Latest Updates
-
உணவு உண்ட பின் 90% மக்கள் செய்யும் தவறுகள் இதான்.. நீங்களும் இத பண்றீங்களா-ன்னு பாருங்க.. -
பெங்காலி முட்டை புலாவ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - வாசனை தெருவே மணக்கும் -
செப்டம்பர் 18-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது! -
பாகிஸ்தானின் நம்பர் ஒன் பணக்காரர் யார்? அவர் முகேஷ் அம்பானியை விட பணக்காரரா? உண்மை என்ன? -
சேமியா ரவா கிச்சடியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 15, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிக்காரங்கள ஆபத்துக்கள் விடாம துரத்தப்போகுதாம் -
செப்டம்பர் இறுதியில் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. -
செப்டம்பர் 14-ல் தொடங்கும் நவபஞ்சம யோகத்தால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
லன்ச் பாக்ஸிற்கு ஒருடைம் இந்த சோயா புலாவ் செஞ்சு குடுங்க.. பசங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் தேங்காய்ப்பால் ரசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும்
இந்த படத்துல உங்களுக்கு என்ன தெரியுது சொல்லுங்க.. நீங்க சோம்பேறியா, கடின உழைப்பாளியா-ன்னு சொல்றோம்..
Optical Illusion Personality Test: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒருவரது கண்களுக்கும், மூளைக்கும் வேலையைக் கொடுக்கும்படி புதிர்களைக் கொண்டிருப்பதோடு, கண்களைக் கவரும்படி அழகான படங்களாக இருக்கும். இந்த வகையான படங்கள் விளையாட்டுத்தனமாக இருந்தாலும், இவை ஒருவரது ஆளுமையை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, இந்த வகை படங்களைக் கொண்டு ஒருவரைப் பற்றி பல விஷயங்களைக் கூற முடியும்.
ஒருவரது கண்களுக்கு முதலில் தெரியும் விஷயங்களானது அந்நபரின் மூளையின் செயல்பாட்டைப் பொறுத்தது. ஒருவரது மூளை எப்படி செயல்படுகிறதோ, அதைப் பொறுத்து தான் அந்நபரின் குணாதியங்களும் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த மாதிரி இணையத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உலா வருகின்றன. அதில் ஒரு சுவாரஸ்யமான ஆப்டிகல் இல்யூஷன் படம் தான் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த படத்தில் இரண்டு வகையான உருவங்கள் உள்ளன. அதில் ஒருவரது கண்களுக்கு முதலில் என்ன தெரிகிறதோ, அதைப் பொறுத்து நீங்கள் சோம்பேறியா அல்லது கடின உழைப்பாளியா என்பதை அறியலாம். நீங்கள் இந்த சோதனையை எடுக்க தயாராக உள்ளீர்களா? இந்த படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் என்ன தெரிகிறது என்பதை அறிந்து, நீங்கள் சோம்பேறியா அல்லது கடின உழைப்பாளியா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
முட்கரண்டி
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் முட்கரண்டி தெரிந்தால், நீங்கள் அனைத்து விஷயங்களையும் தள்ளிப் போட்டுக் கொண்டே இருப்பீர்கள். அதாவது ஒரு வேலையை எடுத்தால், அதை முடிப்போம் என்று இருக்காமல், அப்புறம் செய்யலாம் என்று தள்ளிப் போடுவீர்கள். மேலும் நீங்கள் எதிலும் முழு கவனத்தை செலுத்தமாட்டீர்கள். இதனால் எந்த முன்னேற்றத்தையும் காணாமல் இருப்பீர்கள். மொத்தத்தில் நீங்கள் ஒரு படு சோம்பேறி. வாழ்வில் முன்னேற்றத்தைக் காண நினைத்தால், சோம்பேறித்தனத்தை கைவிட்டு, வேலைகளில் முழு கவனத்தை செலுத்த முயற்சிக்க வேண்டும்.
கை
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு ஒரு கை தெரிந்தால், நீங்கள் ஒரு கடின உழைப்பாளி. உங்களிடம் ஒப்படைக்கும் எந்த ஒரு வேலையையும் சரியான நேரத்தில் செய்து முடிப்பீர்கள். சுய ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாட்டில் நீங்கள் மாஸ்டர். ஒய்வு கூட எடுக்காமல் வேலையை அவ்வளவு மும்மரமாக செய்வீர்கள். நீங்கள் மிகவும் நம்பிக்கையான நபர். ஆனால் எவ்வளவு கடின உழைப்பாளியாக இருந்தாலும், நீண்ட நாள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் ஒய்வு மிகவும் முக்கியம். எனவே முடிந்தவரை நன்கு ஓய்வெடுக்க அறிவுறுத்தப்படுகிறது. நன்கு ஓய்வு எடுத்தால் தான் வேலையை திறம்பட செய்ய முடியும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
