Latest Updates
-
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்!
இந்த படத்துல உங்க கண்ணுக்கு என்ன தெரியுது சொல்லுங்க.. உங்க ஆழ்மன எண்ணத்தை சொல்றோம்...
Optical Illusion: ஆப்டிகல் இல்யூஷன் படங்களானது ஒருவரது குணாதிசயம் மற்றும் ஒருவரது ஆழ்மனதில் இருக்கும் ஆசைகள், விருப்பங்கள் போன்றவற்றை வெளிப்படுத்துகின்றன. இந்த படங்கள் பார்ப்பதற்கு கண்களை கவரும் படி இருந்தாலும், ஒரு படத்தில் ஏராளமான விஷயங்கள் மறைந்திருக்கும்.
இந்த வகை படங்களை முதல்முறை பார்க்கும் போது, ஒவ்வொருவருக்கும், அவர்களது மூளையின் செயல்பாட்டைப் பொறுத்து, ஒவ்வொரு விஷயங்கள் தெரியும். இப்படி தெரியும் விஷயங்கள் ஒருவரைப் பற்றி வெளிப்படுத்தும்.

இணையத்தில் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் அதிகம் உலா வருகின்றன. அந்த வகையில் இங்கு ஒரு சுவாரஸ்யமான ஆப்டிகல் இல்யூஷன் படம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் இரண்டு விதமான விஷயங்கள் ஒருவரது பார்வைக்கு தெரியலாம்.
இதில் உங்கள் கண்களுக்கு எது முதலில் தெரிகிறதோ, அது அந்நபர் ஆழ்மன எண்ணங்களை என்பதை வெளிப்படுத்தும். நீங்கள் உங்கள் ஆழ்மன எண்ணங்களை தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தால், இதில் உங்களுக்கு கண்ணுக்கு என்ன தெரிந்தது என்று கூறி, அதற்கான அர்த்தத்தை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
காகம்
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் காகம் தெரிந்தால், நீங்கள் எப்போதும் ஒருவரைப் பார்த்ததுமே இப்படி தான் இருப்பார்கள் என்று முடிவெடுத்துவிடுவீர்கள். மற்றவர்களைப் பற்றிய உங்களின் எண்ணங்கள் பெரும்பாலும் உங்களின் கூர்மையான கவனிக்கும் திறன் மற்றும் மனித இயல்பைப் பற்றிய ஆழமான புரிதலில் இருந்து உருவாகின்றன. முக்கியமாக உங்களின் உள்ளுணர்வு மிகவும் துல்லியமானது. அந்த உள்ளுணர்வு சிக்கலான சூழ்நிலைகளில் சரியான முடிவெடுக்க உதவி புரியும். உங்களின் அனுமானங்கள் பொதுவாக சரியாக இருக்கும். உங்களின் பகுத்தறியும் திறன் மற்றும் நுண்ணறிவு, உங்களை ஒரு நம்பகமான நபராக காட்டுகிறது.
முகம்
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் முகம் தெரிந்தால், நீங்கள் அதிகமாக சுயவிமர்சனம் செய்வீர்கள். இப்படியான நடத்தை பெரும்பாலும் சமூக ஏற்றுக் கொள்ளலுக்கான ஆழமான மனித உள்ளுணர்வு, நிராகரிப்பு மற்றும் மறுப்பு பற்றிய பயத்தினால் உருவாகிறது. இப்படியான குணம் கொண்ட நீங்கள் உங்களை முன்கூட்டியே விமர்சித்துவிடுவீர்கள். இதனால் மற்றவர்களின் விமர்சனத்தினால் நீங்கள் அதிகம் உணர்ச்சிவசப்படுவதை குறைக்க உதவும் என்றும் நம்புகிறீர்கள். ஆனால் இப்படியான நடத்தை தனிப்பட்ட வளர்ச்சியைத் தடுக்கலாம் மற்றும் உங்களின் சுயமரியாதையை சேதப்படுத்தலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Image Courtesy: Mind Journey



Click it and Unblock the Notifications