Latest Updates
-
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா?
2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் இந்தியாவைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவைகள்!
Paris Olympics 2024: பொதுவாக ஒலிம்பிக் போட்டிகளானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும். கடைசியாக 2020 ஆம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டிகள் டோக்கியோவில் நடைபெற்றன. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டின் ஒலிம்பிக் போட்டியானது பாரிஸில் நடைபெறவுள்ளது. இந்த விளையாட்டு விழாவானது ஜூலை 26 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்த போட்டியில் உலகளவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்வார்கள்.
இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியாவில் இருந்து ஏற்கனவே வீரர்கள் கலந்து கொள்ள சென்றுவிட்டனர். உலகின் மிகவும் பெரிய விளையாட்டு விழாவைக் காண, மற்ற நாடுகளில் இருந்து விளையாட்டு ரசிகர்கள் பாரிஸில் குவிந்து வருகிறார்கள். இப்போது பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளவிருக்கும் இந்தியா குறித்து பலரது மனதில் இருக்கும் சில கேள்விகளுக்கான விடையைக் காண்போம்.

பாரிஸ் ஒலிம்பிக் எப்போது தொடங்கி எப்போது முடியும்?
பாரிஸ் ஒலிம்பிக் விழா ஜூலை 26 ஆம் தேதி இரவு 11.30 மணியளவில் தொடங்கும். ஆனால் இந்தியாவானது அதிகாரப்பூர்வமாக ஜூலை 25 ஆம் தேதி வில்வித்தையுடன் தொடங்கும். மேலும் இந்த ஒலிம்பிக் ஆகஸ்ட் 11 ஆம் தேதி நிறைவடையும்.
பாரிஸ் ஒலிம்பிக் தொடக்க விழாவில் இந்தியாவின் கொடியை கொண்டு செல்பவர் யார்?
இந்திய டேபிள் டென்னிஸ் ஜாம்பவான் ஷரத் கமலும், இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற சிந்துவும் தான் பாரிஸ் ஒலிம்பிக் தொடக்க விழாவில் இந்தியாவின் கொடியை ஏந்துவார்கள். இந்திய வீரர்களுக்கான உடையை ஃபேஷன் டிசைனர் தருண் தஹிலியானி வடிவமைத்தார். அதேப் போல் காலணிகள் மற்றும் பயண உபகரணங்களை பூமா வழங்கியது.
பாரிஸ் ஒலிம்பிக்கில் எத்தனை நாடுகள் கலந்து கொள்கின்றன?
பாரிஸ் ஒலிம்பிக்கில் 206 நாடுகள் கலந்து கொள்கின்றன. இதில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு காரணமாக, ரஷ்யா ற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் தேசிய அடையாளமின்றி தனிநபராக போட்டியிடுவார்கள்.
ஒலிம்பிக் போட்டிகள் எந்த வேளைகளில் நடக்கும்?
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளானது காலை 11 மணியளவில் தொடங்கி, மறுநாள் காலை வரை தொடரும். இதில் பெரும்பாலான விளைவாட்டு போட்டிகள் மாலை வேளைகளிலேயே நடைபெறும்.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் எத்தனை இந்திய வீரர்கள் கலந்து கொள்கிறார்கள்?
பாரிஸ் ஒலிம்பிக்கில் சுமார் 117 இந்தய விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். அதுவும் இவர்கள் 18 விளையாட்டு பிரிவுகளில் விளையாடவுள்ளனர். அதில் 70 ஆண்கள் மற்றும 47 பெண்கள் குறிப்பிடத்தக்கவை. இந்த குழுவில் 140 துணை ஊழியர்களும், அதிகாரிகளும் கலந்து கொள்கின்றனர். அதில் 29 தடகள வீரர்களும், 21 பேர் துப்பாக்கிச் சூடு மற்றும் 19 பேர் ஹாக்கியும் விளையாடவுள்ளனர். இந்த ஆண்டு தடகள வீரர்கள் அதிகமாக உள்ளனர்.
தமிழ்நாட்டில் இருந்து எத்தனை பேர் பாரிஸ் ஒலிம்பிக்கில் கலந்து கொள்கிறார்கள்?
பாரிஸ் ஒலிம்பிக்கில் தமிழ்நாட்டில் இருந்து பிரவீல் சித்திரவேல் மற்றும் ஜெஸ்வின் ஆல்ட்ரின் என்னும் இரண்டு தடகள வீரர்கள் கலந்து கொள்ள போகிறார்கள். பிவி சிந்துவைப் போன்று இவர்கள் இந்த ஆண்டு ஒரு பதக்கத்தையாவது இந்தியாவிற்கு வாங்கித் தருவார்கள் என்று நம்புவோம்.
இந்தியாவிற்காக பதக்கத்தை யாரெல்லாம் வாங்கி தர வாய்ப்புள்ளது?
2020-ல் டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா, மீராபாய் சானு மற்றும் பிவி சிந்து போன்றோர் இந்த ஆண்டும் வாங்கி தருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அதுவும் நீரஜ் சோப்ரா கூடுதலாக ஒரு பதக்கத்தை பெற முயற்சிப்பார். அதே வேளையல் பிவி சிந்து தனது மூன்றாவது ஒலிம்பிக் பதக்கத்தை வென்று சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபடுவார். இதுப்போன்று மல்யுத்தம், குத்துச்சண்டை, ஹாககி, துப்பாக்கிச் சுடுதல் போன்றவற்றில் உள்ள வீரர்களும் வாங்கி தர வாய்ப்புள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய வீரர்களுக்கு யார் மிகப்பெரிய போட்டியாளராக இருப்பார்கள்?
ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்வது என்பது எளிதல்ல. அதுவும் பதக்கத்தைப் பெறுவது என்பது மிகவும் கடினம். ஏனெனில் இந்த பதக்கத்தைப் பெற இந்திய விளையாட்டு வீரர்கள் சிறந்த வீரர்களை எதிர்கொண்டு தோற்கடிக்க வேண்டும். அதுவும் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான நீரஜ் சோப்ரா ஜக்குப் வட்லெஜ் மற்றும் அர்ஷத் நதீம் போன்றோரை எதிர்கொள்ள வேண்டும். அதேப் போல் மீராபாய் சீனாவின் தொடர் வெற்றியாளரான ஹூ ஷிஹூவை எதிர்கொள்ள வேண்டும்.



Click it and Unblock the Notifications