Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
33000 சிற்பங்கள் முதல் 3 மார்பக அம்மன் சிலை வரை - மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள்!
Madurai Meenakshi Amman Temple: ஆந்திர பிரதேசத்தின் துணை முதல்வரும், ஜனசேனா கட்சியின் தலைவருமான திரு. பவன் கல்யாண் அவர்கள் தனது சனாதன தர்ம பயணத்தின் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் உள்ள உலக புகழ்பெற்ற மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு பிராத்தனை செய்ய பிப்ரவரி 12 ஆம் தேதி வருகிறார்.
இவர் இந்தியாவில் சனாதன தர்மத்தை காப்பாற்றுவதற்கு எந்த எல்லைக்கும் செல்வதாகவும், இதற்காக நாட்டில் உள்ள இந்து கோவில்களுக்கு செல்வதாகவும் வெளிப்படையாக அறித்துள்ளார். அந்த வகையில் இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருகை தருகிறார்.

மதுரையில் அமைந்துள்ள ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலானது உலகளவில் புகழ்பெற்ற மிகவும் சிறப்புமிக்க கோவிலாகும். இந்த கோவிலை தென்னிந்திய தாஜ்மஹால் என்றும் அழைப்பர். இந்த கோவில் அதன் வரலாற்று முக்கியத்துவம் மற்றும் அதன் பிரமாண்டமான கட்டிடக்கலை ஆகிய இரண்டிலும் பிரமாண்டமானது. இந்தியாவில் உள்ள கோவில்களிலேயே அதிகமானோர் வருகை தரும் கோவில்களுள் இந்த மீனாட்சி அம்மன் கோவிலும் ஒன்றாகும்.
இதுவரை நீங்கள் இந்த கோவிலுக்கு சென்றதில்லை என்றால் வாழ்நாளில் ஒருமுறையாவது சென்று பார்வையிடுங்கள். நீங்கள் இந்த கோவிலுக்கு செல்லும் ஆர்வத்தில் இருந்தால், இந்த கோயில் பற்றி உங்களுக்கு தெரியாத சில சுவாரஸ்யமான உண்மைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
1. ஆயிரம் கால் மண்டபம்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆயிரம் கால் மண்டபம் என்னும் ஆயிரம் தூண்களைக் கொண்ட மண்டபம் உள்ளது. இதன் சிறப்பு என்னவெனில், இந்த மண்டபம் ஒரே பாறையில் கட்டப்பட்டது . இந்த கோயிலின் தூண்களில் ஏராளமான பழங்கால ஓவியங்களைக் காணலாம். இது கோயிலின் மிகப்பெரிய மண்டபமாகும். இதில் சிவகாமி மற்றும் நடராஜரின் பிரமாண்டமான சிலைகள் உள்ளன.
2. கோபுரங்கள்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 12 கோபுரங்கள் உள்ளன. அதில் 4 பெரிய கோபுரங்கள் 4 திசைகளிலும் வைக்கப்பட்டுள்ளன. அதே சமயம் சன்னதியின் நுழைவாயிலாக நான்கு உள் கோபுரங்கள் உள்ளன. இந்த கோபுரங்கள் நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டு, ஒவ்வொரு 12 வருடங்களுக்கும் சுத்தம் செய்யப்பட்டு புனரமைக்கப்படுகின்றன.
3. தங்க தாமரை குளம்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பொற்தாமரை குளம் அல்லது தங்க தாமரை குளம் உள்ளது. இந்த குளம் அந்த கோவிலில் சிறப்பு வாய்ந்ததாகவும் தனித்துவமானதாகவும் இருப்பதற்கு காரணம், அந்த குளத்தில் வளரும் தாமரை தங்க நிறத்தில் இருப்பதாகும்.
4. 33000 சிற்பங்கள்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் மற்றொரு சுவாஸ்யமான அம்சம், இந்த கோவிலில் சுமார் 33,000 சிற்பங்கள் உள்ளன. அதுவும் வெள்ளி பலிபீடத்தின் மீது கட்டப்பட்டுள்ள நடராஜரின் பிரம்மாண்டமான சிற்பம் மிகவும் பிரபலமானது.
5. மீனாட்சி அம்மன் சிலை
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் பிரதான தெய்வம் பார்வதி தேவியின் ஒரு அவதாரமான மீனாட்சி அம்மன் ஆகும். இந்த மீனாட்சி அம்மனின் சிலை மரகத கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. இந்த அம்மன் சிலைக்கு 3 மார்பகங்கள் இருக்கும். ஏனெனில் மீனாட்சி அம்மன் மூன்று மார்பகங்களுடன் பிறந்ததாகவும், அவள் வாழ்க்கையில் சரியான மனிதனை சந்தித்தவுடன் மறைந்துவிடும் என்றும் நம்பப்படுகிறது. மீனாட்சி அம்மன் சிவபெருமானின் ஒரு வடிவமான சுந்தரேஸ்வரரை சந்தித்த போது மூன்றாவது மார்பகம் உண்மையில் மறைந்துவிட்டதாக புராணங்கள் கூறுகின்றன.



Click it and Unblock the Notifications