Latest Updates
-
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம்
'தம்' அடிப்பவர்கள் செய்யும் 10 கடுப்படிக்கும் செயல்கள்!!!
நீங்கள் புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லாதவரா? ஆனால் உங்கள் நண்பர்கள் 'தம்' அடிப்பவர்களா? அப்படியானால் அவர்களின் சில விநோதமான நடவடிக்கைகளை நீங்கள் கண்டு எரிச்சல் அடைந்திருப்பீர்கள். ஆனால் அவர்கள் ஏதோ காமெடி செய்துவிட்டது போல் அவர்களே சிரித்துக் கொள்வார்கள்.
நம் நாட்டில் பொது இடங்களில் சிகரெட் பிடிப்பது சட்ட விரோதமான செயல் என்பது நமக்குத் தெரிந்த விஷயம்தான். புகைப்பிடிப்பது உடல் நலத்திற்கு தீங்கானது என்பதும் உண்மை தான். ஆனால் இதையெல்லாம் 'தம்' அடிப்பவர்கள் கண்டுகொள்வதே இல்லை.
சுவாரஸ்யமான வேறு: ஆண்கள் செய்யும் வேடிக்கையான மற்றும் விந்தையான விஷயங்கள்!!!
சிகரெட் பிடிப்பதால் அவர்களுடைய உடல் நலம் கெடுவது மட்டுமல்லாமல், அவர்களைச் சுற்றியுள்ளவர்களும் கடும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். இதை நீங்கள் உங்கள் நண்பர்களுக்கு எவ்வளவோ எடுத்துக் கூறினாலும், அது எடுபடாமல் தான் போகும். பதிலுக்கு, அவர்கள் உங்களையே 'தம்' அடிப்பதற்குத் தூண்டி விடுவார்கள். இங்கு 'தம்' அடிப்பவர்களின் கடுப்படிக்கும் 10 செயல்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

வம்படியாகத் துணைக்கு இழுப்பார்கள்
நீங்கள் வேலை செய்யும் இடத்தில் இடைப்பட்ட நேரங்களில் அவர்கள் 'தம்' அடிப்பதற்காக உங்களை வம்படியாக இழுத்துக் கொண்டு போவார்கள். கேட்டால், கம்பெனி கொடுக்கணுமாம்! இதனால் உங்கள் நேரமும் போய், அவர்கள் பிடிக்கும் புகையால் உங்கள் உடல் நலமும் பாதிக்கும்.

கைவிடுவது கடினம்
'தம்' அடிப்பவர்களில் சிலர், "அடுத்த மாசத்திலிருந்து கண்டிப்பா இந்தப் பழக்கத்த விட்ருவேம்ப்பா" என்று சொல்வார்கள். ஆனால், விட மாட்டார்கள். மேலும் "முடியலப்பா, இதை விடுறது ரொம்ப ரொம்ப கஷ்டம்ப்பா" என்றும் கூறுவார்கள்.

உங்களிடமே லைட்டர் கேட்பார்கள்
'தம்' அடிக்கும் உங்கள் நண்பர்கள் சில சமயம் ஒன்றுமே தெரியாதது போல் உங்களிடமே லைட்டர் கேட்பார்கள். பிறகு, ஞாபகம் வந்தது போல் "ஓ, நீ சிகரெட் பிடிக்க மாட்டாய் இல்ல?" என்று சமாளிப்பார்கள்.

பழி சுமத்துவார்கள்
'தம்' அடிக்கும் பழக்கத்தை விடச் சொன்னால் அவர்கள் தேவையில்லாமல் அடுத்தவர்கள் மேல்தான் பழியைப் போடுவார்கள். "கடைசியா ஒரு இழுப்பு இழுத்துக்குறேன் மாப்ள" அப்படின்னு சொல்வார்கள். இதையே பல வருஷங்களா சொல்லிட்டு இருப்பாங்கன்னு உங்களுக்குத் தான் தெரியுமே!

சூயிங் கம் கேட்பார்கள்
'தம்' அடித்த பிறகு வாடையை மறைப்பதற்கு உங்களிடமே சூயிங் கம் கேட்பார்கள். அதைக் கூட அவர்களே வைத்திருக்க மாட்டார்கள்.

எப்போதும் வாயில் சிகரெட்
ஸ்டைலாக இருப்பதாக நினைத்துக் கொண்டு, எப்போதும் தங்கள் வாயிலேயே சிகரெட்டை கவ்விக் கொண்டிருப்பார்கள்.

பொது இடங்களில் 'தம்'
பொது இடங்களில் சிகரெட் பிடிப்பது தவறு என்று தெரிந்தும், ஆஸ்பத்திரி உள்ளிட்ட பல இடங்களில் அவர்கள் 'தம்' அடித்து உங்களையும் கடுப்படிப்பார்கள்.

'தம்' இல்லாத 'தண்ணி'யா?
ஒருவேளை உங்களுக்குக் குடிப்பழக்கம் மட்டும் இருந்து, உங்கள் நண்பர்களுடன் 'தண்ணி' பார்ட்டிக்கு செல்கிறீர்கள். அப்போது அவர்கள் "மச்சி, 'தம்' அடிக்காம வெறும் 'தண்ணி' மட்டும் அடிச்சு என்னடா யூசு?" என்று உசுப்பேத்தி விடுவார்கள்.

கண்ட இடங்களிலும் சாம்பல் தட்டுவார்கள்
'தம்' அடிக்கும் உங்கள் நண்பர்கள் எந்த இடத்தில் வேண்டுமானாலும் சிகரெட் சாம்பலைத் தட்டி விடுவார்கள். சிகரெட் கங்குகள் சில சமயம் உங்கள் உடைகளையும் பதம் பார்த்து விடும்.

உங்கள் காரில் 'தம்'
உங்கள் காரை நன்றாக சுத்தம் செய்து, பெர்ஃப்யூம் அடித்து வைத்திருப்பீர்கள். ஆனால் 'நண்பேன்டா' என்று உரிமையுடன் உங்கள் காரிலேயே அவர்கள் 'தம்' அடித்து காரை நாறடிப்பார்கள்.



Click it and Unblock the Notifications
