Latest Updates
-
ஆந்திரா பூண்டு மிளகு கார குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும் -
எலான் மஸ்க் அவருடைய பணத்தை பிரித்துக் கொடுத்தால் பூமியில் உள்ள ஒவ்வொருவருக்கும் எவ்வளவு கிடைக்கும் தெரியுமா? -
டிபன் சென்டர் டிபன் சாம்பார் ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. அது என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மோசமான நாளாக இருக்குமாம் -
குரு-சூரியனால் உருவாகியுள்ள சிவ ராஜயோகம்: இந்த 4 ராசிகளின் கஷ்டம் தீர்ந்து செல்வம் பெருகும்! -
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
காளான் பட்டாணி மசாலா ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
மழைக்காலத்திலும் அழகா இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
இந்த 3 ராசிக்காரர்களால் கோபத்தை கட்டுப்படுத்தவே முடியாதாம் - இவங்க கோபம் பேரழிவை ஏற்படுத்துமாம் -
கஃபே ஸ்டைல் பன் மஸ்கா - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைங்களுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க..
உங்க ஜாதகத்தில் சனி தோஷம் இருக்கா? இதை மட்டும் செய்யுங்கள் போதும்..!
sani dhosam pariharam: ஜோதிடத்தில், சனி பகவான் ஒரு கொடூரமான கிரகமாக கருதப்படுகிறார். யாருடைய ஜாதகத்தில் சனி தோஷம் இருக்கிறதோ, அவர் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். சனி மெதுவாக நகரும் கிரகம், எனவே ஒரு நபர் சனியின் அசுப விளைவுகளால் தொந்தரவு செய்யப்பட்டால், அவர் நீண்ட காலமாக அதன் கோபத்தை தாங்க வேண்டியிருக்கும். அதேசமயம் சனிபகவான் நீதியின் கடவுள் என்றும் அழைக்கப்படுகிறார்.
ஒருவனுக்கு அவனது செயல்களின் பலனை சனீஸ்வரன் அப்படியே கொடுப்பார். ஒரு நபர் தவறான செயல்களைச் செய்தால், சனி பகவான் அதே பலனையே அவருக்கு கொடுக்கிறார். நல்ல செயல்கள செய்தால் அதன் பலனும் அவரையே சேரும் படி சனி பகவான் செய்வார். அதனாலேயே அவர் நீதியின் கடவுள் என்றழைக்கப்படுகிறார்... ஜாதகத்தில் சனிதோஷம் இருந்தால் பல வகையான அறிகுறிகள் தென்படத் தொடங்கும் என்று ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப்படுகிறது. அந்த அறிகுறிகள் மற்றும் சனியின் தாக்கங்களைத் தவிர்ப்பதற்கான வழிகளும் பரிகாரங்களும் என்னவென்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்லலாம் வாங்க..

1. சனி தோஷம் உள்ளவர்கள் சிவபெருமானையும், அனுமனையும் வழிபட்டால் நல்ல பலன்கள் கிடைக்கும். சனிக்கிழமைகளில் இந்தக் கோயில்களுக்குச் சென்று சனி தோஷங்கள் நீங்க வழிபாடு செய்ய வேண்டும். சன்னி எந்திரத்தை வைத்து பூஜை செய்தால் சனிபகவானின் பிடியிலிருந்து தப்பிக்க அதிக வாய்ப்புள்ளது.
2. சனிக்கிழமை காலை முதல் விரதம் இருந்து, பின்னர் சனி பகவான் கோயிலுக்குச் சென்று நல்லெண்ணெய்யில் தீபம் ஏற்றினால் நன்மைகள் கூடும்.
3.சுத்தமான பசும்பாலால் லிங்க சொரூபியான சிவபெருமானுக்கு அபிஷேகம், வில்வம் அர்ச்சனை போன்றவற்றைச் செய்தால் நன்மை கிடைக்கும்.
