Latest Updates
-
சத்தான ரவா கீரை அடை - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 13 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கவலைகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் மாளவ்ய ராஜயோகம்: செப்டம்பரில் இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்! -
சிம்ம ராசியில் உருவாகும் புதாதித்ய யோகம் இந்த 3 ராசிக்காரர்களின் கஷ்டங்களை தீர்க்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
கர்நாடகா தக்காளி தம்பிலி ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் எங்கு சென்றாலும் மகாராணியாக ஆட்சி செய்வார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஹோட்டல் ஸ்டைல் மக்கானா கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. -
தலைமுடி அடர்த்தியா வளரணுமா? அப்ப கறிவேப்பிலையை இந்த எண்ணெய்களுடன் சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
குடிமக்கள் அனைவரும் சொந்த வீடு வைத்துள்ள உலகின் அதிசய நாடு - இதற்கு காரணம் என்ன தெரியுமா? -
ராகுவின் நட்சத்திரத்துக்கு செல்லும் செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்!
அதிர்ச்சியூட்டும் 10 வியப்பான சமயஞ்சார்ந்த சடங்குகள்!!!
சமயஞ்சார்ந்த சடங்குகள் என்றாலே எண்ணங்களை தூண்டும் மந்தமான ஒன்றாகும். இருந்தாலும் கூட சில நேரங்களில் அவைகள் வேடிக்கையாகவும் இருக்கும். சில வியப்பான சமயஞ்சார்ந்த சடங்குகள் உள்ளது. அவைகளை பற்றி தெரிந்து கொள்ளும் போது அதிர்ச்சியை ஏற்படுத்தும். இவ்வகையான சடங்கு சம்பிரதாயங்கள் இன்னமும் கூட உலகத்தை சுற்றி தடுக்கப்படாமல் நடந்தேறி கொண்டு தான் உள்ளது. அவைகளை இன்னமும் மக்கள் நம்பவும் செய்கின்றனர். தங்கள் பச்சிளம் குழந்தையை 7000 அதி உயரத்தில் இருந்து தூக்கி போடுவதை கற்பனை செய்து பாருங்கள். இல்லையென்றால் கடவுளை நம்பும் காரணத்தினால் நெருப்பின் மீது நடக்கும் மக்களை பற்றி எண்ணிப்பாருங்கள்.
சுவாரஸ்யமான வேறு: சமயம் சார்ந்த 12 சின்னங்களும்... அதன் அர்த்தங்களும்...
இவ்வகையான சில அதிர்ச்சியூட்டும் சமயஞ்சார்ந்த சடங்குகள் இன்னமும் பின்பற்றப்பட்டு வருகிறது. இன்னமும் கூட பலர் அதன் மீது அபார நம்பிக்கையையும் வைத்துள்ளனர். நாம் ஏற்கனவே சொன்னதை போல், இவ்வகையான சில சடங்குகளை பற்றி கேட்பதற்கு வேடிக்கையாக இருக்கும். உதாரணத்திற்கு, மோர்மோன் என்றழைக்கப்படும் விசேஷமாக வடிவமைக்கப்பட்ட உள்ளாடைகளை அணிவது. ஆனால் சில சமயம், உலகத்தை சுற்றி பின்பற்றப்பட்டு வரும் இவ்வகையான விந்தையான சடங்குகள் அதிர்ச்சியையும் அளிக்கும். உதாரணத்திற்கு, அழுகிய நிலையில் உள்ள மனித சதையை காகங்களுக்கு படைப்பீர்களா? சில விசேஷ சமுதாயம் அதனை செய்கிறது!
படிக்க வேண்டியவை: சிவலிங்கத்தின் முக்கியத்துவம்!
இந்தியாவை பொறுத்த வரை, குருட்டு நம்பிக்கையும் மதத்தின் மீதான பைத்தியமும் நம் நாட்டில் மட்டும் தான் உள்ளது என்று பலரும் நினைக்கின்றனர். ஆனால் கண்டிப்பாக அது உண்மையில்லை. இந்தியாவில் விந்தையான பல சடங்குகள் இன்னமும் தடுக்க முடியாத நிலையில் பின்பற்றப்பட்டு கொண்டு தான் உள்ளது. இருப்பினும் உலகத்தில் உள்ள சில அதி நாகரீகமான நகரங்களில் கூட இவ்வகையான சடங்குகள் பின்பற்றப்பட்டு தான் வருகிறது.
விஷ்ணு பகவானின் 10 அவதாரங்களும்... அதன் கதைகளும்...
சரி அப்படிப்பட்ட அதிர்ச்சியூட்டும் சடங்குகளைப் பற்றி இப்போது பார்க்கலாம், வாங்க!

மோர்மோன் உள்ளாடைகள்
மோர்மோன் கிறிஸ்துவ ஆலயத்தில் பல விந்தையான நடைமுறைகள் உள்ளது. அதில் ஒன்று தான் விசேஷமாக வடிவமைக்கப்பட்ட உள்ளாடைகளை அணிவது. அப்படி செய்வதால் அவர்கள் தீய சக்திகளிடம் இருந்து பாதுகாப்பாக இருக்கலாம் என்று நம்புகின்றனர். இடைக்காலத்தின் போது இந்த உள்ளாடைகள் உலோகத்தில் செய்யப்பட்டிருந்தது. அம்புகள் மற்றும் நேரடி தாக்குதல்களில் இருந்து அவர்களை இது காத்தது.

ஆகாய புதைப்பு
இறந்த பின்னரும் கூட மற்றவர்களுக்கு பயன்பட வேண்டும் என சோரோஸ்ட்ரியன்கள் (பார்சி) நம்பினார்கள். அதனால் இறந்த மனித உடலை மலை உச்சிக்கு எடுத்துச் சென்று, கழுகிற்கு இரையாக படைத்து விடுவார்கள். மும்பையில், டவர்ஸ் ஆஃப் சைலன்ஸ் என்ற இடத்தில் பார்சி மக்கள் இறந்த சடலங்களை போட்டு விடுவார்கள்.

யூதர்களின் கபரோட் பேயோட்டம்
யூதர்களின் இந்த பழக்கத்தின் படி, மனித உடலில் இருப்பதாக நம்பப்படும் தீய ஆன்மா கோழியின் உடலுக்குள் புகுந்து விடுமாம். அதன் பின் அந்த கோழியின் தலையை வெட்டி அது பலி கொடுக்கப்படும். ஒருவித பேயோட்டும் வகையான இது யூதர்களின் சமுதாயத்தில் மிகவும் புகழ்பெற்ற ஒரு சடங்காகும்.

இறந்தவர்களுக்கான ஞானஸ்தானம்
ஒரு மனிதன் ஞானஸ்தானம் செய்வதற்கு முன்னாலேயே இறந்து விட்டால், ஏசு பிரான் புத்துயிர் பெற்ற மோர்மோன் தேவாலயத்தில், இறந்த உடலுக்கு ஞானஸ்தானம் செய்து வைக்கப்படும். இறந்தவரின் சார்பாக உயிருடன் இருக்கும் ஒருவருக்கு இது செய்து வைக்கப்படும்.

நிர்வாண துறவிகள் அல்லது நாக சன்யாசிகள்
சில இந்து துறவிகள் நிர்வாணமாக இருக்க சபதம் எடுத்திருப்பார்கள். இமயமலையின் கடும் குளிரில் நிர்வாணமாக இருந்து, தங்கள் உடலை வருத்திக் கொள்வார்கள். நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் கும்ப மேளாவின் போது மட்டும் இவர்கள் மலையின் மீதிருந்து கீழிறங்கி வருவார்கள். இந்நேரம் கங்கை நதியில் குளிக்க இவர்கள் அனுமத்திக்கப்படுவார்கள். அவர்கள் கையில் ஆயுதம் வைத்திருப்பதால், அவர்கள் பயமுறுத்தும் வகையில் இருப்பார்கள்.

குழந்தைகளின் மீது குதித்தல்
எல் கொலாச்சோ என்ற ஸ்பானிஷ் கிராமத்தில், ஒவ்வொரு வருடமும் கார்பஸ் கிறிஸ்டி விருந்து அபாயகரமான முறையில் கொண்டாடப்படுகிறது. இந்நாளில், அந்த வருடம் பிறந்த அனைத்து குழந்தைகளையும் கத்தோலிக் பாதிரியார் வாழ்த்துவார். அதன் பின் சாத்தானை போல் ஆடை அணிந்த ஒரு மனிதன் இக்குழந்தைகளின் மீது ஏறி குதிப்பான்.

இறந்த தினம்
மெக்ஸிகோவில், இறந்த நாளின் போது, தங்களுக்கு பிடித்தமானவர்களின் கல்லறைக்கு மக்கள் செல்வார்கள். அன்று அவர்கள் அந்த கல்லறையை சுத்தப்படுத்தி, சுடுகாட்டிலேயே பிக்னிக் போன்று நாளை கழிப்பார்கள். சில நேரம் இறந்தவரின் வாழ்க்கையில் நடந்த நகைச்சுவையான சம்பவங்களை நினைவு கூறி, அந்த தருணத்தை குதூகலாமாக களிப்பார்கள். இந்த சம்பவத்தை பெட்ரோ அல்மொடோவார், தான் இயக்கிய 'வோல்வர்' என்ற திரைப்படத்தில் தெளிவாக காட்டியிருப்பார்.

ஸ்நானம் அல்லது மிஞ்சிய உணவின் மீது குளித்தல்
கர்நாடகாவில் உள்ள சில கோவில்களில், உயர்ந்த குலத்தை சேர்ந்த பிராமணர்களுக்கு வாழை இலையில் உணவு பரிமாறப்படும். அதன் பின் சரும நோய்கள் உள்ளவர்கள் மிஞ்சிய அந்த உணவின் மீது உருளுவார்கள். பிராமணர்களுடன் தொடர்பில் வருவதால், அவர்கள் புனிதமடைவதாக நம்பப்படுகிறது.

ஆன்மீக மீட்டர்
சைன்டாலாஜி தேவாலயங்கள், எலெக்ட்ரானிக் மீட்டர் போன்ற கருவியை கொண்டு, ஒரு மனிதனை சுற்றியுள்ள மின்னணுவியல் அளவை அளவிடலாம் என்று நம்புகின்றனர். இதனை கொண்டு அந்த நபருக்கு ஆன்மீக ஈடுபாடு எந்தளவுக்கு உள்ளது என்பதை கணக்கிடலாமாம்.

இரத்த தானத்திற்கு தடை
ஜெஹோவாஹ் விட்னசெஸ் என்ற மதத்தின் முதல் சட்டமே, யாருடைய உடலில் இருந்தும் இரத்தத்தை எடுக்கக்கூடாது. அது அவசர மருத்துவ தேவைக்கு என்றாலும் கூட.



Click it and Unblock the Notifications