Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்க வேட்டை ஆரம்பமானது.. வெண்கலம் வென்ற மனு பாக்கர் குறித்த சுவாரஸ்யங்கள்..!
பாரிஸ் ஒலிம்பிக் தொடங்கி 2 நாட்கள் ஆன நிலையில், மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் தகுதி சுற்றுப் போட்டியில் இந்தியாவை சேர்ந்த மனுபார்க்கர் 3 ஆவது இடம் பிடித்து இறுதி சுற்றுக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார்.
33ஆவது ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த 26ஆம் தேதி தொடங்கியது.. இதில் பல்வேறு நாடுகளில் இருந்து முன்னணி வீரர்கள் விளையாடும் நிலையில், இந்தியாவிலிருந்து 117 வீரர்கள் தகுதி பெற்று விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.. இதில் இந்தியாவிக்கான முதல் பதக்கத்தை பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் மனு பாக்கர் வெண்கலப் பதக்கம் வென்றார்..

வெண்கலம் வென்ற மனு பாக்கர் குறித்த சுவாரஸ்யங்கள்
1. மனு பாக்கர் விளையாட்டு வரலாற்றில் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் துப்பாக்கி சுடும் வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார்.
2. 2012 ஆம் ஆண்டுக்குப் பிறகு துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் முதல் ஒலிம்பிக் பதக்கம் இதுவாகும்..
3. மனு பாக்கர் ஷூட்-ஆஃப் இல் கொரியாவின் கிம் யெஜியிடம் 0.1 என்ற மிக குறுகிய வித்தியாசத்தில்தான் தோல்வியடைந்தார்.
4. மனு பாக்கர் தனது பதக்கத்தை வென்று சாதனை படைத்த பிறகு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், இறுதிப் போட்டி முழுவதும் பகவத் கீதை, இதிகாச ஹிந்து வேதத்தின் வார்த்தைகள் என் நினைவில் இருந்ததாக கூறினார்.
5. மேலும் இது குறித்து அவர் கூறியதாவது, “நான் கீதையை அதிகம் படிப்பேன். நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்களோ அதைச் செய்யுங்கள். உங்கள் விதியின் முடிவை உங்களால் கட்டுப்படுத்த முடியும். கீதையில், பகவான் கிருஷ்ணர் அர்ஜுனிடம், "கர்மாவின் விளைவுகளில் கவனம் செலுத்தாமல், கர்மாவில் கவனம் செலுத்துங்கள்" என்று கூறியதுதான்எனமந்தில் ஓடிக்கொண்டே இருந்தது” என்றார்.
6. அதனைத் தொடர்ந்து பேசியவர், “டோக்கியோ ஒலிம்பிக் பிறகு நான் மிகவும் ஏமாற்றமடைந்தேன். அந்த தருணத்தை என்னால் கடக்க முடியவே இல்லை.. அதற்கு எனக்கு நீண்ட நேரம் பிடித்தது. இருப்பினும், நான் மிக வலுவாக திரும்பி வந்தேன். இப்போது என்ன இருக்கிறது என்பதுதான் முக்கியம். கடந்த காலம் கடந்த காலத்திலேயே இருக்கட்டும்."என்றார்.
7. அதுமட்டுமல்லாமல் டோக்யோ ஒலிம்பிக் போட்டியின்போது, துப்பாக்கியில் பிரச்சனை ஏற்பட்டதால் பதக்க வாய்ப்பை இழந்த மனு பாக்கர், அந்த சம்பவம் குறித்து மிகவும் வேதையடைந்தார்.. ஜூரிக்கு துப்பாக்கியின் பிரச்சனை பற்றி தெரியப்படுத்தப்பட்டது, ஆனால் முழு துப்பாக்கிக்கு பதிலாக, அவர்கள் குறைபாடுள்ள பகுதியை மாற்ற அனுமதித்தனர். கட்டாய இடைவேளையின் போது ஆறு முக்கியமான நிமிடங்களை இழந்தார். இதுவே தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்ததாக தெரிவித்தார்..
8. ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதலில் 12 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா பதக்கம் வென்றுள்ளது. கடைசியாக 2012 லண்டன் ஒலிம்பிக்கில் ககன் நரங், விஜய் ஆகியோர் பதக்கம் வென்றிருந்தார். ஒலிம்பிக் வரலாற்றில் , துப்பாக்கிச் சுடுதலில் இந்தியா இதுவரை 5 பதக்கங்களை வென்றுள்ளது. பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற மனு பாக்கருக்கு, வரலாற்று பதக்கம் எனக் குறிப்பிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
9. ஹரியானாவில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற மனு பாக்கரின் குடும்பத்தில் அனைவரும் இனிப்பு வழங்கி சந்தோஷத்தை வெளிப்படுத்தினர்.. மனுவின் தந்தை ராம் கிஷன் பாக்கர் இது குரித்து கூறுகையில், "முழு நாடும் மனுவைப் பற்றி பெருமிதம் கொள்கிறது, அவளது இரண்டு நிகழ்வுகள் இன்னும் மீதமுள்ளன, அவள் அதில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். மனுவுக்கு அரசாங்கத்திடமிருந்து நிறைய ஆதரவு கிடைத்தது. நாட்டு மக்களின் ஆசீர்வாதத்தால்தான் அவளால் இதை சாதிக்க முடிந்தது. இது அவளுடைய மிகப்பெரிய சாதனையாகும்" என்றார்.
10. 16 வயதில் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் ஒரே நாளில் இரண்டு தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார் மனு பாக்கர். இந்தச் சாதனையைப் படைத்த இளம் வீராங்கனையும் அவர் ஒருவரே ஆவார்.
பள்ளி படிக்கும் காலத்தில் இருந்தே துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்துக் கொண்டு வருகிறார் மனு பாக்கர்..



Click it and Unblock the Notifications
