Latest Updates
-
ஜூலையில் அஸ்தமனமாகும் குரு பகவான்: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது.. -
சுக்கிரன் சிம்ம ராசிக்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
கனவில் பணத்தை பார்ப்பது அதிர்ஷ்டமா? துரதிர்ஷ்டமா? அதன் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா? -
July Born Personality: ஜூலை மாதம் பிறந்தவங்களோட குணாதிசயம் உண்மையில் எப்படி இருக்கும் தெரியுமா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த கர்நாடகா ஸ்டைல் சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு நச்சுனு இருக்கும் -
சனிபகவானின் கோபத்தால் ஜூலை மாதத்தில் இந்த 3 ராசிக்காரங்க படாதபாடு படப்போறாங்களாம் - ஜாக்கிரதை -
2 கப் ராகி மாவும், 1/2 கப் ரவையும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல 10 நிமிடத்தில் இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க.. -
இந்த இந்திய அரசர் நகரும் ஆடம்பர அரண்மனையை வைத்திருந்தாராம் - இப்போது அது எங்குள்ளது தெரியுமா? -
கருப்பான சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த உருளைக்கிழங்கு ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க... -
ஜூலையில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பணம் பெருகும், தொழில் வளரும்..
ஓணம் பண்டிகையை முன்னிட்டு கண் கவரும் நிகழ்ச்சிகளாக என்னென்ன நடக்கும்-ன்னு தெரியுமா?
Onam 2023: இந்தியாவின் தென்பகுதியில் உள்ள கேரளாவில் ஓணம் பண்டிகையானது மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் பண்டிகைகளில் இதுவும் ஒன்று. இந்த கலாச்சாரத் திருவிழா நிறைய மத முக்கியத்துவத்தை தன்னுள் கொண்டுள்ளது.
ஓணம் என்பது குடும்பங்கள் ஒன்று கூடி தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவும், தெய்வங்களை வழிபடவும், ஆசி பெறவும், சுவையான விருந்துகளில் ஈடுபடவும், கலாச்சார நிகழ்ச்சிகளில் ஈடுபடவும், பூக்கோலம் எனப்படும் அழகிய மலர் அலங்காரங்களை உருவாக்குவது போன்ற பல விஷயங்களை இந்நன்னாளில் செய்து அவர்கள் வழிபடுவர்.

சரி, வாங்க ஓணத்தின் புராண தோற்றம் முதல் பிரமாண்டமான படகுப் போட்டிகள் மற்றும் பாரம்பரிய விளையாட்டுகள் வரை பல கண் கவரும் நிகழ்ச்சித் தொகுப்புகளைப் பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம்.
ஓணத்தின் தோற்றம்
ஓணம் பண்டிகை என்பது இந்திய மாநிலமான கேரளாவில் முதன்மையாக கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய அறுவடை திருவிழா ஆகும். இந்த பண்டிகை நாளில் தனது குடிமக்களுக்கு வருகை தருவதாக நம்பப்படும் புகழ்பெற்ற மன்னர் மகாபலி வீடு திரும்புவதை குறிக்கிறது .
ஓணம் பண்டிகை எத்தனை நாட்கள் கொண்டாடப்படும்
இந்த ஓணம் திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த 10 நாட்களும் தனித்துவமான முக்கியத்துவமான சடங்குகள் செய்யப்படுகிறது. இந்த 10 நாட்களும் மக்கள் வீட்டில் வித விதமாக சமைத்து மற்றும் நிறைய விளையாட்டு போட்டிகள், படகு போட்டிகள் மற்றும் பூக்கோலம் போட்டு மகிழ்வர்.
மலர் அலங்காரங்கள்
ஓணத்தின் முக்கிய சிறப்புகளில் ஒன்று பூக்கோலம் ஆகும். நிறைய அழ அழகான வண்ணமயமான பூக்களைக் கொண்டு வாசலின் முன்பு கோலம் போட்டு அதில் விளக்கை ஏற்றி கோலத்தை சுற்றி நடனம் ஆடி பாட்டு பாடி மகிழ்வர்.
ஓணம் சத்யா
ஓணம் சத்யா என்பது பண்டிகையின் போது வழங்கப்படும் மிகப்பெரிய விருந்தை குறிக்கிறது. இதற்காக நிறைய உணவுகளை தயாரித்து நம் பாரம்பரிய முறைப்படி வாழை இலையில் பரிமாறி மகிழ்வர். தேங்காய் சோறு, கடலை கறி ரெசிபி, கேரள ஸ்பெஷல் காலன், கேரளா ஸ்பெஷல் ரசம், அரிசி பால் பாயசம், சாம்பார், அவியல், ஓலன், புலி இஞ்சி, பருப்புக் கறி, சர்காரா வரட்டி போன்ற பல உணவு வகைகள் இதில் இடம் பெறும்.
