Latest Updates
-
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம்
மகர ராசிக்கு செல்லும் சூரியனால் இந்த 5 ராசிக்காரங்க பெரிய ஆபத்துகளை சந்திக்கப் போறாங்களாம்...!
ஜனவரி 15-ம் தேதி சூரியன் விருச்சிக ராசியிலிருந்து விலகி மகர ராசிக்குள் நுழைகிறார். இது தைப்பொங்கல் அல்லது மகர சங்கராந்தி எனப்படும். இந்நாளில் புனித நதிகளில் நீராடுவதும், அன்னதானம் செய்வதும் சிறப்பு வாய்ந்தது. இந்த நேரத்தில் ஜோதிடத்தின் கூற்றுப்படி, கிரகங்களின் ராஜாவான சூரியன் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு ராசியை மாற்றுகிறார்.
இந்த மகர சங்கராந்தியன்று ஐந்து சுப தற்செயல்களும் நடைபெறுகின்றன. மகர சங்கராந்தியுடன் வியாதிபாத யுகம், சுக்ல பக்ஷம், சதுர்த்தி திதி, சதயம் நட்சத்திரம் மற்றும் திங்கட்கிழமை மங்களகரமான நாள் ஆகியவை ஒன்றாக வருகிறது.

சூரியன் மகர ராசியில் நுழைவது 12 ராசிகளையும் பாதிக்கிறது. மகர சங்கராந்தியில் சூரியனின் மாற்றம் 12 ராசிகளுக்கும் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
மேஷ ராசியினருக்கு அதிகாரம் நன்மை தரும். குழந்தைகளால் சில பிரச்சனைகள் வரலாம். வயிற்றில் தொந்தரவுகள் வரலாம். பரிகாரமாக ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்வது உங்களுக்கு பலன் தரும்.
ரிஷபம்
ரிஷபம் ராசிக்கு சூரியன் அதிர்ஷ்ட ஸ்தானத்தில் இருப்பார். நிலம், வாகனம், வீடு வாங்கும் வாய்ப்பு உண்டாகும். வயிற்றில் ஏற்படும் அசௌகரியம் தாயின் உடல்நிலையில் சற்று கவலையை ஏற்படுத்தும். தோஷ நிவர்த்தியாக சூரியனை தினமும் அர்ச்சனை செய்வது பலனைத் தரும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் ஒரு மாதத்திற்கு உணர்ச்சிவசப்படாமல் இருப்பார்கள், அதனால் நீங்கள் சற்று அமைதியின்மையை உணரலாம். இந்த சூழலில் சூரிய பகவானை வழிபட வேண்டும்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் சொத்து சம்பந்தமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உங்கள் கூட்டுத்தொழிலில் சில சிக்கல்கள் ஏற்படலாம். அப்படிப்பட்டவர்கள் பரிகாரமாக கீரையை தானம் செய்ய வேண்டும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் இந்த நேரத்தில் கடன், நோய் மற்றும் பகையால் பாதிக்கப்படலாம். பரிகாரமாக ஆதித்ய ஹிருதய் ஸ்தோத்ரத்தை பாராயணம் செய்ய வேண்டும். இந்த காலகட்டம் உங்களுக்கு மிகவும் சோதனையான காலமாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் மிகவும் சோதனையான காலகட்டமாக இருக்கும். கன்னி ராசி ஊழியர்களுக்கு இடமாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அப்படிப்பட்டவர்கள் பரிகாரமாக தினமும் சூரியனுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். இது அவர்களுக்கு நன்மை பயக்கும்.
துலாம்
துலாம் ராசிகாரர்களுக்கு பொங்கலன்று ஏற்படும் பெயர்ச்சியால் 4 ஆம் வீட்டிற்கு சூரியன் நகர்வதால் சமூகத்தில் கௌரவத்தை அடைவார்கள். இருப்பினும் இந்த சூழ்நிலையில் நீங்கள் வழக்கமான வேலையில் சில மன அழுத்தத்தை சந்திக்க நேரிடும்.
விருச்சிகம்
இந்த சூரிய பெயர்ச்சி விருச்சிக ராசிக்காரர்கள் வாழ்க்கையில் ஏற்ற, இறக்கங்களை ஏற்படுத்தும். உங்கள் பணியிடத்தில் உங்கள் முதலாளியுடன் பாதகமான சூழ்நிலைகள் இருக்கலாம். ஆனால் விருச்சிக ராசிக்காரர்கள் பொருளாதாரரீதியாக நல்ல நிலையில் இருப்பார்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இந்த பெயர்ச்சியின் போது அதிகபட்ச பலன்களைப் பெறுவார்கள். அத்தகையவர்களுக்கு இந்த நேரம் பொருளாதாரரீதியாக பயனுள்ளதாக இருக்கும். வாழ்க்கையில் ஆன்மீக முயற்சிகள் கூடும். இந்த மாதம் முழுவதும் இந்த ராசிக்காரர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் இந்த நேரத்தில் கொஞ்சம் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இந்த சூழ்நிலையில் அவர்கள் தலைவலி மற்றும் கண் பிரச்சனைகள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
கும்பம்
உறவுகளை சற்று கவனத்துடன் கையாள வேண்டும். நண்பர்களாக இருந்தாலும் சரி, வாழ்க்கை துணையாக இருந்தாலும் சரி, உங்கள் உறவுகளை கவனித்துக் கொள்ளுங்கள். சிலருக்கு முதுகு வலி ஏற்படலாம். பரிகாரமாக ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்வது நன்மை தரும்.
மீனம்
வேலை அல்லது முதலீட்டிற்காக பெரிய கடன்கள் வாங்கப்படலாம். உங்கள் தொழில் துறையில் விரிவாக்கம் செய்ய திட்டமிடலாம். அது உங்களுக்கு மிகவும் பயன் தரும்.



Click it and Unblock the Notifications


