இந்த படத்தில் உங்களுக்கு முதலில் என்ன தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்க ஆழ்மனதில் உள்ள பயத்தை சொல்றோம்..

Optical Illusion: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் கண்களை கவரும் வகையில் அழகாக இருப்பதோடு, பல புதிர்களை உள்ளடக்கியிருக்கும். இப்படிப்பட்ட ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒருவரது குணாதிசயங்களைப் பற்றி வெளிப்படுத்துவதைத் தவிர, ஒருவரின் ஆழ் மனதில் உள்ள பயத்தையும் வெளிப்படுத்தும். சிலருக்கு அவர்களது ஆழ்மனதில் உள்ள பயம் தெரியாது.

நீங்கள் உங்கள் ஆழ்மனதில் உள்ள பயத்தை தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? அப்படியானால் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படம் உதவி புரியும். அதற்கு இந்த படத்தில் உங்களுக்கு முதலில் என்ன தெரிகிறது என்று கூறுங்கள். உங்கள் ஆழ்மனதில் எந்த மாதிரியான பயம் உள்ளது என்பதைக் கூறுகிறோம்.

Optical Illusion: The First Thing That You Notice Reveals Your Deepest Subconcious Fear

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படமானது ஆழ்மனதில் ஒருவித பயத்தைத் தூண்டலாம். ஏனெனில் இது ஒரு மண்டை ஓட்டின் உருவத்தைக் கொண்டுள்ளது. இந்த படத்தை இன்னும் கூர்ந்து கவனித்தால், உங்கள் கண்களுக்கு முதலில் எந்த உருவம் தெரிகிறது என்பதை அறிந்து, அதன் பின் தொடர்ந்து படியுங்கள்.

சிறுமி

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் மரத்தடியில் அமர்ந்துள்ள ஒரு சிறுமியின் உருவம் தெரிந்ததா? அப்படியானால் உங்கள் ஆழ் மன பயமானது குழந்தைப் பருவத்தில் இருந்தே அடக்கப்பட்ட உணர்ச்சிகளாகும். குழந்தையின் மனதில் பல வகையான நிகழ்வுகள் உள்ளன. அவை சரியாக விவரிக்கப்படாவிட்டால், முதிர்வயதில் அச்சங்கள், அடிமையாதல், பொருத்தமற்ற ஆசைகள் ஆகியவற்றின் வடிவத்தில் வெளிப்படும். சுருக்கமாக கூற வேண்டுமானால், முடிவுகளை எடுக்க பயப்படுவீர்கள் அல்லது பொறுப்புகளை ஏற்க பயப்படுவீர்கள்.

பட்டாம்பூச்சி

உங்கள் கண்களுக்கு இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் முதலில் பட்டாம்பூச்சி தெரிகிறது என்றால், உங்கள் ஆழ்ந்த மனதில் உள்ள பயமானது மரண பயம் மற்றும் வாய்ப்புக்களை இழக்க நேரிடுவது பற்றிய பயமாக இருக்கும். பொதுவாக பட்டாம்பூச்சி நேர்மறையான அர்த்தத்துடன் தொடர்புடைய ஒரு அடையாளமாகும். ஆனால் அதற்கு ஆழமான மற்றும் இருண்ட அர்த்தமும் உள்ளது. ஒருவரது கனவில் பட்டாம்பூச்சிகள் வந்தால், அது மாற்றத்தையும், தொடக்கத்தையும் குறிக்கின்றன. இதன் ஆன்மீக அர்த்தம் மரணத்திற்கு பிந்தைய வாழ்க்கையில் ஆன்மாக்களை அனுப்புவதாகும்.

ஸ்ட்ராபெர்ரி

இந்த ஆப்டிகல் இல்யூஷல் படத்தில் ஸ்ட்ராபெர்ரி பழம் உங்கள் கக்ளுக்கு தெரிகிறது என்றால், உங்கள் ஆழ் மன பயம் உங்களை அறியாமலேயே அன்பை எதிர்ப்பதைக் குறிக்கிறது. இந்த படத்தில் ஸ்ட்ராபெர்ரி பழமானது இதயத்தை பிரதிபலிக்கிறது. பொதுவாக ஸ்ட்ராபெர்ரி அன்பின் அடையாளமாக குறிப்பிடப்படுகிறது. புராணங்களின் படி, அடோனிஸின் மரணத்திற்கு பின் வீனஸ் தேவியால் அழுகையை நிறுத்த முடியவில்லை. அப்போது வெளிவந்த கண்ணீர் துளிகள் தரையில் விழுந்து ஸ்ட்ராபெர்ரிகளை உருவாக்கியதாக கூறப்படுகிறது.

Desktop Bottom Promotion