Latest Updates
-
சனி-சூரியன் உருவாக்கிய சமசப்தம யோகம்: இன்று முதல் அடுத்த 30 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
விநாயகர் சதுர்த்திக்கு வாங்குன விளாங்காய் இருக்கா? அப்ப இப்படி சட்னி செய்யுங்க.. தோசைக்கு அள்ளும்.. -
உங்க வாயைச் சுற்றி ரொம்ப கருப்பா இருக்குதா? அப்ப இந்த 7 ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணி பாருங்க.. -
குழம்பு மிளகாய் பொடி இப்படி அரைச்சு வெச்சுக்கோங்க.. சைவம், அசைவம்-ன்னு எல்லாத்துக்கும் யூஸ் பண்ணலாம்.. -
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய டாப் 15 உணவுகள்! -
Purattasi Matha Rasi Palan 2026: புரட்டாசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?- ஜோதிடர் கணிப்புகள் -
ஆந்திரா ஸ்டைல் முள்ளங்கி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
செப்டம்பர் 17, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிக்காரங்க பந்தயம் அடிக்கப்போறாங்களாம் -
சூரிய பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதனின் நட்சத்திர மாற்றத்தால் இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
இந்த படத்துல உங்களுக்கு முதல்ல என்ன தெரியுதுன்னு சொல்லுங்க.. நீங்க மத்தவங்கள நம்புவீங்களா இல்லையான்னு சொல்றோம்
Optical Illusion Personality Test: ஒவ்வொருவரின் குணாதிசயங்களும் மற்றவர்களிடம் இருந்து வேறுபடும். இதனால் ஒருவரது குணாதியங்களை வெளிப்படுத்தும் சோதனைகள் இருந்தால், அதை மேற்கொள்ள ஒவ்வொருவருமே விரும்புவோம். அப்படி ஒருவரது குணாதிசயங்களை வெளிப்படுத்தும் ஒருவிதமான சுவாரஸ்யமான வழி தான் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள்.
இந்த வகை படங்களில் பல விஷயங்கள் மறைந்திருக்கும். அதே வேளையில் கண்களைக் கவரும் வகையிலும், புதிர் நிறைந்தவையாகவும் இருக்கும். இந்த வகை படங்களை முதல்முறை பார்க்கும் போது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று தெரியும். இப்படி ஒவ்வொருவிதமாக தெரிவதற்கு காரணம், மூளை செயல்படும் விதம் தான்.

அந்த வகையில் இங்கு ஒரு சுவாரஸ்யமான மற்றும் அழகான ஆப்டிகல் இல்யூஷன் படம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஒருவரது கண்களுக்கு இரண்டு விதமான விஷயங்கள் தெரியலாம். அவை உதடு மற்றும் மேகங்கள். இதில் ஒருவரது கண்களுக்கு எது முதலில் தெரிகிறதோ, அது அந்நபர் மற்றவர்களை எளிதில் நம்புவீர்களா அல்லது எச்சரிக்கையுடன் இருப்பீர்களா என்பதை தெரிவிக்கும். இந்த படத்தில் உங்கள் கண்களுக்கு என்ன தெரிந்தது என்று கூறி, அதன் அர்த்தத்தை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
மேகங்கள்
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் மேகங்கள் தெரிந்தால், நீங்கள் மற்றவர்களை அவ்வளவு எளிதில் நம்பமாட்டீர்கள். உங்களுக்கு நன்கு தெரிந்தவர்களுடன் நன்கு பழகுவீர்கள் மற்றும் அவர்களுக்கு அனைத்துவிதமான உதவிகளையும் செய்வீர்கள். அதுவே தெரியாதவர்களிடம் அவ்வளவு எளிதில் நெருங்கி பழகமாட்டீர்கள். சற்று சிடுமூஞ்சியாகவே வெளிப்படுவீர்கள். நீங்கள் வாழ்க்கையில் அவநம்பிக்கையான கண்ணோட்டத்தைக் கொண்டிருந்தாலும், மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வீர்கள். நீங்கள் மிகவும் திறமையானவர்கள். உங்களிடம் நட்பாக பழக பலர் முயற்சித்தாலும், நீங்கள் அவ்வளவு எளிதில் அவர்களை நம்பமாட்டீர்கள்.
உதடுகள்
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் உதடுகள் தெரிந்தால், நீங்கள் மற்றவர்களை எளிதில் நம்பிவிடுவீர்கள். மிகவும் அன்பானவர்கள். மற்றவர்களிடம் மிகவும் அன்பாக பழகுவீர்கள். அதிகம் உணர்ச்சிவசப்படுவீர்கள். உங்களுக்கு பிடித்தவர்களுடன் சண்டை ஏற்படும் போதெல்லாம், நீங்கள் ஆழமாக காயப்படுவீர்கள். மற்றவர்களின் உணர்வுகளை மதிப்பீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
