Latest Updates
-
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சௌ சௌ வாங்குனா இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் அஸ்தமனமாவதால் துரதிர்ஷ்டத்தால் துரத்தப்படப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஈவ்னிங் டைம்ல இந்த செட்டிநாடு உருளைக்கிழங்கு அடையை செஞ்சு கொடுங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும்
இந்த படத்துல உங்க கண்ணுக்கு என்ன தெரியுது சொல்லுங்க.. உங்களோட ரகசியத்தை சொல்றோம்...
Optical Illusion: ஒருவரது குணாதியங்களை வெளிப்படுத்தும் ஏராளமான ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தில் உலா வருகின்றன. இந்த மாதிரியான ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் பல விஷயங்கள் ஒளிந்திருக்கும். இந்த படங்களை பார்க்கும் போது, நமது மூளை முதலில் எதை எடுத்துக் கொள்கிறதோ, அதைப் பொறுத்து ஒருவரது குணாதிசயங்கள் கூறப்படுகின்றன. ஏன் உளவியல் பகுப்பாய்வில் கூட ஆப்டிகல் இல்யூஷன் பட சோதனை முக்கிய பங்கை வகிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்த வகையான படங்களை ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் நமது மூளை ஒவ்வொருவிதமாக எடுத்துக் கொள்ளும். இதன் மூலம் ஒருவரின் அறிவாற்றல், குணாதிசயங்கள், ரகசியமான அச்சங்கள் மற்றும் ஆசைகள் போன்றவற்றை தெரிந்து கொள்ள முடியும். அப்படிப்பட்ட ஒரு புதிர் நிறைந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தை தான் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் என்ன தெரிகிறதோ, அதைக் கொண்டு உங்களின் குணாதிசயங்களைக் கூற முடியும்.

இங்கு கொடுக்கப்பட்டுள்ள படத்தில் இரண்டு விதமான விஷயங்கள் ஒருவரது கண்களில் தென்படலாம். அதில் மீன் மற்றும் பூனை. இதில் உங்கள் கண்களுக்கு முதலில் என்ன தெரிகிறது என்பதை கூறி, அது எம்மாதிரியான குணாதிசயங்களை கூறுகிறது என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
பூனை தெரிந்தால்...
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், உங்கள் கண்களுக்கு முதலில் பூனை தெரிந்தால், நீங்கள் சுதந்திரமாக இருக்க விரும்புவீர்கள். அதே சமயம் உறுதியுடனும் இருப்பீர்கள். உங்களிடம் பொறுமை என்பது இருக்காது. ஏதேனும் கடுமையான சவால்களை எதிர்கொள்ளும் போது, விட்டுக்கொடுத்து சென்று விடுவீர்கள். இருப்பினும் நீங்கள் மிகவும் தாராள மனதைக் கொண்டவர்கள். எப்போதும் மற்றவர்களுக்கு உதவ தயாராக இருப்பீர்கள். அதே சமயம் மற்றவர்களின் தவறுகளை எளிதில் மன்னித்துவிடுவீர்கள். அதுவும் ஒருவர் மனம் வருந்தி உங்களிடம் மன்னிப்பு கேட்டால், உடனே மன்னிப்பீர்கள்.
மீன் தெரிந்தால்...
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் மீன் தெரிந்தால், உங்களுக்கு மற்றவர்களின் நேர்மையற்ற தன்மையை கண்டறியும் ஆற்றல் இருக்கும். அப்படி தெரிவதால், அதை அவர்கள் முகத்திற்கு நேராக செல்வதற்கு பதிலாக, அவர்களிடம் தூரத்தை பின்பற்றுவீர்கள். மேலும் நீங்கள் உங்கள் உணர்ச்சிகளை அவ்வளவு எளிதில் வெளிப்படுத்தமாட்டீர்கள். அடிக்கடி பகல் கனவுகளில் தொலைந்து போவீர்கள். உங்களை நன்கு புரிந்து கொள்ளும் ஒருவருக்காக ஏங்கிக் கொண்டிருப்பீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications