Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
Pitru Paksha 2023: முன்னோர்கள் உங்கள் மீது கோபமாக இருப்பதை உணர்த்தும் சில முக்கிய அறிகுறிகள்!
Pitru Paksha 2023: இந்து மதத்தில் இறந்த முன்னோர்களை வழிபடும் காலம் தான் பித்ரு பட்ச காலம். இந்த பித்ரு பட்சமானது ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தில் வரும் பௌர்ணமிக்கு மறுநாள் தொடங்கி, 14 நாட்கள் வரை நீடித்திருக்கும். இந்த ஆண்டு பித்ரு பட்ச காலமானது செப்டம்பர் 30 ஆம் தேதி தொடங்கி, அக்டோபர் 14 ஆம் தேதி முடிவடைகிறது. இந்த காலத்தில் இறந்த முன்னோர்கள் பூலோகத்திற்கு வருகை தருவது வழக்கம்.
மேலும் இந்த பித்ரு பட்ச காலத்தில் முன்னோர்களை மகிழ்விக்கவும், அவர்களது ஆத்மா சாந்தி அடையவும் சில சடங்குகள் மேற்கொள்ளப்படுவதுண்டு. ஒவ்வொரு ஆண்டும் பித்ரு பட்ச நாட்களில் முன்னோர்களின் மறைவுக்கு சடங்குகளை சரியாக பின்பற்றுவதன் மூலம், நம் முன்னோர்கள் மகிழ்ச்சி அடைந்து, ஆசீர்வாதத்தை வழங்கி, வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகளைப் போக்குவது என்பது நம்பிக்கை.

ஆனால் இறந்த நம் முன்னோர்கள் சந்தோஷமாக இல்லாமல், நம்மீது கோபமாக இருந்தால், அது ஒருசில அறிகுறிகளை வெளிக்காட்டும். இப்போது ஜோதிடத்தின் படி, முன்னோர்கள் கோபமாக இருந்தால் எந்த மாதிரியான அறிகுறிகள் தென்படும் என்பதைக் காண்போம். இந்நிலையில் அவர்களின் கோபத்தை தணித்து, அவர்களை மகிழ்விக்கும் பணியில் உடனே ஈடுபட வேண்டும். இப்போது அந்த அறிகுறிகளைக் காண்போம்.
1. கனவில் முன்னோர்களைக் காண்பது
பித்ரு பட்ச காலத்தில், ஒருவரது கனவில் இறந்த முன்னோர்களை சிலர் காணலாம். அப்படி கனவில் வரும் முன்னோர்கள் சந்தோஷமாக இருந்தால், அவர்கள் உங்களால் மகிழ்ச்சியடைகிறார்கள் என்று அர்த்தம். அதுவே உங்கள் முன்னோர்கள் அழுவதைக் கண்டால், அவர்கள் சந்தோஷமாக இல்லை மற்றும் உங்கள் மீது வருத்தத்தில் உள்ளார் என்று அர்த்தம். இம்மாதிரியான சூழ்நிலையில் உடனே முன்னோர்களுக்கு பித்ரு தோஷ பூஜைகளை செய்து, அவர்களுக்கு பிடித்த பொருட்களை ஏழை எளியோருக்கு தானம் செய்து, முன்னோர்களிடம் மன்னிப்பு கேளுங்கள்.
2. பண இழப்பு
நீங்கள் நீண்ட நாட்களாக ஒன்றில் முதலீடு செய்து, அதில் நல்ல லாபத்தைக் கண்டிருக்கலாம். ஆனால் பித்ரு பட்ச காலத்தில் திடீரென்று நீங்கள் தேவையில்லாமல் பண இழப்பை சந்தித்தால், உங்கள் முன்னோர்கள் உங்களால் மகிழ்ச்சியடையவில்லை மற்றும் உங்கள் மீது கோபத்தில் உள்ளார் என்று அர்த்தம்.
3. வீட்டில் இருந்து வித்தியாசமான வாசனை
நாம் குடியிருக்கும் வீட்டின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொருவிதமான வாசனை இருக்கும். ஆனால் நீங்கள் இருக்கும் வீட்டில் திடீரென்று வித்தியாசமான அல்லது விசித்திரமான வாசனை வரத் தொடங்கினால், உங்கள் முன்னோர்கள் உங்களைச் சுற்றி இருப்பதோடு, கோபத்தில் உள்ளார்கள் என்று அர்த்தம். இம்மாதிரியான சூழ்நிலையில் முன்னோர்களிடம் மன்னிப்பு கேட்கும் வகையில் பித்ரு தோஷ பூஜைகளை செய்ய வேண்டும்.
4. உணவில் முடியை காண்பது
உண்ணும் உணவில் முடியை எடுப்பது என்பது சாதாரணமான விஷயம். ஆனால் தொடர்ச்சியாக இம்மாதிரி உணவில் இருந்து முடியை எடுத்தால், அது முன்னோர்கள் அதிப்தியாக இருப்பதைக் குறிக்கிறது. இது தவிர, இது முன்னோர்கள் பசியுடன் இருப்பதையும் குறிக்கிறது. இத்தகைய சூழ்நிலையில் வீட்டில் உங்கள் முன்னோருக்கு உணவுகளை சமைத்து படைத்து வழிபடுங்கள்.
5. வேலையில் தடை
நீங்கள் உங்கள் அலுவலகத்தில் ஒரு திட்டத்தில் நீண்ட காலமாக வேலை செய்தும், எவ்வளவு கடினமாக உழைத்தும், எதிர்பார்த்த வெற்றியைப் பெறாமல் இருந்தால், நீங்கள் பித்ரு தோஷத்தால் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்புக்கள் உள்ளன. மேலும் உங்கள் வேலையில் ஒன்றன் பின் ஒன்றாக ஏதேனும் தடைகளை சந்தித்தால், அதுவும் உங்கள் முன்னோர்கள் உங்களால் மகிழ்ச்சியடையவில்லை என்பதைக் குறிக்கிறது. இந்த பித்ரு தோஷத்தைப் போக்க, வீட்டில் பித்ரு தோஷ பூஜைகளை செய்யுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications