Latest Updates
-
ஜூலை 16-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு கூரைய பிச்சுகிட்டு பணம் கொட்டும்.. -
தக்காளி தொக்கு இப்படி செய்யுங்க.. 1 வாரம் வரை வெச்சு சாப்பிடலாம்.. சைடு டிஷ் பிரச்சனையே இருக்காது! -
வழுக்கை தலையில் முடி வளரணுமா? அப்ப கடுகு எண்ணெயை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
மிதுன ராசிக்கு வக்ர நிலையில் சென்ற புதன்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்.. -
2 உருளைக்கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
அதிக செலவழிக்காமல் எடையை குறைக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 'டயட்' ஃபாலோ பண்ணுங்க.. -
Varalakshmi Vratham 2026: வரலட்சுமி விரதம் 2026 எப்போது? பூஜை நேரம், கலசம் அமைப்பது எப்படி போன்ற தகவல்கள் இதோ! -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 4 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்.. -
கொங்குநாடு சின்ன வெங்காய சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு எதிர்பாராத லாபம் கிடைக்கப்போகுதாம்
இதுல உங்க விரல் வடிவம் எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. உங்க சுவாரஸ்யமான குணத்தை சொல்றோம்...
Palmistry: ஒருவரது குணாதிசயங்களை அந்நபரின் ராசி, பிறந்த தேதி, பிறந்த கிழமை, பிறந்த மாதம் போன்ற பலவற்றைக் கொண்டு தெரிந்து கொள்ளலாம். அதுவும் கைரேகை சாஸ்திரத்தின் படி, கை விரல்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஒவ்வொருவருக்கும் கைகள் மற்றும் விரல்களின் வடிவம் வேறுபட்டது. கைரேகை ஜோதிடத்தில், விரல்களின் வடிவத்தின் மூலம் ஒருவரின் இயல்பு, நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தைப் பற்றி ஒருவர் அறிந்து கொள்ளலாம்.
கைரேகை சாஸ்திரத்தில், ஒவ்வொரு விரலும் ஒருவரின் தனிப்பட்ட ஆளுமைப் பண்புகளைக் கொண்டுள்ளது. குறிப்பாக கைரேகை சாஸ்திரத்தில் கவனம் செலுத்தும் நான்கு முக்கிய விரல் வடிவங்கள் உள்ளன. அதில் சதுரம், கூர்மை, கூம்பு, தட்டை போன்ற வடிவங்கள் குறிப்பிடத்தக்கவை. சொல்லப்போனால் பெரும்பாலானோரின் விரல்கள் இந்த 4 வகையான வடிவங்களில் தான் உள்ளன. இப்போது அந்த 4 வடிவ விரல்களும், அவை ஒருவரின் குணாதிசயங்களைப் பற்றி என்ன சொல்கிறது என்பதையும் காண்போம்.

1. சதுர வடிவ விரல்கள்
ஒருவரது கை விரல் வடிவம் சதுரமாக இருந்தால், அந்நபர் நல்ல அறிவாற்றல் கொண்டிருப்பார்கள். பெரும்பாலும் மிகவும் நடைமுறைக்குரியவர். எல்லாம் நன்கு ஒழுங்கமைப்பட்ட முறையில் இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். மேலும் யதார்த்தமானவர்கள். எல்லாவற்றிலும் நேரத்தைக் கடைப்பிடிப்பார்கள். அன்பில் சிறந்தவர்கள். பொறுமையான நடத்தையைக் கொண்டவர். எதையும் நன்கு பகுப்பாய்வு செய்த பின்னரே நம்புவார்கள்.
2. வட்ட வடிவ விரல்கள்
வட்ட வடிவ விரல்களைக் கொண்டவர்கள் மிகவும் சென்சிடிவ்வானவர்கள் மற்றும் இரக்க குணம் கொண்டவர்கள். இந்த வடிவ விரல்களைக் கொண்டவர்கள் உணர்திறன் மிக்க ஆன்மாக்கள். இவர்கள் நடைமுறைக்கு மாறானவர்களாகவும், விவேகமற்றவர்களாகவும் இருப்பர். இருப்பினும் அவர்கள் எங்கு சென்றாலும், அன்பை பொழிந்து அன்பைப் பெறுகூர்கள். இவர்கள் நிறைய கனவு காண்பார்கள். கற்பனைத்திறன் அதிகம் கொண்டவர்கள் மற்றும தொலைநோக்கு பார்வையுடன் எதையும் அணுகுவார்கள்.
3. கூம்பு வடிவ விரல்கள்
கூம்பு வடிவ விரல்களைக் கொண்டவர்கள் நக்கல் பிடித்தவர்கள். அதிகமாக கிண்டல் செய்வார்கள். சிறந்த பேச்சாளராக இருப்பார்கள். பேசியே காரியத்தை சாதிக்கும் ஆற்றல் கொண்டவர்கள். வற்புறுத்தும் குணம் கொண்டவர்கள். இவர்கள் ஒரு பிரச்சனைக்கு சட்டென்று யோசித்து தீர்வு வழங்குவதில் வல்லவர். பெரும்பாலும் தங்கள் பேச்சால் மற்றவர்களை கவர்வார்கள். சில சமயங்களில் இவர்கள் மிகவும் ஈர்க்கக்கூடியவர்களாகவும் இருப்பர்.
4. தட்டையான விரல்
ஒருவர் தட்டையான கை விரலைக் கொண்டிருந்தால், அந்நபர் மிகவும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பர். எப்போதும் மிகுந்த உற்சாகமிக்க நபராக இருப்பார்கள். மிகவும் சுறுசுறுப்பானவர்களாக இருப்பர். நிறைய திறமைகளை தன்னுள் கொண்டிருப்பார்கள். புத்திசாலித்தனத்தால், இவர்கள் தங்கள் வாழ்க்கையில் மிகவும் வெற்றிகரமான நபராக இருப்பார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications