Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
Pitru Paksha 2023: நம் முன்னோர்களுக்காக செய்யும் பித்ரு பட்சம் எப்படி தோன்றியது என்று தெரியுமா?
Pitru Paksha 2023: பித்ரு பட்சம் என்பது நம் முன்னோர்களுக்காக நாம் செய்யும் சடங்கு முறையாகும். இந்த பொருள் சார்ந்த உலகத்தை விட்டு வெளியேறிய முன்னோர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 16 ஆம் நாள் இந்த சடங்கு கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் உணவு மற்றும் தானம் வழங்கப்படுகிறது.
இந்த நாளில் செய்யப்படும் அனைத்து சடங்குகளும் பிரார்த்தனைகளும் சொர்க்க வாசலுக்கு புறப்பட்ட நம் மூதாதையர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் கொண்டாடப்படுகிறது. அவர்கள் எங்கிருந்தாலும் நல்வாழ்வுடன் இருக்க வேண்டும் என செய்யப்படுகிறது. பல ஆண்டுகளாக பின்பற்றப்படும் இந்த பித்ரு பட்சம் எப்படி தோன்றியது என்பது பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம்.

பித்ரு பட்சம் வரலாறு
பண்டைய நாட்டுப் புறக் கதைகளின் படி, மகாபாரதத்தைச் சேர்ந்த குந்தியின் முதல் மகனான கர்ணன் இறந்தபோது, அவர் சொர்க்கத்திற்குச் சென்றார். அவர் அங்கு சென்றதும் தங்கம் போன்ற விலையுயர்ந்த நகைகள், ஆடைகள் போன்றவை கொடுக்கப்பட்டன. ஆனால் கர்ணனோ எனக்கு உணவு மற்றும் குடிக்க தண்ணீர் தான் வேண்டும் என்று இந்திரனிடம் கேட்டார்.
அதற்கு இந்திரன் நீ வாழ்நாள் முழுவதும் மக்களுக்கு விலையுயர்ந்த நகைகள் மற்றும் ஆபரணங்களை மட்டுமே மக்களுக்கு தானமாக வழங்கியுள்ளார். ஒருவருக்கும் நீ அன்னதானம் வழங்கவில்லை என்று கர்ணனிடம் இந்திரன் கூறினார். அதே மாதிரி உன் முன்னோர்களுக்கும் நீ உணவு மற்றும் தண்ணீர் தர்ப்பணம் செய்யவில்லை என்று கூறினார்.
அதற்கு கர்ணன் நான் சூரியனின் ஒளியால் பிறந்தவன். நான் பிறந்ததிலிருந்து எனக்கு என் முன்னோர்களை பற்றி எதுவும் தெரியாது. நான் என்ன செய்வேன் எப்படி தர்ப்பணம் செய்வேன் என்று இந்திரனிடம் கூறினார். உடனே இந்திரன் சரி கர்ணா நீ 15 நாட்கள் பூமிக்கு சென்று உன் முன்னோர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் தானம் செய்து, உன் கடனை முடித்து விட்டு வா என்று அனுப்பி வைத்தார்.
அப்படி தொடங்கியது தான் இந்த பித்ரு பட்சம். அப்போதிருந்து இந்த 15 நாட்கள் பித்ரு பட்சமாக கருதப்படுகிறது. தானத்தில் சிறந்தது அன்னதானம். ஒரு மனிதன் தன் வாழ்நாளில் யாருக்காவது அல்லது அவரது முன்னோர்களுக்காவது உணவு அளிக்க வேண்டும்.
பித்ரு பட்சம் பற்றி கருட புராணம் கூறுவது
கருட புராணத்தில் கூறியுள்ள படி, மரணத்தின் முதல் வருடத்தில் பித்ரு பட்சம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பண்டைய நூல்களின் படி, ஆன்மா இறந்த 14 வது நாளில் ஆன்மாவானது எமபுரிக்கு பயணிக்கத் தொடங்கி 17 நாட்களில் அந்த இடத்தை அடைகின்றனர். அவர்கள் மீண்டும் 11 மாதங்கள் பயணம் செய்து எமதர்ம ராஜாவின் நீதிமன்றத்தை அடைகின்றனர்.
நம் முன்னோர்களின் ஆன்மா எமதர்ம ராஜாவின் நீதிமன்றத்தை அடையும் வரை அதற்கு உணவு, தண்ணீர் மற்றும் உடைகள் போன்றவை கிடைக்காது. எனவே பித்ரு பட்சத்தின் போது நாம் நம் முன்னோர்களுக்கு அளிக்கும் தானம் தர்ப்பணம் மற்றும் பிரசாதங்கள் போன்றவை ஆத்மாக்களை அடைந்து அவர்களின் பசி மற்றும் தாகத்தை தீர்க்கின்றன.
பித்ரு பட்சம் எவ்வாறு செய்யப்படுகிறது?
பித்ரு பட்சம் ஆண்களால் செய்யப்படுகிறது. பெரும்பாலும் குடும்பத்தில் மூத்த நபர் இந்த பித்ரு பட்சத்தை செய்ய வேண்டும். ஒரு பண்டிதரை வீட்டிற்கு அழைத்து ஹவனம் செய்யப்படுகிறது. இந்த ஹவன பூஜைக்கு பிறகு இறந்த ஆத்மாக்களுக்கு அரிசி வழங்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து பண்டிதர்களுக்கு உணவு வழங்கப்படும்.
பண்டிதர் மற்றும் ஏழை மக்களுக்கு தட்சணை மற்றும் தானம் வழங்கப்படுகிறது. இதற்காக தயாரிக்கப்படும் உணவின் ஒரு பகுதியானது காகங்கள் மற்றும் பசுக்களுக்கு வழங்கப்படுகிறது. இறந்தவரின் தேதி அல்லது திதி யாருக்கும் தெரியாவிட்டால் கடைசி நாளான அமாவாசை அன்று இந்த பித்ரு பட்சம் சடங்குகள் செய்யப்படுகின்றன.
பிண்ட தர்ப்பணம் என்றால் என்ன?
பிண்ட தர்ப்பணம் என்பது ஒவ்வொரு குழந்தையும் பெற்றோருக்கு செய்ய வேண்டிய முக்கியமான விஷயமாகும். அரிசி மற்றும் கோதுமை மாவால் செய்யப்பட்ட உருண்டையானது நம்மை விட்டு பிரிந்த ஆன்மாக்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த உருண்டையைத்தான் பிண்டம் என்கின்றனர். பிண்டம் செய்த பிறகு நம் முன்னோர்கள் மோட்சத்தை அடைகிறார்கள்.
ஏன் காகத்திற்கு உணவு வைக்கப்படுகிறது?
காகத்திற்கு உணவு அளிப்பது நம் முன்னோர்களுக்கு உணவு அளிப்பதற்கு சமம். மற்றொரு விதமாக பார்த்தால் காகங்கள் 'பித்ரி லோகம்' அதாவது இறந்தவர்களின் உலகத்தில் இருந்து வரும் தூதர்கள் போன்றவை. ஐந்து பூதங்களில் ஒன்றான காற்றுடன் தொடர்புடையவையாக அவை உள்ளன.



Click it and Unblock the Notifications