Latest Updates
-
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்!
இந்த படத்தில் உங்க கண்ணுக்கு என்ன தெரியுது சொல்லுங்க.. உங்கள பத்தி ஒரு உண்மைய சொல்றோம்..
Optical Illusion: உங்களைப் பற்றி உங்களுக்கு என்ன தான் நன்கு தெரிந்தாலும், உண்மையில் உங்களைப் பற்றி உங்களுக்கே தெரியாத பல விஷயங்கள் உள்ளன. அப்படி ஒருவரது குணாதிசயங்களை பற்றி தெரியப்படுத்தும் ஒரு புதிர் நிறைந்த படங்கள் தான் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள்.
இந்த வகை படங்கள் ஒருவரின் குணாதியங்களை மட்டுமல்ல, அந்நபரின் பலம், பலவீனம், சிந்திக்கும் திறன் போன்ற பல விஷயங்களைப் பற்றி தெரியப்படுத்தும். இணையத்தில் ஒருவரது குணாதிசயங்களை வெளிப்படுத்தும் ஏராளமான ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உள்ளன. இந்த வகை படங்கள் குணாதிசயங்களை வெளிப்படுத்துவதைத் தவிர, ஒருவரது அறிவுத்திறனைப் பற்றியும் வெளிப்படுத்தும்.

இங்கு ஒரு சுவாரஸ்யமான ஆப்டிகல் இல்யூஷன் படம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை பார்க்கும் போது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விஷயங்கள் தென்படும். இது நீங்கள் உலகத்துடன் எப்படி தொடர்பு கொள்கிறீர்கள் மற்றும் உங்களின் கண்ணோட்டத்தை தெரியப்படுத்துகின்றன. அதுவும் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் குழந்தை, காதல் ஜோடிகள், மரம் என மூன்று விதமான உருவங்கள் மறைந்துள்ளன. இதில் உங்கள் கண்களுக்கு முதலில் என்ன தெரிகிறது என்று கூறுங்கள். உங்களின் ஒரு சுவாரஸ்யமான குணத்தை சொல்கிறோம்.
குழந்தை
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் குழந்தை தெரிந்தால், நீங்கள் அதிகமாக யோசிப்பீர்கள் மற்றும் இதுவே உங்களிடம் உள்ள பிரச்சனை. மேலும் நீங்கள் சூழ்நிலைகளைப் புரிந்து கொள்ள நிறைய நேரம் எடுத்துக் கொள்வீர்கள். இதன் விளைவாக அதிகமாக யோசித்து, அடிக்கடி அப்செட் ஆவீர்கள்.
நீங்கள் அனைத்தையும் சரியாக செய்ய வேண்டுமென்று விரும்புவீர்கள். இதனாலேயே சில சமயங்களில் தவறான முடிவை எடுக்க நேரிடும் மற்றும் நீங்கள் எடுத்த முடிவு சரியானதா என்று எந்நேரமும் யோசித்தவாறு இருப்பீர்கள். நீங்கள் எப்போதும் உங்களை ஒரு உயர்ந்த நிலையில் வைத்திருக்க முயற்சிப்பீர்கள். இதனால் உங்களிடம் கொடுக்கும் பொறுப்புக்களை தீவிரமாக எடுத்து சிறப்பாக செய்வீர்கள்.
காதல் ஜோடிகள்
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் காதல் ஜோடிகள் தெரிந்தால், நீங்கள் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மிகவும் ஆழமான மற்றும் அர்த்தமுள்ள உறவைக் கொண்டிருப்பீர்கள். உறவில் நீங்கள் உண்மையாகவும், நேர்மையாகவும் இருக்க விரும்பிவீர்கள். யாரேனும் உங்களிடம் பொய் கூறினால், அதை தீவிரமாக எடுத்துக் கொள்ளாமல், அவர்களின் நிலைமையை புரிந்து கொள்வீர்கள். நீங்கள் ஏமாற்றமடைய விரும்பமாட்டீர்கள். உங்களின் மனதில் பல உணர்ச்சிகள் இருக்கும்.
மரம்
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் மரம் தெரிந்தால், நீங்கள் எப்போதும் ஒருவித குழப்பத்துடனேயே இருப்பீர்கள். சுதந்திரமாக இருக்க விரும்புவீர்கள். உங்களை எந்த ஒரு விஷயத்திலும் கட்டுப்படுத்துவது என்பது கடினம். சாகசத்தை அதிகம் விரும்புவீர்கள். மேலும் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப முன்னேற விரும்புவீர்கள். எதற்காகவும் அதிகமாக கவலைப்படமாட்டீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
