Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
இந்த படத்துல உங்களுக்கு முதல்ல என்ன தெரியுது சொல்லுங்க.. உங்களோட பெஸ்ட் எது-ன்னு சொல்றோம்..
Optical Illusion: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒருவரது கண்களுக்கும், மூளைக்கும் வேலையைக் கொடுக்கும்படி புதிர்களைக் கொண்டிருப்பதோடு, கண்களைக் கவரும்படி அழகான படங்களாக இருக்கும். இந்த வகையான படங்கள் விளையாட்டுத்தனமாக இருந்தாலும், இவை ஒருவரது ஆளுமையை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, இந்த வகை படங்களைக் கொண்டு ஒருவரைப் பற்றி பல விஷயங்களைக் கூற முடியும்.
ஒருவரது கண்களுக்கு முதலில் தெரியும் விஷயங்களானது அந்நபரின் மூளையின் செயல்பாட்டைப் பொறுத்தது. ஒருவரது மூளை எப்படி செயல்படுகிறதோ, அதைப் பொறுத்து தான் அந்நபரின் குணாதியங்களும் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த மாதிரி இணையத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உலா வருகின்றன. அதில் ஒரு சுவாரஸ்யமான ஆப்டிகல் இல்யூஷன் படம் தான் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த படத்தில் மூன்று வகையான உருவங்கள் உள்ளன. அதில் ஒருவரது கண்களுக்கு முதலில் என்ன தெரிகிறதோ, அதைப் பொறுத்து உங்களின் சிறந்த குணம் என்னவென்பதை அறியலாம். நீங்கள் இந்த சோதனையை எடுக்க தயாராக உள்ளீர்களா? இந்த படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் என்ன தெரிகிறது என்பதை அறிந்து, உங்களின் சிறந்த குணத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
சிங்கம்
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் சிங்கம் தெரிந்தால், உங்களின் மிகச்சிறந்த குணம் உங்களின் தலைமைப்பண்புகள் தான். இயற்கையாகவே ஒரு பொறுப்பை ஏற்று மற்றவர்களுக்கு சிறந்த வழிகளை காட்டுவீர்கள். கொடுக்கும் பொறுப்புக்களை தைரியமாகவும், உறுதியாகவும் எடுத்து செய்வீர்கள். சவால்களை நம்பிக்கையுடன் ஏற்றுக்கொள்வீர்கள். தொழிலில் மிகவும் வலிமையானவராகவும், செல்வாக்குமிக்கவர்களாகவும் இருப்பீர்கள்.
சிறுத்தை
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் சிறுத்தை தெரிந்தால், உங்களின் மிகச்சிறந்த குணம் வலுவான புத்திசாலித்தனம் தான். புதிதாக ஏதாவது ஒன்றை கற்றுக் கொள்ள ஆர்வம் காட்டுவீர்கள். சிக்கலான விஷயங்களுக்கு விரைவில் பகுப்பாய்வு செய்து எளிதில் தீர்வு காண்பீர்கள். எந்த ஒரு முடிவையும் தெளிவாக எடுப்பீர்கள். இப்படியான குணத்தால் உங்கள் இலக்குகளை அடைய எவ்வித இடையூறு வந்தாலும், அதைப் பொருட்படுத்தாமல் விரைவில் அடைவீர்கள்.
டேன்டேலியன்கள்
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் டேன்டேலியன்கள் தெரிந்தால், நீங்கள் உங்கள் நம்பிக்கையில் உறுதியாக இருப்பீர்கள். நம்பிக்கையுடனும், உறுதியுடனும் வாழ்க்கையை அணுகுவீர்கள். உங்களின் கொள்கைகளில் உறுதியாக இருப்பீர்கள். இப்படியான அசைக்க முடியாத பண்பால், உங்கள் கருத்துக்களை கூற சற்றும் அச்சம் கொள்ளாமாட்டீர்கள். தெளிவான நோக்கத்தைக் கொண்டு, அதன்படி வாழ்க்கையை வாழ்வீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications