Latest Updates
-
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
இந்த படத்துல உங்க கண்ணுக்கு என்ன தெரியுது சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவர்-ன்னு சொல்றோம்...
Optical Illusion: என்ன தான் உங்களைப் பற்றி உங்களுக்கு நன்கு தெரிந்தாலும், உண்மையில் உங்களைப் பற்றி உங்களுக்கே தெரியாத பல விஷயங்கள் உள்ளன. அப்படி ஒருவரது குணாதிசயங்களை பற்றி தெரியப்படுத்தும் ஒரு புதிர் நிறைந்த படங்கள் தான் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள்.
இந்த வகை படங்கள் ஒருவரின் குணாதியங்களை மட்டுமின்றி, அந்நபரின் பலம், பலவீனம், சிந்திக்கும் திறன் போன்ற பலவற்றை தெரியப்படுத்தும். இணையத்தில் ஒருவரது குணாதிசயங்களை வெளிப்படுத்தும் ஏராளமான ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உள்ளன. இந்த வகை படங்கள் குணாதிசயங்களை வெளிப்படுத்துவதைத் தவிர, ஒருவரது அறிவுத்திறனைப் பற்றியும் வெளிப்படுத்தும்.

இங்கு ஒரு சுவாரஸ்யமான ஆப்டிகல் இல்யூஷன் படம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வகை படத்தை பார்க்கும் போது ஒவ்வொருவரின் கண்களுக்கும் ஒவ்வொரு விஷயங்கள் தென்படும். இது நீங்கள் உலகத்துடன் எப்படி தொடர்பு கொள்கிறீர்கள் மற்றும் உங்களின் கண்ணோட்டத்தைப் பற்றி தெரிய படுத்துகின்றன.
அதுவும் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படமானது நீங்கள் அதிகம் உணர்ச்சிவசப்படுபவரா அல்லது எதையும் எளிதில் எடுத்துக் கொள்பவரா என்பது பற்றி வெளிப்படுத்தும். நீங்கள் உங்களின் குணத்தை தெரிந்து கொள்ள விரும்பினால், உங்கள் கண்களுக்கு முதலில் என்ன தெரிகிறது என்று கூறுங்கள்.
மலை தெரிந்தால்...
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் மலை தெரிந்தால், நீங்கள் எதையும் எளிதில் எடுத்துக் கொள்ளும் நபராக இருப்பீர்கள். மற்றவர்களுடன் நட்பாகவும், அன்பாகவும் இருப்பீர்கள். வாழ்க்கையில் உங்களுக்கு எதையும் விட அமைதியையே விரும்புவீர்கள். இதனால் மற்றவர்களுடன் சிறு வாக்குவாதம் ஏற்பட்டாலும், நீங்கள் விட்டுக்கொடுத்து போவீர்கள். இப்படியான உங்களின் குணத்தால், மற்றவர்கள் உங்களை எதற்கும் அஞ்சுபவராக தவறாக எடை போடுவார்கள். ஆனால் நீங்கள் ஒரு கடின உழைப்பாளி மற்றும் நினைத்ததை அமைதியான முறையில் அடையக்கூடியவர் என்பதை உங்களுக்கு நெருக்கமானவர்கள் நன்கு அறிந்திருப்பார்கள்.
நாய் தெரிந்தால்...
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் நாய் தெரிந்தால், நீங்கள் அதிகம் உணர்ச்சிவசப்படும் நபராக இருக்கலாம். ஆனால் உங்கள் உணர்வுகளையோ, உணர்ச்சிகளையோ மற்றவர்களிடம் அதிகம் காட்டமாட்டீர்கள். உங்களைச் சுற்றி நடக்கும் விஷயங்கள் உங்கள் மனதை அதிகம் பாதிக்கலாம். அதாவது உங்கள் வாழ்வில் நல்ல விஷயங்கள் நடந்தால், நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். அதுவே விஷயங்கள் மோசமாக நடக்கும் போது, நீங்கள் வாழ்க்கையையே வெறும் அளவில் விரக்தி அடைவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
