Latest Updates
-
ராகு-கேது பெயர்ச்சி 2026: மேஷம் முதல் கன்னி வரை யாருக்கு ராஜயோகம்?- விளக்கும் ஜோதிடர்! -
கேரட் தோசையும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
செப்டம்பர் 11, 2026: இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது தெரியுமா? -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் 2027 வரை சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் சொஜ்ஜி அப்பம் ரெசிபி - இந்த வருஷம் இந்த சூப்பரான இனிப்பை செஞ்சு பாருங்க -
காளான் வாங்குனா ஒரே மாதிரி கிரேவி செய்யாம.. ஒருடைம் இப்படி சைடு டிஷ் செய்யுங்க.. அள்ளும்.. -
வாஸ்துப்படி வீட்டின் இந்த இடத்துல கண்ணாடியை வெக்காதீங்க.. இல்ல பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பீங்க.. -
97 ஆண்டுகளாக ஒரு குழந்தை கூட பிறக்காத நாடு எது தெரியுமா? இந்த நாட்டில் ஒரு ஹாஸ்பிடல் கூட இல்லையாம் -
விநாயகர் சதுர்த்திக்கு இப்படி எள்ளு பூர்ண கொழுக்கட்டை செய்யுங்க.. 10 நிமிஷத்துல 50 கூட செய்வீங்க..
200 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் பாவகர்த்தாரி யோகம்: இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்...
Papakartari Yoga: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் அவ்வப்போது தங்கள் ராசியை மாற்றுகின்றன. அப்படி மாற்றும் போது அது சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கும் வாய்ப்புள்ளது. இப்படி உருவாகும் யோகங்களின் தாக்கமானது அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
சில சமயங்களின் கிரக மாற்றங்களால் பல ஆண்டுகளுக்கு பின் மிகவும் மோசமான அல்லது துரதிர்ஷ்டமான யோகங்கள் உருவாவதுண்டு. அப்படியொரு மோசமான யோகம் 200 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ளது. அது தான் பாவ கர்த்தாரி யோகம்/தோஷம்.

இந்த யோகத்தின் போது 4 ராசிகள் 4 பாவ கிரகங்களுக்கு இடையில் சிக்கி கொண்டு, 4 சுப கிரகங்களும் 4 பாவ கிரகங்களுடன் இணைந்திருக்கும். இந்த யோகத்தின் போது 4 ராசிக்காரர்கள் தங்கள் வாழ்வில் பலவிதமான பிரச்சனைகளை சந்திப்பார்கள். இப்போது பாவ கர்த்தாரி யோகத்தால் எந்த ராசிக்காரர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு பாவ கர்த்தாரி யோகம் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். ஏனெனில் ரிஷப ராசியின் அதிபதியான சுக்கிரன், செவ்வாயுடன் இணையவுள்ளார். அதே வேளையில் வலப்பக்கம் ராகுவும், இடப்பக்கம் சூரியனும் உள்ளனர். இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் பலவிதமான ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.
இக்காலத்தில் எந்த வேலையையும் தொடங்கக்கூடாது. அப்படி தொடங்கினால், அது தோல்வியையே அடையும். மேலும் இந்த காலக்கட்டத்தில் உங்களின் பேச்சுக்கள் மற்றவர்களை புண்படுத்தும் வகையில் கடுமையாக இருக்கும். எனவே பேசும் போது கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. முக்கியமாக வாக்குவாதத்தில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நல்லது.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கும் பாவ கர்த்தாரி யோகம் தீங்கை விளைவிக்கும். கடக ராசியின் அதிபதியான சந்திரன் செவ்வாய்க்கும் சூரியனுக்கும் இடையில் உள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். இக்காலத்தில் ஆரோக்கியத்தில் பிரச்சனைகளை சந்திக்கும் வாய்ப்புள்ளது.
விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். இக்காலகட்டத்தில் தாயாரின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வியாபாரிகளுக்கு தொழில் சற்று மந்தமாக இருக்கும். சிக்கனமாக செலவழிக்க வேண்டும். இல்லாவிட்டால் பண பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். கன்னி ராசியின் அதிபதியான புதன், சூரியனுடன் இணைந்து புதாத்திய யோகத்தை உருவாக்குகிறார். ஆனால் சூரியன் ஒரு கொடூரமான கிரகமாக கருதப்படுகிறது. மேலும் இந்த ராசிக்கு ஒருபுறம் செவ்வாயும், மறுபுறம் கேதுவும் உள்ளனர்.
எனவே இக்காலத்தில் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இக்காலத்தில் யாருக்கும் கடன் கொடுத்துவிட வேண்டாம். இல்லாவிட்டால் அந்த பணம் திரும்ப கிடைக்காது. மேலும் புதிய வேலைகளைத் தொடங்குவதைத் தவிர்க்க வேண்டும். பணிபுரிபவர்கள் இக்காலகட்டத்தில் அலுவலகத்தில் சில பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு பாவக கர்த்தாரி யோகத்தால் மோசமாக இருக்கும். ஏனெனில் மீன ராசியின் அதிபதியான குரு, ராகுவுடன் இணைந்துள்ளார். மேலும் சனியின் 3 ஆவது பார்வையும் விழுகிறது. மீன ராசியின் வலப்பக்கம் சனியும், இடப்பக்கம் ராகுவும் உள்ளனர்.
இதனால் இக்காலகட்டத்தில் ஏதாவது ஒரு விஷயத்தால் மன அழுத்தம் ஏற்படக்கூடும். பண இழப்புக்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. ஆரோக்கிய பிரச்சனைகளையும் சந்திக்கும் வாய்ப்புள்ளது. மேலும் குடும்ப உறுப்பினர்களுடன் பிரச்சனைகள் ஏற்படலாம். நிலைமை மோசமாகாமல் இருக்க வாக்குவாதத்தில் ஈடுபடுவதைத் தவிர்த்திடுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
