Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
புலி அல்லது குரங்கு - இந்த படத்துல உங்க கண்ணுக்கு என்ன முதல்ல தெரியுதுன்னு சொல்லுங்க..
Optical Illusion: நம் ஒவ்வொருவருக்கும் நமது குணாதிசயங்கள் மற்றும் ஆளுமையை மற்றவர்கள் கணித்து கூறுவதை அறிந்தால், அதை தெரிந்து கொள்ள ஆவல் இருக்கும். உங்களுக்கு உங்களைப் பற்றி உங்களுக்கே தெரியாத விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் ஆப்டிகல் இல்யூஷன் ஆளுமை சோதனையை மேற்கொள்ளுங்கள். இந்த சோதனையில் புதிர்கள் நிறைந்த படங்கள் இருக்கும். இந்த படங்கள் நம் கண்களை கவரும் படி இருப்பதோடு, அதனுள் பல்வேறு விஷயங்கள் மறைந்திருக்கும். இந்த மாதிரியான படங்களை ஒரு புதிர் நிறைந்த விளையாட்டு என்று கூட சொல்லலாம்.
இந்த வகை ஆப்டிகல் இல்யூஷன் படங்களைக் கொண்டு ஒருவரது அறிவாற்றல் மற்றும் பார்வைத் திறனைக் கூட அறியலாம். இதெல்லாம் இம்மாதிரியான படங்களை பார்த்ததும், நமது மூளை அதை எப்படி எடுத்துக் கொள்கிறது என்பதைப் பொறுத்தது. இப்படியான ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உளவியல் பகுப்பாய்வில் முக்கிய பங்கு வகிப்பதாக கூறப்படுகிறது.

இங்கு ஒரு சுவாரஸ்யமான ஆப்டிகல் இல்யூஷன் படம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் முதலில் உங்கள் கண்களுக்கு எது தெரிகிறதோ, அதைக் கொண்டு ஒரு சுவாரஸ்யமான குணாதியத்தை தெரிந்து கொள்ளலாம். அதாவது, சிக்கலான சமயத்தில் நீங்கள் எப்படி நடந்து கொள்வீர்கள், நீங்கள் இயல்பானவரா அல்லது படைப்புத்திறன் கொண்டவரா என்பதை இந்த சோதனையின் மூலம் அறியலாம். அதற்கு முதலில் இப்படத்தில் உங்கள் கண்களுக்கு என்ன தெரிகிறது என்று கூறுங்கள்.
புலி
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் புலி தெரிந்தால், நீங்கள் எதையும் பகுப்பாய்வு செய்து பார்க்கக்கூடியவர். எவராலும் புரிந்து கொள்ள முடியாத சிக்கலான ஒரு விஷயத்தைக் கூட எளிதில் மற்றவர்களுக்கு புரியும் படி கூறுவதில் வல்லவர். எப்பேற்பட்ட வேலையையும் சிரமப்படாமல் செய்வீர்கள். அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்வீர்கள். சில நேரங்களில் பிடிவாதமாக உங்களுக்கு பிடித்தவாறு மட்டுமே நடப்பீர்கள். உங்களுக்கு பிடித்தவாறு எந்த ஒரு விஷயமும் நடக்காவிட்டால், மிகவும் வருத்தப்படுவீர்கள். முக்கியமாக எப்போதும் உங்கள் மனம் சொல்வதைக் கேட்டு தான் எந்த ஒரு முடிவையும் எடுப்பீர்கள் மற்றும் நடப்பீர்கள்.
குரங்கு
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் குரங்கு தெரிந்தால், நீங்கள் படைப்பாற்றல் கொண்டவர். பல புதுபுது யோசனைகளைக் கொண்டிருப்பீர்கள். எப்பேற்பட்ட பிரச்சனைகளுக்கும் புதுவித யோசனைகளால் சிறந்த தீர்வை காண்பீர்கள். இதனால் எந்த ஒரு பிரச்சனையும் உங்களுக்கு ஒரு பெரிய பிரச்சனையாகவே தெரியாது. சூழ்நிலைக்கு ஏற்ப நடந்து கொள்வீர்கள். புதிய விஷயங்களை கற்க அதிக ஆர்வம் கொள்வீர்கள். எப்போதும் உங்களைப் பற்றியே யோசிக்காமல், உங்களைச் சுற்றி நடக்கும் விஷயங்களையும் கொஞ்சம் கவனியுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
