீர்கள் தானே? வசதியாக இருப்பதால் தான் இந்தியர்கள் கைகளால் உணவருந்துவதற்கு விரும்புகின்றனர். இதனால் அவர்கள் உணவை ரசித்து உண்ணவும் முடிகிறது.

கடைசி பருக்கை உணவை கூட வழித்து உண்ணுவீர்கள்
உங்கள் உணவை நீங்கள் விரும்பினால் அதன் கடைசி பொட்டை கூட விடாமல் வசித்து சாப்பிடுவீர்கள். கைகளால் சாப்பிட்டாலே இது சாத்தியம். இப்படி சுவைமிக்க உணவை உண்ணும் போது, தட்டை சுற்றி விரலல்களால் துடைத்து எடுத்து கடைசி போட்டு உணவை கூட மிச்சம் வைக்கமாட்டீர்கள். கைகளை கொண்டு உணவருந்துவதால் கிடைக்கும் மற்றொரு பயன் இது.

ஸ்பூன் மற்றும் ஃபோர்க் தொல்லையாக அமையும்
ஸ்பூன் மற்றும் ஃபோர்க் தொல்லையாக அமையும். ஒவ்வொரு முறை உண்ணும் போதும் உணவை எந்தளவு வெட்டி எடுக்க வேண்டும் என்பது குழப்பமாகவே இருக்கும். அவைகளை சரியாக பயன்படுத்த தெரியும் வரை குழந்தைகளிடம் அவைகளை கொடுக்காமல் இருக்க வேண்டும்.

உணவின் வெப்பநிலையை தெரிந்து கொள்ளுங்கள்
கைகளால் உண்ணும் போது உணவின் வெப்ப நிலையை தெரிந்து கொள்ளலாம். இதனால் வாய் வெந்து போகமால் இருக்கும். இது பெரிய பயன் தானே?

நேர்மறையான ஆற்றல் திறனை உணவு அளிக்கிறது
உணவில் பல வித வெளிப்புற ஆற்றல் திறன்கள் அடங்கியுள்ளது - நேர்மறை, எதிர்மறை, வலிகள், உணர்ச்சிகள், எண்ணங்கள் போன்ற பல. காய்கறி அல்லது மசாலா பொருட்கள் விற்பவர்கள், சமையல்காரர்கள், உணவாக பணியாளர்கள் என பல பேர்களின் கைகளுக்கு செல்கையில், அனைத்து வெளிப்புற ஆற்றல் திறன்களை சுத்தப்படுத்த இந்த கைகள் உதவுகிறது என நம்பப்படுகிறது. இதனால் மனித ஆத்மாவை இது பாதிக்காது.

பாக்டீரியாவின் சுவையை அறிந்து கொள்ள
இயல்பான ஃப்ளோரா என்ற சில பாக்டீரியாக்களை நம் உள்ளங்கைகளில் காணலாம். இந்த பாக்டீரியாக்கள் மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்காது. இருப்பினும் சுற்றுச் சூழலில் உள்ள பல பாக்டீரியாக்களிடம் இருந்து இது நம்மை காக்கிறது. கைகளால் உண்ணும் போது கைகளில் உள்ள ஃப்ளோரா பாக்டீரியாக்களையும் நாம் விழுங்குகிறோம். இது நம் உடல் நலத்திற்கும் வாய், தொண்டை, குடல் போன்ற பல உடல் பாகங்களுக்கும் மிகவும் நல்லதாகும்.

மசாலா வாசனை
கேட்க விந்தையாக இருந்தாலும் இது தான் உண்மை. கைகளால் உண்ணும் போது, எவ்வளவு தான் முயற்சி செய்தாலும் உங்கள் கைகளில் மசாலா வாசனை நீடித்து நிற்கவே செய்யும். கைகளால் உணவை இந்தியர்கள் உண்ணுவதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.
இதுப்போன்று சுவாரஸ்யமான வேறு தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்...



Click it and Unblock the Notifications