For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகில் உள்ள மிகவும் விசித்திரமான சில மனிதர்கள்!

நம் உலகில் நாம் நினைத்துப் பார்க்க முடியாத வகையில் சில திறமைகளைக் கொண்ட மக்கள் உள்ளனர். அவர்களது திறமைக் குறித்துக் கூறினால், அது நம்பமுடியாதவாறு இருக்கும்.

|

Recommended Video

Top 10 bizarre people in the world

உலகில் பிறந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு குணாதிசயங்களுடனும், ஒவ்வொரு தனித்திறமைக் கொண்டவர்களாக இருப்பர். அதில் சிலர் மற்றவர்களது கவனம் தங்கள் மீது விழுமாறு, அதிசயக்கத்தக்க திறமையைக் கொண்டிருப்பர். அப்படி நம் உலகில் நாம் நினைத்துப் பார்க்க முடியாத வகையில் சில திறமைகளைக் கொண்ட மக்கள் உள்ளனர். அவர்களைப் பற்றி சிலருக்கு தெரிந்திருந்தாலும், பலருக்கு தெரிந்திருக்காது. ஒருவேளை அவர்களது திறமைக் குறித்துக் கூறினால், அது நம்பமுடியாதவாறு இருக்கும்.

MOST READ: விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் தரம் அதிகரிக்க வேண்டுமா? அப்ப தினமும் இத ஒன்னு சாப்பிடுங்க...

இந்த கட்டுரையில் நாம் பார்க்கப் போவது விசித்திரமான சில மனிதர்களைப் பற்றி தான். இவர்களைப் பார்த்தால், காமிக் புத்தகத்தில் உள்ளவர்கள் போன்று தான் நமக்குத் தோன்றும். இப்போது உலகில் உள்ள விசித்திரமான மனிதர்கள் குறித்து காண்போம். வாருங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நீளமான முடி கொண்ட மனிதர்

நீளமான முடி கொண்ட மனிதர்

வியட்நாமிய மூலிகை மருத்துவர் டிரான் வான் ஹே உலகின் மிக நீளமான கூந்தலைக் கொண்டவர் என்று அறியப்பட்டார். ஆனால் அவரது தலைமுடி ஒருபோதும் அதிகாரப்பூர்வமாக அளவிடப்படவில்லை அல்லது கின்னஸ் புத்தகத்தால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றாலும் பிரபலமானார். இவர் 50 ஆண்டுகளாக தனது தலைமுடியை வெட்டியது இல்லையாம்மற்றும் இதுவரை ஓரிரு முறை மட்டுமே தலைமுடியை நீரில் அலசியுள்ளாராம்.

மிகப்பெரிய வாய்

மிகப்பெரிய வாய்

அங்கோலாவைச் சேர்ந்த எளிய மனிதர் தான் பிரான்சிஸ்கோ டொமிங்கோ ஜோவாகிம். ஆனால் இவர் ஒரு அசாதாரண திறமையைக் கொண்டவர். ஒட்டுமொத்த உலகிலேயே மிகப்பெரிய வாய்க்கான உலக சாதனை படைத்தவர் இவர். இவரது வாயின் அளவு 17 சென்டிமீட்டர். இவரது வாயில் ஒரு முழு சோடா கேனையே வைக்க முடியும் என்றால் பாருங்கள்.

டாட்டூ பெண்மணி

டாட்டூ பெண்மணி

2011 ஆம் ஆண்டு ஜூன் 29 ஆம் தேதி, சிந்தியா மார்ட்டெல் என்னும் 53 வயது பெண் தனது வீட்டில் இறந்து கிடந்தார். இந்த பெண்மணியின் உடலில் 97 சதவீதம் பச்சை குத்தப்பட்டிருந்தது. இது இறந்த பின்பும், இவரை வரலாற்றில் இடம் பெறச் செய்தது.

அதிகாரப்பூர்வமாக இறந்த நபர்

அதிகாரப்பூர்வமாக இறந்த நபர்

லால் பிஹாரா என்பவர் ஒரு இந்திய விவசாயி மற்றும் சமூக ஆர்வலர். இவர் 1975 முதல் 1994 வரை அதிகாரப்பூர்வமாக இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த மனிதர் தான் உயிருடன் இருப்பதை நிரூபிப்பதற்காக மொத்தம் 19 ஆண்டுகள் இந்திய அரசாங்கத்துடன் போராடினார். என்ன கொடுமை பாத்தீங்களா...

ஐஸ் மேன்

ஐஸ் மேன்

விம் ஹோஃப் என்பவர் டச்சு உலக சாதனை படைத்தவர், சாகசக்காரர் மற்றும் டேர்டெவில் ஆவார். இவர் உறைபனி வெப்பநிலையை விட குறைவான வெப்பநிலையை தாங்கும் திறனுக்காக ஐஸ் மேன் என்ற புனைப்பெயரைப் பெற்றார். ஒருமுறை இவர் ஒரு மணிநேரம் 52 நிமிடங்கள் ஐஸ்கட்டிகள் நிரப்பப்பட்ட கண்ணாடி கொள்கலனில் மூழ்கி இருந்தார்.

மிஸ்டர் “ஈட்-இட்-ஆல்”

மிஸ்டர் “ஈட்-இட்-ஆல்”

மைக்கேல் லோடிட்டோ என்னும் உண்மையான பெயரைக் கொண்டவர் தான் மிஸ்டர் "ஈட்-இட்-ஆல்". இவர் ஒரு முறை 9 டன் உலோகத்தை சாப்பிட்டுள்ளார். இளமைப் பருவத்தில், லோடிட்டோ பிகா என்னும் மனநல கோளாறால் அவஸ்தைப்பட்டார். இந்த கோளாறால் எந்த ஒரு உணவு அல்லாத பொருளையும், கையில் கிடைக்கும் எதையும் சாப்பிடுவாராம். இவர் தினமும் மேலும் மேலும் ஆபத்தான பொருட்களை சாப்பிட்டு தவறாமல் பரிசோதிப்பாராம்.

வயிற்று சகோதரன்

வயிற்று சகோதரன்

இந்தியாவின் நாக்பூரைச் சேர்ந்த 36 வயதான சஞ்சு பகத், தனது பெரிதாக்கப்பட்ட வயிற்றைப் பற்றி எப்போதும் யோசித்துக் கொண்டே இருந்தார். 1999 ஆம் ஆண்டில், அப்பெண் தனது இரட்டை சகோதரனை வயிற்றுக்குள் சுமந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதுவும் வயிற்றிற்குள் சிறுவன் பாதி உருவான உடலைத் தவிர வேறில்லை.

தூக்கமில்லாத மனிதன்

தூக்கமில்லாத மனிதன்

மத்திய குவாங் நாம் மாகாணத்தைச் சேர்ந்தவர் தான் தாய் என்கோக். இவர் தூங்க முடியாத இயலாமையால் மிகவும் பிரபலமானவர். 1973 இல் இவருக்கு காய்ச்சல் வந்ததில் இருந்து, சுமார் நான்கு தசாப்தங்களுக்கு மேல் தூங்கவில்லையாம். இந்த ஒரு பிரச்சனையாலேயே இவர் மக்களிடையே மிகவும் பிரபலமாகிவிட்டார்.

17 தனித்துவமான ஆளுமைகள்

17 தனித்துவமான ஆளுமைகள்

கரேன் ஓவர்ஹில்லின் நிலை இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பல ஆளுமைக் கோளாறுகளின் மிகவும் தீவிரமான ஒன்றாகும். 1999 ஆம் ஆண்டு, அந்த இளம் பெண் ஒற்றைப்படை இடங்களில் தன்னைக் கண்டுபிடிக்கத் தொடங்கினாள். அப்போது தான் அவள் மனதில் பதினேழு தனித்துவமான ஆளுமைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

கார் பிரியர்

கார் பிரியர்

வாஷிங்டனைச் சேர்ந்த எட்வர்ட் ஸ்மித் தன்னை ஒரு உண்மையான "கார் காதலன்" என்று அழைக்கிறார். அவர் 1,000-த்திற்கும் மேற்பட்ட கார்களுடன் உடலுறவு கொண்டதாக கூறுகிறார். மேலும் 1967 ஆம் ஆண்டின் வோக்ஸ்வாகன் பீட்டில் காருக்கு வெண்ணிலா என்று பெயர் வைத்து, அதனுடன் வாழ்ந்து வருகிறார். இந்த காரை அவரது காதலி என்றும் கூறுகிறார் எட்வர்ட்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

10 Of The Most Bizarre People In The World

Here are ten of the most bizarre people to have ever walked the face of the Earth. Take a look...
Desktop Bottom Promotion