4. சனிக்கிழமையில் தானம் செய்தால் சனி பகவானுக்கு மிகவும் பிடிக்கும். இல்லாதவர்களுக்கும் இயலாதவர்களுக்கும் பொன்,பொருள், உணவு என தங்களால் இயன்றதை மற்றவர்களுக்கு தானம் செய்தால் சனியின் பிடியிலிருந்து தப்பிக்கலாம். குறிப்பாக உளுந்து, நல்லெண்ணெய், கருப்பு நிற ஆடைகள் போன்றவற்றை தானம் செய்தால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்கிரது ஜோதிடம்..
5. மற்றவர்களின் பசியைப் போக்கினால் சனிபகவானின் அருள் முழுவதுமாக கிடைக்கும். திருநள்ளாறு சென்று அங்கிருக்கும் நள தீர்த்தத்தில் நீராடி சனிபகவானை வணங்கி விட்டு மற்றவர்களுக்கு அன்னதானம் செய்தல் நல்ல பலன்கள் கிடைக்கும் என்பார்கள்
6. எதை செய்தாலும் நேர்மையாகச் செய்தால் சனிபகவானுக்கு மிகவும் பிடிக்கும். நேர்மை தவறாது மற்றவர்களுக்கு உதவிடும் குணத்தோடு இருப்பவர்களுக்குச் சனிபகவான் அள்ளிக் கொடுப்பார் என்பது ஐதீகம்.
சனீஸ்வர தோஷம் விலக மந்திரம்:
"ஓம் கிலி சிவ" என்ற மந்திரத்தை 128 முறை 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் சொல்லி வர சனி தோஷம் விலகும்.
சனி பகவானுக்குரிய சனிக்கிழமையில் இந்த ஸ்தோத்திரத்தை சொல்லி பூஜை செய்து வணங்குபவர்களை சனீஸ்வரன் துன்பப்படுத்த மாட்டார் என்பது நம்பிக்கை.. அப்படி இந்த பூஜையை செய்யும் முன்பு அதிகாலையில் எழுந்து நல்லெண்ணெய் தேய்த்து குளித்து பின் பக்தியுடன் இந்த ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்பவர்கள் சகல விதமான துன்பங்களில் இருந்தும் விடுபடுவார்கள். நீண்ட ஆயுளுடன், நல்ல புத்தியுடன், சகல தோஷங்களில் இருந்து விடுபட்டு வாழ்வார்கள்.
சனி தோஷம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரங்கள்
1. சனியின் அசுப பலன்களைத் தவிர்க்க, முதலில் ஒவ்வொரு சனிக்கிழமையும் சனிபகவானை கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும்.. மாதம் மாதம் வரும் சிவராத்திரி அன்று மாலை சனி பகவானை வழிபடுவது சனி தோஷங்கள் குறையும். இந்நாளில் சிவன் கோவிலில் சிவ சாலிசா பாடுவது சிறப்பு. அதுவும் மகா சிவராத்திரி என்றால் இன்னும் சிறப்பு.
2. சனி தோஷத்தினால் துன்பங்கள் அதிகமாகும் நேரங்களில், காலையில் எழுந்து நீராடி, சனி பகவானை 108 முறை வலம் வந்து , கருப்பு உளுந்து தானியம் தானம் செய்ய வேண்டும்..
3. காக்கைக்கு தினந்தோறும் அன்னம் இடுவதும், உளுந்து தானியத்தை தானம் செய்வதும், கோவில்களில் நவக்கிரகங்களை 9 முறை வலம் வந்து வணங்குவதும், நீலக் கல் அணிந்த மோதிரத்தை அணிந்து கொள்வதும், சனிக் கிழமை அதிகாலை வேளைகளில் சுந்தர காண்டம் பாராயணம் செய்வதாலும் ஏழரைச் சனியின் தோஷம் குறையும் என்கிறது ஜோதிடம்.



Click it and Unblock the Notifications