Latest Updates
-
ஆந்திரா ஸ்டைல் முள்ளங்கி பச்சடி ரெசிபி - இப்படி ட்ரை பண்ணுங்க - செம சைடிஷா இருக்கும் -
சன்டே ஸ்பெஷல் திருவனந்தபுரம் சிக்கன் ப்ரை - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
2026-ன் கடைசி சூரிய கிரகணத்தால் தீராத கஷ்டங்களை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
Aadi Perukku 2026: ஆடிப்பெருக்கு எப்போது? அந்த நாளில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
பூமியின் அழிவு எப்போது வரப்போகிறது தெரியுமா? அதுவும் இப்படித்தான் நடக்கப்போகுதாம் - ஷாக் ஆகாதீங்க -
நாளை உருவாகும் நவபஞ்ச யோகம்: இந்த 4 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
இந்த 4 ராசிக்காரங்க அவங்கள பிடிச்சவங்களுக்காக உயிரையும் கொடுப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
கிராமத்து ஸ்டைல் சின்ன வெங்காய குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் முருங்கைக்காய் கூட்டு ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும் -
World Lung Cancer Day 2026: அலட்சியம் செய்யக்கூடாத நுரையீரல் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளை பகிர்ந்த டாக்டர்!
இதுல என்ன தெரியுது சொல்லுங்க.. நீங்க கூச்ச சுபாவமுள்ளவரா அல்லது பிடிவாத குணமுள்ளவரா-ன்னு சொல்றோம்..
Optical Illusion: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒருவரது கண்களுக்கும், மூளைக்கும் வேலையைக் கொடுக்கும்படியான புதிர்களைக் கொண்ட அதே சமயம் கண்களைக் கவரும் அழகான படங்களாக இருக்கும். இப்படியான படங்கள் விளையாட்டுத்தனமாக இருந்தாலும், இவை ஒருவரது ஆளுமையைப் பற்றி மற்றும் ஒருவரைப் பற்றிய பல விஷயங்களை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.
பொதுவாக ஒருவரது கண்களுக்கு தெரியும் விஷயங்களானது அந்நபரின் மூளையின் செயல்பாட்டைப் பொறுத்தது. ஒருவரது மூளை எவ்வாறு செயல்படுகிறதோ, அதைப் பொறுத்து தான் அந்நபரின் குணாதியங்களும் இருப்பதாக கூறப்படுகிறது. இணையத்தில் இந்த மாதிரியான ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் அதிகம் உலா வருகின்றன. அதில் ஒரு சுவாரஸ்யமான ஆப்டிகல் இல்யூஷன் படம் தான் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த படத்தில் இரண்டு உருவங்கள் ஒருவரது கண்களுக்கு தெரியலாம். அதில் ஒருவரது கண்களுக்கு முதலில் என்ன தெரிகிறதோ, அதைப் பொறுத்து அந்நபர் கூச்ச சுபாவமுள்ளவரா அல்லது பிடிவாத குணமுள்ளவரா என்பதை வெளிப்படுத்தும். நீங்கள் உங்களின் குணத்தை தெரிந்து கொள்ள விரும்பினால், இந்த ஆப்டிகல் இல்யூஷன் சோதனையை மேற்கொள்ளுங்கள்.
முயல்
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் முயல் தெரிந்தால், நீங்கள் மிகவும் இனிமையானவர் மற்றும் அதிக கூச்ச சுபாவம் உள்ளவர். மேலும் நீங்கள் அனைவராலும் விரும்பப்படும் ஆளுமையைக் கொண்டிருப்பீர்கள். மற்றவர்களின் மனதை புரிந்து, அவர்களை காயப்படுத்தாமல் நடந்து கொள்வீர்கள். தேவையில்லாத பிரச்சனைகளில் தலையிடமாட்டீர்கள். சண்டைகளை தவிர்க்கவே பெரும்பாலும் முயற்சிப்பீர்கள்.
காகம்
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு காகம் முதலில் தெரிந்தால், இயற்கையாகவே அதிக பிடிவாதமாக இருப்பீர்கள். ஒரு விஷயத்தில் நீங்கள் ஒரு முடிவை எடுத்து விட்டால், உங்களின் முடிவை மாற்றுவது என்பது இயலாத ஒன்று. நீங்கள் செய்வது தான் சரி, உங்களின் முடிவு தான் சரி என்று அனைவரையும் நம்ப வைப்பீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications