Latest Updates
-
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க..
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரியுது சொல்லுங்க.. உங்களோட சுவாரஸ்ய குணத்தை சொல்றோம்...
Optical Illusion: ஒருவரது குணாதிசயங்களை தெரியப்படுத்தும் ஒரு புதிர் நிறைந்த சுவாரஸ்யமான மற்றும் கண்களைக் கவரும் படங்கள் தான் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள். என்ன தான் நம்மைப் பற்றி நமக்கு நன்கு தெரிந்தாலும், உண்மையில் நம்மைப் பற்றி உங்களுக்கே தெரியாத பல விஷயங்கள் உள்ளன. நீங்கள் உங்களின் குணங்களை தெரிந்து கொள்ள விரும்பினால், இந்த ஆப்டிகல் இல்யூஷன் ஆளுமை சோதனையை எடுங்கள்.
இணையத்தில் ஏராளமான ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உள்ளன. இந்த வகை படங்கள் ஒருவரின் குணாதியங்களை பற்றி மட்டுமின்றி, அந்நபரின் பலம், பலவீனம், சிந்திக்கும் திறன், உணர்வுகள் போன்ற பல விஷயங்களை கூறும். இங்கு ஒரு சுவாரஸ்யமான ஆப்டிகல் இல்யூஷன் படம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை பார்க்கும் போது ஒவ்வொருவரின் கண்களுக்கும் ஒவ்வொரு விஷயங்கள் தென்படும். இது நீங்கள் உலகத்துடன் எப்படி தொடர்பு கொள்கிறீர்கள் மற்றும் உங்களின் கண்ணோட்டத்தைப் பற்றியும் தெரியப்படுத்தும். அதுவும் இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் இரண்டு உருவங்கள் ஒளிந்துள்ளன.
அவை சாப்பிட்ட எஞ்சிய ஆப்பிள் மற்றும் இரண்டு முகங்கள். இதில் உங்கள் கண்களுக்கு முதலில் என்ன தெரிந்தது என்று கூறுங்கள். நீங்கள் லாஜிக்கல் நபரா அல்லது அதிகம் உணர்ச்சிவசப்படக்கூடியவரா என்பதை சொல்றோம்.
கடித்த எஞ்சிய ஆப்பிள்
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு கடித்த ஆப்பிள் தெரிந்தால், நீங்கள் அதிகம் உணர்ச்சிவசப்படும் நபர். அதுவும் நீங்கள் உங்களின் உணர்ச்சிகளுக்கு மட்டுமின்றி, உங்களுக்கு பிடித்தவர்களின் உணர்ச்சிகளையும் புரிந்து நடந்து கொள்வீர்கள். அதிகம் உணர்ச்சிவசப்படுவதாலோ என்னவோ, மற்றவர்களின் உணர்வுகளை எளிதில் புரிந்து கொள்வதோடு, எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் அறிவீர்கள். சிக்கலான சூழ்நிலைகளில் பிரச்சனை வேண்டாம் என்று அமைதியாக இருக்கவே விரும்புவீர்கள். உங்களின் கருத்துக்களை மற்றவர்கள் இழிவுபடுத்துவதாக உணர்வீர்கள்.
இரண்டு முகங்கள்
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் இரண்டு முகங்கள் தெரிந்தால், நீங்கள் ஒரு லாஜிக்கல் நபர். அதாவது வாழ்க்கையில் எந்த ஒன்றை தேர்வு செய்வதாக இருந்தாலும், பலவாறு நன்கு யோசித்த பின்னரே முடிவெடுப்பீர்கள். உங்களின் இந்த குணத்தால், மற்றவர்கள் உங்களிடம் அடிக்கடி வந்து ஆலோசனை பெறுவார்கள். எதையும் ஒழுக்கமாக செய்ய வேண்டும் என்று நினைப்பீர்கள். கருணை உள்ளம் கொண்டிருப்பீர்கள் மற்றும் யாரையும் எளிதில் நம்பமாட்டீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
