Latest Updates
-
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க
உங்க பெயரில் 'SH' என்ற எழுத்துக்கள் உள்ளதா? அப்ப மிஸ் பண்ணாம இத படிங்க.. ஷாக் ஆவீங்க..
Personality Traits: ஒருவரது குணாதிசயங்களை வெளிப்படுத்தும் பல சுவாரஸ்யமான விஷயங்கள் உள்ளன. அதில் ஒருவரது ராசியைக் கொண்டு, ஒருவர் பிறந்த தேதியைக் கொண்டு எப்படி அந்நபரின் குணாதிசயங்கள் கணித்து கூறப்படுகிறதோ, ஒருவரது பெயரில் உள்ள குறிப்பிட்ட எழுத்துக்களும் அந்நபரின் குணாதிசயங்களை வெளிப்படுத்தும் என்பது தெரியுமா?
அதுவும் ஒருவரது பெயரின் முதல் எழுத்து எப்படி ஒருவரது ஆளுமையை வெளிப்படுத்துமோ, அதேப் போல் ஒருவரது பெயரில் உள்ள குறிப்பிட்ட எழுத்துக்கள் அந்நபரை மிகச்சிறந்தவராக மற்றும் அதிர்ஷ்டசாலியாக்குகிறது. குறிப்பாக சிலரது பெயரில் 'SH' என்ற எழுத்து இருக்கும். இப்படி இந்த எழுத்துக்களைக் கொண்டவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகளாக கூறப்படுகிறது. அதுவும் இந்த எழுத்துக்களை பெயரில் கொண்டிருந்தால், அந்நபர் வாழ்வில் நிச்சயம் பணக்காரராவார் என்றும் கூறப்படுகிறது.

ஜோதிடத்தின் படி, பெயரின் ஒவ்வொரு எழுத்தும் நம் வாழ்க்கையில் வெவ்வேறு வகையான விளைவை கொண்டுள்ளது. அப்படி ஒருவரது வாழ்க்கையில் முன்னேற்றத்தையும், புகழையும் பெற வைக்கும் சில ஜோடி எழுத்துக்கள் தான் 'SH'. ஜோதிடத்தில் இது மிகச்சிறந்த எழுத்துக்களாக கருதப்படுகிறது. இப்போது பெயரில் 'SH' என்ற எழுத்துக்களை கொண்டவர்களின் குணாதிசயங்கள் குறித்து காண்போம்.
கடின உழைப்பாளிகள்
பெயரில் 'SH' என்ற எழுத்தைக் கொண்டவர்கள் கடின உழைப்பாளிகள். விடாமுயற்சியுடன் செய்பவர்கள், எவ்வளவு தடைகள் வந்தாலும், அவற்றை தகர்த்து, இலக்கை அடைவார்கள். இப்படி கடினமாக உழைப்பதால், வாழ்க்கையில் நல்ல நிலையை அடைந்து, சமூகத்தில் மதிப்பு, மரியாதையுடன், நல்ல பெயருடன் வாழ்வார்கள்.
கவர்ச்சிகரமானவர்கள்
பெயரில் 'SH' என்ற எழுத்தைக் கொண்டவர்கள் இயற்கையாகவே கவர்ச்சிகரமான அழகுடன், ஆளுமையையும் கொண்டிருப்பார்கள். இவர்கள் தங்கள் அழகாலோ, சிரிப்பாலோ, பேச்சாலோ அல்லது பார்வையாலோ மற்றவர்களை வசீகரிக்கும் ஆற்றலைக் கொண்டிருப்பார்கள்.
பணம்
பெயரில் 'SH' என்ற எழுத்தைக் கொண்டவர்கள் பணத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். இவர்களுக்கு பணத்தின் மதிப்பு நன்கு தெரியும். பணத்தை சம்பாதிப்பதற்கு நன்கு கடினமாக உழைப்பார்கள். அந்த கடின உழைப்புக்கு ஏற்ப அவர்களுக்கும் பணம் நிச்சயம் கிடைக்கும்.
தலைமைத்துவ குணம்
பெயரில் 'SH' என்ற எழுத்தைக் கொண்டவர்கள் சிறந்த தலைமைத்துவ குணத்தைக் கொண்டிருப்பார்கள். ஒரு குழுவை திறம்பட தலைமைத் தாங்குவதில் வல்லவர்கள். எந்த ஒரு இடத்திலும் அவர்கள் முன்னால் இருக்கவே விரும்புவார்கள். இப்படியான குணத்தால், இவர்கள் அரசியலில் இருந்தால், மிகச்சிறந்த அரசியல் தலைவர்களாக திகழ்வார்கள்.
ரொமான்டிக்கானவர்
பெயரில் 'SH' என்ற எழுத்தைக் கொண்டவர்கள் மிகவும் ரொமான்டிக்கான நபர். இவர்கள் தனது காதலை தனது வாழ்க்கைத் துணையிடம் மிகவும் சிறப்பாக வெளிப்படுத்துவார்கள். துணையின் மீது அளவுக்கு அதிகமான பிரியம் கொண்டவர்கள். காதல் விஷயத்தில் இவர்களை யாராலும் மிஞ்ச முடியாது. அந்த அளவில் வல்லவர்களாக இருப்பார்கள்.
நேர்மையானவர்
பெயரில் 'SH' என்ற எழுத்தைக் கொண்டவர்கள் தனது வாழ்க்கைத் துணை, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு மிகவும் விசுவாசமானவர்கள் மற்றும் நேர்மையானவர்களாக இருப்பார்கள். இதனால் இவர்களைச் சுற்றியுள்ள அனைவரும் தங்களின் ரகசியத்தை இவர்களிடம் பகிர்ந்து கொள்வார்கள். அந்த அளவில் நம்பிக்கையானவர்களாக இருப்பார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications