Paris Olympics 2024: இதுவரை நடந்த ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள தடை செய்யப்பட்ட நாடுகள்!

Paris Olympics 2024: தற்போது பாரிஸில் கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் கோலாகலமாக நடந்து கொண்டிருக்கின்றன. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் இந்த ஒலிம்பிக் போட்டிகள் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு நாட்டில் நடைபெறும். அந்த வகையில் பாரிஸில் ஒலிம்பிக் போட்டியானது மூன்றாவது முறையாக இந்த ஆண்டு நடைபெற்று வருகிறது.

ஒலிம்பிக் என்பது அனைத்து நாடுகளையும் விளையாட்டு மூலம் ஒன்றிணைக்கும் ஒரு நிகழ்வாகும். இந்த ஆண்டு நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் சுமார் 200-க்கும் அதிகமான நாடுகள் பங்கேற்றுள்ளன. ஆனால் சில நாடுகள் இந்த ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளன.

Paris Olympics 2024 List Of Countries That Are Banned From Olympics Over The Years

ஏனெனில் அனைத்து நாடுகளும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒன்றிணையும் போது, பிரச்சனைகள் நிறைந்த நாடுகளும் கலந்து கொண்டால், பின் அது பெரிய பிரச்சனையை உண்டாக்கிவிடும் என்பதற்காக, சில காரணங்களால் ஒருசில நாடுகள் கலந்து கொள்ள ஆரம்ப காலத்தில் இருந்தே தடைவிதிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கூட 2 நாடுகள் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள தடைவிதிக்கப்பட்டுள்ளன. இப்போது எந்த ஆண்டில் எந்த நாடுகளுக்கு ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள தடைவிதிக்கப்பட்டன என்பதைக் காண்போம்.

1920 மற்றும் 1948 ஒலிம்பிக்

1920 ஆம் ஆண்டில் பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப்பில் நடந்த விளையாட்டு போட்டியில் 5 நாடுகள் கலந்து கொள்ள தடைவிதிக்கப்பட்டன. அந்த நாடுகளாவன ஆஸ்திரியா, ஹங்கேரி, ஜெர்மனி, துருக்கி மற்றும் பல்கேரியா ஆகும். இந்த 5 நாடுகளுக்கும் தடை விதிக்க காரணம், அப்போது முதலாம் உலகப் போர் நடந்தது. அதேப் போல் 1948 ஆம் ஆண்டில் லண்டனில் நடந்த ஒலிம்பிக்கில் இரண்டாம் உலகப் போரின் காரணமாக ஜப்பான் மற்றும் ஜெர்மனி நாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டன.

1960 ஒலிம்பிக்

1960 ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் புதிய எழுச்சி பெறும் விளையாட்டுக்களை ஏற்பாடு செய்ததன் காரணமாக, இந்தோனேசியா விளையாட்டு வீரர்களை ஐஓசி தடை செய்தது.

1964 ஒலிம்பிக்

1966 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி டோக்கியோவில் நடைபெற்றது. அந்த போட்டியில் நிறவெறி அமைப்பு காரணமாக தென்னாப்பிரிக்காவிற்கு தடை விதிக்கப்பட்டது. அதுவும் இந்த தடையானது கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் நீடித்தன.

1972 ஒலிம்பிக்

1972 ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் இனவெறிக் கொள்கை மற்றும் வெள்ளையர்களுக்காக பிரத்யேகமாக ஒரு அரசாங்கமாக உருவானதன் காரணமாக ரோடீசியாவிற்கு தடை விதிக்கப்பட்டன இந்த ரோடீசியா தான் தற்போதைய ஜிம்பாப்வே ஆகும்.

2000 ஒலிம்பிக்

2000 ஆம் ஆண்டு சிட்னியில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றன. அப்போது ஆப்கானிஸ்தான் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. ஏனெனில் பெண்களுக்கு எதிரான தாலிபான் கால பாகுபாடு மற்றும் அனைத்து வகையான விளையாட்டுகளுக்கும் தடை விதிக்கப்பட்டது.

2010 ஒலிம்பிக்

2010 ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக்கில் குவைத் ஒலிம்பிக் கமிட்டியில் அரசின் தலையீடு காரணமாக இடைநீக்கம் செய்யப்பட்டது. இது 2015 ஆம் ஆண்டு வரை நீடித்திருந்தது. இருப்பினும் 2012 இல் இந்த இடைநீக்கம் திரும்பப் பெறப்பட்டது. அதன் பின் குவைத் நாட்டு வீரர்கள் ஒலிம்பிக் கொடியின் கீழ் போட்டியில் கலந்து கொண்டனர்.

2016 ஒலிம்பிக்

2016 ரியோ ஒலிம்பிக்கில் இருந்து ஏராளமான ரஷ்ய போட்டியாளர்கள் போதைப்பொருள் மீறல் காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இந்த கட்டுப்பாடு 2020 டோக்கியோ ஒலிம்பிக்கிலும் விரிவுபடுத்தப்பட்டது. அப்போது நடந்த ஒலிம்பிக்கில் ரஷ்ய போட்டியாளர்கள் ரஷ்ய கொடிக்கு பதிலாக, ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டி கொடியின் கீழ் போட்டியிட்டனர்.

2024 ஒலிம்பிக்

2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் உக்ரைனுடன் மோதலில் ஈடுபட்டதன் காரணமாக ரஷ்யா மற்றும் பெலாரஸிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு ரஷ்யா உக்ரைனை ஆக்ரமிக்க போர் மேற்கொண்ட போது ஒலிம்பிக் ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டது. அமைதியை வளர்ப்பதற்காக ஒலிம்பிக்கும் ஐநா ஆதரவுடன் இதை தீர்மானித்தது.

Story first published: Thursday, August 1, 2024, 16:50 [IST]
Desktop Bottom Promotion