Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
பாரிஸ் ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட 7 மாத கர்ப்பிணிப் பெண் - அதுவும் கால்இறுதி வரை போயிருக்காருன்னா பாருங்க..
Paris Olympics 2024: தற்போது பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இந்த ஒலிம்பிக் போட்டில் பங்கேற்பதற்காக பல வருடங்கள் கடுமையான பயிற்சிகளை பல நாட்டு விளையாட்டு வீரர்கள் எடுத்திருப்பார்கள். ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வது என்பது அவ்வளவு எளிதானது அல்ல மற்றும் அனைவருக்கும் இந்த வாய்ப்பு கிடைத்துவிடாது. சொல்லப்போனால் விளையாட்டு வீரர்கள் ஒவ்வொருவரின் கனவும் இந்த ஒலிம்பிக் போட்டியில் ஒருமுறையாவது கலந்து கொள்ள வேண்டும் என்பதாகவே இருக்கும்.
இந்நிலையில் 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் ஒரு 7 மாத கர்ப்பிணிப் பெண் கலந்து கொண்டார் என்பது தெரியுமா? எகிப்து நாட்டைச் சேர்ந்த இந்த பெண் வாள்வீச்சு போட்டியில் கலந்து கொண்டுள்ளார். இப்படி ஒரு கர்ப்பிணிப் பெண் மிகவும் ஆபத்தான வாள்வீச்சு போட்டியில் கலந்திருப்பது ஒட்டுமொத்த உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

26 வயதான நடா ஹபீஸ் எகிப்து நாட்டின் சார்பாக வாள்வீச்சு போட்டியில் கலந்து கொண்டுள்ளார். இந்த விளையாட்டின் முதல் சுற்றில் நடா ஹபீஸ் அமெரிக்க வீராங்கனையை 15-க்கு 13 என்று எடுத்து வீழ்த்து, கால் இறுதிக்கு தகுதி பெற்றார். அடுத்ததாக அவர் தென்கொரியா நாட்டின் வீராங்கனையுடன் போட்டியிட்டு தோல்வியைத் தழுவி, போட்டியில் இருந்து வெளியேறினார்.
போட்டியில் இருந்து வெளியே வந்ததும் நடா ஹபீஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அது என்னவெனில் " இந்த போட்டியைப் பார்க்கும் நீங்கள் போட்டியின் மேடையில் இருவர் சண்டை போடுவதை மட்டுமே கண்டிருப்பீர்கள். ஆனால் உண்மையில் அந்த மேடையில் மூன்று பேர் இருந்தோம். ஒன்று நாள், இரண்டாவது என்னுடைய போட்டியாளர், மூன்றாவது இந்த உலகில் இன்னும் காலடி எடுத்து வைக்காத எனது செல்ல குழந்தை. இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக நானும் எனது குழந்தையும் பல சவால்களை சந்தித்துள்ளோம். அது உடல் ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் இருக்கலாம். கர்ப்பமாக இருக்கும் போது பலவற்றை கடந்து வர வேண்டும். ஆனால் வாழ்க்கையையும், விளையாட்டையும் சமநிலையில் பராமரிப்பது என்பது கடினம் தான். இருப்பினும், அது மதிப்புக்குரியது.
2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் 16 ஆது சுற்றில் எனது இடத்தைப் பெற்றதற்காக பெருமை அடைகிறேன் என்பதைச் சொல்லவே இந்த பதிவை எழுதியுள்ளேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.
நடா ஹபீஸ் 2014-ல் எகிப்து தேசிய சீனியர் பெண்கள் வாள்வீச்சு அணியில் சேர்ந்தார். அடுத்த ஆண்டு, அவர் எகிப்திய சீனியர் மகளிர் தேசிய போட்டியில் தனது முதல் வெற்றியை சுவை கண்டார். அல்ஜீரியாவில் நடந்த ஆப்ரிக்க மண்டல தகுதி சுற்று போட்டிகள் மூலம் 2016 ரியோ ஒலிம்பிக்கில் கலந்து கொண்டார். அதன் பின் 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்து கொண்டார். இது அவரது மூன்றாவது ஒலிம்பிக் என்பது குறிப்பிடத்தக்கது. பெண்களால் முடியாதது எதுவும் இல்லை என்பதை இவர் நிரூபித்து, பெண்களுக்கு பெருமை சேர்த்துள்ளார்.



Click it and Unblock the Notifications