Latest Updates
-
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும் -
வெயிலால் கருமையாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த முலாம் பழ ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
வெயிலின் தாக்கத்தை குறைக்க வாஸ்து செடிகளுக்கு மவுசு: மணி பிளாண்ட், அரேகா பாம் வாங்க மக்கள் ஆர்வம் -
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா? -
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க..
இறந்தவர்களின் இந்த பொருட்களை ஒருபோதும் வெச்சுருக்காதீங்க.. இல்லன்னா முன்னோர்களின் கோபத்துக்கு ஆளாவீங்க...
Pitru Paksha 2023: பித்ரு பட்ச காலம் என்பது முன்னோர்களை வழிபட ஏற்ற காலமாகும். இந்த காலகட்டத்தில் இறந்த முன்னோர்கள் எமனின் அனுமதி பெற்று பூலோகத்திற்கு வருவதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. மேலும் இக்காலத்தில் இறந்தவர்களுக்கு கொடுக்கப்படும் தர்ப்பணம், பிண்டம் போன்றவற்றால் இறந்தவர்கள் முக்தி அடைவதாக நம்பப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தில் வரும் பௌர்ணமிக்கு அடுத்த நாள் தொடங்கி, அமாவாசை வரையிலான 14 நாட்கள் பித்ரு பட்ச காலமாகும். இதில் புரட்டாசி அமாவாசை மகாளய அமாவாசை என்று அழிக்கப்டுகிறது. இந்த ஆண்டு பித்ரு பட்சம் செப்டம்பர் 30 ஆம் தேதி தொடங்கி, அக்டோபர் 14 ஆம் தேதி முடிவடைகிறது.

ஒருவர் இறந்த பிறகு, அவரது நினைவாக ஒருசில பொருட்களை வைத்துக் கொள்ளும் பழக்கம் பலரிடம் இருக்கும். ஆனால் இறந்தவர்களின் ஒருசில பொருட்களை பாதுகாப்புடன் வைத்துக் கொள்வது என்பது வாழ்வில் பல பிரச்சனைகளை சந்திக்க வைக்கும்.
ஜோதிடத்தின் படி, இறந்த ஒருவரது பொருட்களை பயன்படுத்துவதால், முன்னோர்களின் கோபத்திற்கு ஆளாக நேரிவதோடு, பித்ரு தோஷத்தை அனுபவிக்கக்கூடும். இப்போது இறந்தவர்களின் எந்த பொருட்களையெல்லம் பயன்படுத்தக்கூடாது என்பதைக் காண்போம்.
இறந்தவர்களின் ஆடைகள்
ஜோதிடத்தின் படி, இறந்தவர்களின் ஆடைகளை அந்த வீட்டில் உள்ளோர் பயன்படுத்தவோ அல்லது அணியவோ கூடாது. அப்படி பயன்படுத்தினால், அதன் விளைவாக பித்ரு தோஷத்திற்கு ஆளாக நேரிடும். வேண்டுமானால், அவர்களின் ஆடைகளை தானமாக மற்றவர்களுக்கு வழங்கலாம். இம்மாதிரியான செயல் இறந்தவர்களின் ஆன்மாவிற்கு சாந்தி அளிக்கும்.
இறந்தவர்களின் நகைகள்
பொதுவாக பரம்பரை பரம்பரையாக நகைகளைப் பயன்படுத்தும் பழக்கம் பலரது வீடுகளில் இருக்கும். ஆனால் ஜோதிடத்தின் படி, இறந்த முன்னோர்களின் நகைகள் பயன்படுத்துவது நல்லதல்ல. அப்படி பயன்படுத்தினால், அது பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வேண்டுமானால், அந்த நகைகளை அப்படியே பயன்படுத்தாமல், அவற்றைப் பயன்படுத்தி புதிய நகைகளை தயாரித்து பயன்படுத்தலாம்.
இறந்தவர்களின் கடிகாரம்
சிலர் இறந்த தங்கள் முன்னோர்களின் கடிகாரத்தை சேகரித்து பத்திரமாக வைத்துக் கொள்வார்கள். ஆனால் அப்படி இறந்தவர்களின் கடிகாரத்தை பயன்படுத்துவது ஜோதிடத்தின் படி மங்களகரமானதாக கருதப்படுவதில்லை. ஒருவேளை அப்படி பயன்படுத்தினால், அதன் விளைவாக பித்ரு தோஷத்தால் பாதிக்கப்பட்டு, மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும். வேண்டுமானால், அதற்கு பதிலாக, அந்த கடிகாரத்தை தானமாகவோ அல்லது மண்ணில் புதைக்கவோ செய்யலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications