Latest Updates
-
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
1 கப் தயிரும், 1 குடைமிளகாயும் இருந்தா.. மதியம் இப்படி குழம்பு வையுங்க.. சாதத்துக்கு அள்ளும்.. -
உங்களுக்கு உடம்பு சூடு பிடிக்கக்கூடாதா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த 4 காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க! -
1 வருடம் கழித்து மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கபோறாங்க.! -
தேங்காய் சேர்க்காமலேயே சூப்பரா தேங்காய் சட்னி செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 20 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
12 ஆண்டுக்கு பின் குருபகவான் கடக ராசிக்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
வல்லாரை கீரையை இந்த மாதிரி சட்னி செஞ்சு பாருங்க - புத்தியும், ஆரோக்கியமும் அதிகமாகும் -
வாஸ்து படி இந்த 5 செடிகள் உங்கள் வீட்டில் இருந்தால் துரதிர்ஷ்டம் உங்கள் வீட்டை விட்டு எப்பவும் போகாதாம் -
முருங்கைக்காய் வாங்குனா இந்த வித்தியாசமான பொரிச்ச குழம்பு செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும்
வெற்றிப் பெற்ற பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள்!!
மிகுந்த பலத்துடன் பிறப்பவர்கள் தான் பெண்கள்! பலம் என்பது உடல் பலம் அல்ல. மாறாக அவள் தாங்கிச் செல்லும் மன வலிமையை குறிக்கின்றது. ஒரு பெண்ணின் உண்மையான சக்தி அவளின் உள்ளார்ந்த ஆத்மாவில் கலந்திருக்கிறது.
ஐம்பதாண்டு காலமாக பெண்கள் தங்கள் கால்களை பல்வேறு துறைகளில் பதித்துள்ளனர். வணிகம், அறிவியல், தொழில் நுட்பம், ஆசிரியர் ஆகிய பல பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது. பொதுவாக பெண்கள் முன்னேறுவது ஒரு எதிர்பார்த்த காரியமாகவோ அல்லது மகிழ்ச்சியை தரக்கூடிய காரியமாகவோ இருப்பதில்லை. பெண்கள் எப்பேர்பட்ட வாழ்விலும் தங்கள் கால்களை பதித்த வண்ணம் தான் உள்ளனர் என்று கூறினால் அது மிகையாகாது. அவளுக்கு மட்டும் எப்படி இவ்வளவு துணிச்சல்? இந்த ஒரு விஷயம் நமக்கு பிரம்மிப்பூட்டுபவதாக இருக்கும். ஆனால் அவளுக்குள் இருக்கும் ஒரு சக்தி அவளை இத்தகைய உயரத்தை அடைய செய்கின்றது.

வெற்றி என்பதை தான் நாம் அனைவரும் விரும்புகின்றோம். பெண்கள் மட்டும் ஒரு விதி விலக்கு அல்ல. ஆனால் வெற்றி எளிதாக வந்துவிடாது. அதற்கு விடாமுயற்சியும் உறுதியுடனும் இருக்க வேண்டும். வெற்றிகரமானவராக இருப்பதால் பல்வேறு நன்மைகள் இருக்கின்றன. எனினும், வெற்றிகரமானவர்களாக இருப்பதில் கூட, பெண்களுக்கு பல பெண்களுக்கு தடைகளும் இறக்கங்களும் ஏற்படுகின்றன. பெண்கள் இதற்காக படும் அவலங்கள் பல உண்டு. பின்வரும் பகுதியில் பெண்கள் செல்லும் இந்த வெற்றிகரமான கடினப் பாதையைப் பற்றி சில தகவல்களைக் கொடுத்துள்ளோம்.
வெற்றி என்பது ரோஜா படுக்கை அல்ல
எந்த ஒரு செயலாக இருந்தாலும் பெண்கள் அதற்கு தேவையான முயற்சிகளை செய்ய அச்சப்படுவது கிடையாது. அவர்கள் சுயமாக மற்றும் சட்டென்று எதையும் செய்து விடுவார்கள். இவ்வாறு செய்வது அவர்களுக்கு மிகுந்த தொந்தரவை அளிக்கக் கூடும். எனினும், அவளது இடத்தை இந்த சமூதாயத்தில் தக்க வைத்துக்கொள்ள தேவையான முயற்சிகளை அவள் எடுத்துக் கொண்டே தான் இருப்பாள். வெற்றி பெறுவதற்காக பெண்கள் எடுக்கும் முயற்சிகளை நாம் கூறாமல் விட்டு விட முடியாது. அவள் பல விஷயங்களை விட்டு கொடுத்து தான் முன் நிலையில் நிற்கிறாள்.
பல பணிகள் செய்பவள்
பெண்கள் இயற்கையாகவே பற்பல பணிகளில் ஒரே நேரத்தில் ஈடுபட்டிருப்பார்கள். இவ்வாறு பற்பல வேலைகளை செய்து கொண்டே, வெற்றிகரமான பெண்களாக இருப்பது ஒன்றும் எளிதான காரியம் இல்லை. இதற்கு அதிக அளவு உழைப்பும் கவனமும் தேவைப்படுகின்றது. வெற்றி பெறுவது மட்டுமல்லாமல் கிடைத்த வெற்றியை தக்க வைத்துக் கொள்ள முயற்சிகளும் செய்ய வேண்டும். இது வெற்றிகரமான பெண்கள் எதிர்ககொள்ளும் கடினமான காரியங்களில் ஒன்றாகும்.
பெரும் அர்ப்பணிப்பு
பெண்கள் வெற்றியுடன் வாழ்வதற்கு எடுக்கும் முயற்சியும் அதற்காக படும் பாடுகளையும் வார்த்தைகளில் சொல்ல முடியாது. அர்பணிப்பே அவள் வெற்றியின் காரணமாகும். எல்லா பெண்களும் அவர்களின் குடும்பத்தை மிகவும் நேசிப்பதுண்டு. சில சமயங்களில் வெற்றி பெறும் பொருட்டு அவளின் குடும்பத்தையே தியாகம் செய்யும் அளவிற்கு முனைந்திருப்பாள். இது வெற்றி பெறும் பெண்களுக்கு ஒரு பெரும் இழப்பாக மாறிவிடுகின்றது. அவளது வாழ்கையையே இத்தகைய கனவுகள் மூலம் சில நேரங்களில் அழித்து விடுகிறாள்.
ஓ! நான் களைத்து விட்டேன்...
உடலும் உள்ளமும் அயர்ந்து போய்விட்டது. இந்த நிலைமை எல்லா மனிதருக்கும் கண்டிப்பாக ஒரு நாள் வரும். விரக்தி, களைப்பு ஆகியவை எந்த ஒரு வெற்றி பெற்ற பெண்ணுக்கு வந்தாலும் அதை உதறி விட்டு அவள் பெற்ற வெற்றியை தக்க வைத்துக் கொள்ள பாடுபடுவாள். இதுவும் மிகப்பெரிய கடினமான காரியமாகும். இதை எல்லாம் மறந்து விட்டு உழைக்க வேண்டும் என்பது கடினம் தான். அவளுக்கென தனிப்பட்ட மன அழுத்தம், வேலைப்பளு ஆகியவை இருக்கத்தான் செய்கின்றது. ஆனாலும் அவளுக்கு ஒய்வு வேண்டும் என்பதில்லை. அவள் சிறிது ஒய்வு எடுத்தாலும் அது அவளுக்கு பாதகமாக அமையும். வெற்றி பெறும் பெண்களின் துன்பத்தை அளக்கும் கருவி ஒன்று இருந்தால் அது மலைக்க வைக்கும் அளவை காட்டும்.
வெற்றி கண்ட பெண்களுக்கு நிறைய கஷடங்கள் இருக்கும் போதும் அவர்கள் வெற்றி பெறுவதன் காரணம் - அவர்கள் ரிஸ்க்கான வேலைகளை செய்யத் தயங்குவதில்லை. தடைகளைத் தாண்டி ஓடி அவர்களுடைய வாழ்க்கையை மற்றும் அவர்களை சுவாராசியமானவர்களாக ஆக்கிக் கொள்கிறார்கள். ஒவ்வொரு பெண்ணும் தனித்துவம் கொண்டவள், அவள் தன்னுடைய குடும்ப வாழ்விலும், தொழிலிலும் பல வேலைகளை செய்கின்றாள். அவள் பாராட்டுக்கும், போற்றுதலுக்கும் உரியவள். அவளை பாதுகாக்க வேண்டும். நீங்கள் பெண்ணாக இருப்பதற்காக பெருமைப்படுகிறீர்களா?



Click it and Unblock the Notifications











