Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
அக்டோபர் மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த ராசிக்காரர்களுக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப் போகுது...
Planet Transits In October 2023: செப்டம்பர் மாதத்தின் இறுதியில் உள்ளோம். புதிய அக்டோபர் மாதத்தில் நுழையவுள்ளோம். ஜோதிடத்தின் படி, அக்டோபர் மாதமானது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஏனெனில் அக்டோபர் மாதத்தில் பல முக்கிய கிரகங்கள் தங்கள் ராசியை மாற்றவுள்ளன.
அதில் அக்டோபர் 01 ஆம் தேதி புதன் கன்னி ராசிக்கு செல்கிறார். அதற்கு அடுத்த நாளே, அதாவது அக்டோபர் 02 ஆம் தேதி சுக்கிரன் சூரியனின் சிம்ம ராசிக்கு செல்கிறார். பின் அக்டோபர் 03 ஆம் தேதி செவ்வாய் சுக்கிரனின் துலாம் ராசிக்கு செல்கிறார்.

அதற்கு அடுத்தப்படியாக அக்டோபர் 18 ஆம் தேதி சூரியன் துலாம் ராசிக்கு செல்கிறார். பின் அக்டோபர் 19 ஆம் தேதி புதன் துலாம் ராசிக்கு செல்கிறார். மாத இறுதியில், அதாவது அக்டோபர் 30 ஆம் தேதி நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேது பெயர்ச்சி நிகழவுள்ளன. இப்பெயர்ச்சியின் போது ராகு மீன ராசிக்கும், கேது கன்னி ராசிக்கும் செல்கின்றனர்.
இப்படி 6 முக்கிய கிரகங்கள் தங்கள் ராசியை மாற்றுவதால் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். இப்போது அக்டோபர் மாதத்தில் நிகழும் கிரக பெயர்ச்சிகளால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் அக்டோபர் மாதத்தில் நிகழும் கிரக பெயர்ச்சிகளால் ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு முன்னேற்றத்தைக் காண்பார்கள். இந்த ராசிக்காரர்களின் முக்கியமான வேலைகள் முடிக்கப்படும். இந்த மாதத்தில் நிறைய பணம் கையில் சேரும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். குடும்ப சூழல் இனிமையாக இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாத கிரக பெயர்ச்சிகளால் உங்கள் முயற்சிக்கு ஏற்ற பலன் சற்று தாமதமாகவே கிடைக்கும். இம்மாதத்தில் பெற்றோர் அல்லது நெருங்கிய உறவினர்களிடம் இருந்து பணத்தைப் பெற வாய்ப்புள்ளது. இம்மாதத்தில் செலவுகள் சற்று அதிகமாகவே இருக்கும். இருந்தாலும், கவனமாக பட்ஜெட் போட்டு செலவழிக்க அறிவுறுத்தப்படுகிறது.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதத்தில் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவு கிடைக்கும். நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்ட வேலைகள் இம்மாதத்தில் வெற்றிகரமாக முடிக்கப்படும். ஆயினும், மாத இறுதியில் சில விஷயங்களால் கவலைப்படுவீர்கள். உங்களின் கோபமும் அதிகரிக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் அக்டோபர் மாதத்தில் தங்கள் வேலையில் சில தடைகளை சந்திக்க நேரிடும். இருந்தாலும், முயற்சியால் வெற்றி பெறுவார்கள். செலவுகள் சற்று அதிகமாக இருக்கும். உங்களை சுற்றியிருப்பவர்கள் உங்களை வீழ்த்த முயற்சிப்பார்கள் என்பதால் சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. எதிர்பாராத செலவுகள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. உங்கள் வேலையிலும் தாமதம் ஏற்படக்கூடும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் அக்டோபர் மாத கிரக பெயர்ச்சிகளால் தங்களின் சில முக்கியமான வேலைகளில் தடைகளை சந்திக்க நேரிடும். ஆனால் இறுதியில் வெற்றி கிடைக்கும். இம்மாதத்தில் பல நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். பணிபுரிபவர்கள் தங்கள் வேலையில் நிறைய சிரமங்களை சந்திக்க நேரிடும். நிதி நன்மைகளும் மிதமானதாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதம் சிறப்பாக இருக்கும். சிலருக்கு நல்ல நிதி நன்மைகளும், வாழ்வில் முன்னேற்றமும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில் கிரகங்களில் நிலைகளால் முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால் கேதுவின் ராசி மாற்றத்தால் அந்த வாய்ப்புக்களை சரியாக பயன்படுத்த முடியாமல் போக வாய்ப்புள்ளது. அதுவும் இந்த ராசியை சேர்ந்த பெண்கள் தங்கள் குடும்பத்தில் அமைதியை கொண்டு வர கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.
துலாம்
அக்டோபர் மாத கிரக பெயர்ச்சிகளால் துலாம் ராசிக்காரர்களின் குடும்பத்தில் சில சுப காரியங்கள் நடக்க வாய்ப்புள்ளது. வியாபாரம் செய்பவர்கள் சமூகத்தில் உயர் நிலையில் உள்ளவர்களுடன் நட்பு கிடைப்பதன் மூலம், முன்னேற்றத்திற்கான வாய்புக்களைப் பெறுவார்கள். மேலும் இந்த மாதத்தில் ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.
விருச்சிகம்
அக்டோபர் மாதத்தில் நிகழும் ராகு, கேது பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்கள் தேவையில்லாத விஷயங்களில் நேரத்தை வீணடிக்க நேரிடும். மேலும் ஆரோக்கியமும் மோசமாக பாதிக்கப்படும். அதுவும் வயிற்று வலி, கண் பிரச்சனைகளால் அதிகம் அவதிப்படக்கூடும். அக்டோபரில் நிகழும் சூரியனின் ராசி மாற்றத்திற்கு பின் கடும்பத்தில் தேவையில்லாத செலவுகள் அதிகரிக்கும்.
தனுசு
தனுசு ராசியைச் சேர்ந்தவர்கள் அக்டோபர் மாதத்தில் நிகழும் கிரக மாற்றங்களால் தங்களின் வேலையில் மிகவும் பிஸியாக இருப்பார்கள். சிக்கிய பணம் இம்மாதத்தில் கைக்கு வந்து சேரும். குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் நிலைத்திருக்கும். எதிர்பாராத பண வரவைப் பெறக்கூடும். ஆனால் நெருங்கிய உறவினர்களுடன் ஏதேனும் ஒரு காரணத்தால் வாக்குவாதங்களில் ஈடுபட வாய்ப்புள்ளது.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதத்தில் ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வீட்டில் சுப காரியங்கள் நடக்கும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் தங்கள் வேலையை வேகமாக முடிப்பார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் இம்மாதத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதத்தில் நல்ல வெற்றி கிடைக்கும். அரசு வேலை செய்பவர்களின் மரியாதை அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நண்பர்களின் முழு உதவியுடன், நல்ல லாபமும் கிடைக்கும். இம்மாதத்தில் ஆடம்பரத்திற்காக நிறைய பணத்தை செலவிடுவீர்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதத்தில் நிகழும் கிரக பெயர்ச்சிகளால் செலவுகள் சற்று அதிகமாக இருக்கும். ஆரோக்கிய விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். இம்மாதத்தில் எப்போதும் ஒருவித டென்சனும், மனதில் குழப்பமும் இருக்கும். தொழிலில் முன்னேற்றத்திற்காக புதிய திட்டங்களை உருவாக்க நிறைய நேரத்தை செலவிடுவீர்கள். பணிபுரிபவர்களுக்கு இம்மாதத்தில் தேவையில்லாத மன அழுத்தம் அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