வல்லம்களி - பாம்பு படகுப் போட்டி
ஓணம் கொண்டாட்டத்தின் ஒரு முக்கியமான போட்டி என்றால் அது வல்லம்களி அதாவது பாம்பு படகுப் போட்டியாகும். நிறைய பேர்கள் சேர்ந்து அணி அணியாக நீண்ட பாம்பு போன்ற படகில் படகு சவாரி போட்டியில் ஈடுபடுவார்கள். அப்படி போட்டியிடும் போது பாரம்பரிய பாடல்களை பாடிக் கொண்டு அதன் தாளத்திற்கு ஏற்றவாறு துடுப்பை போட்டு அதில் ஈடுபடுவார்கள்.
கைகொட்டிகாளி நடனம்
திருவாதிரைக்காளி நடனம் என்றும் இது அழைக்கப்படுகிறது. இது ஓணத்தின் போது பெண்கள் ஆடும் ஒரு பாரம்பரிய குழு நடனமாகும். இந்த நடனத்தின் போது அழகான அசைவுகள் மற்றும் தாள கைத்தட்டல் உடன் நடனமாடுவார்கள்.
ஓணம் பூக்கோலம் போட்டி
ஓணத்தின் போது பெண்கள் இந்த பூக்கோலம் போட்டியில் ஈடுபடுகின்றனர். நேர்த்தியான மலர் ஏற்பாடுகளைக் கொண்டு பூக்கோலம் இடுகின்றனர். இந்த பூக்கோலத்தை "அத்தாப்பூ" என்று அழைக்கின்றனர். இதில் செம்பருத்தி, தும்பா, துளசி, சாமந்தி, சேத்தி, சங்கு புஷ்பம் போன்ற தனித்துவமான பூக்களும் பயன்படுத்தப்படுகிறது. அழகான வண்ணமயமான பூக்களைக் கொண்டு வாசலின் முன்பு கோலம் போட்டு அதில் விளக்கை ஏற்றி நடனம் ஆடி பெண்கள் மகிழ்வார்கள்.
அத்தச்சமயம் ஊர்வலம்
அத்தச்சமய ஊர்வலம் என்பது ஓணம் பண்டிகையின் தொடக்கத்தைக் குறிக்கிறது. இந்த ஊர்வலத்தின் போது வண்ணமயமான அணிவகுப்புகள், பாரம்பரிய கலை வடிவங்கள், அலங்கரிக்கப்பட்ட யானைகள் ஊர்வலம் போன்றவை நடக்கும்.
ஓணக்கலிகள் விளையாட்டுகள்
ஓணக்கலிகள் அல்லது பாரம்பரிய விளையாட்டுகள் ஓணம் கொண்டாட்டங்களில் இன்றியமையாத ஒன்றாக உள்ளது. இந்த விளையாட்டுகளில் கயிறு இழுத்தல், படகுப் பந்தயம், வில்வித்தை மற்றும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தரும் பல்வேறு உள்நாட்டு விளையாட்டுகளும் இதில் நடக்கிறது.
திருக்காக்கரா கோயில் கொண்டாட்டங்கள்
கேரளாவில் உள்ள திருக்காக்கரா கோயிலுக்கு ஓணம் பண்டிகையின் போது அதிக முக்கியத்துவம் உண்டு. இந்த நன்னாளில் பக்தர்கள் ஆசி பெறவும், சமய சடங்குகளில் பங்கேற்கவும் கோவிலுக்கு திரளாக வந்து வழிபடுவர்.
ஓணம் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள்
ஓணம் பண்டிகையின் போது கேரளா முழுவதும் இசை நிகழ்ச்சிகள் மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. பார்வையாளர்களை மகிழ்விக்கவும், பாரம்பரிய நாட்டுப்புற கலைகளை காக்கவும் இந்த இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
கேரளா கைவினைப் பொருட்கள் கண்காட்சி
கேரளாவின் பாரம்பரிய கைவினைப் பொருட்கள் மற்றும் கைத்தறிப் பொருட்களைக் காட்சிப்படுத்தும் பல கண்காட்சிகள் ஓணத்தின் போது நடத்தப்படுகின்றன. திறமையான கைவினைஞர்களிடமிருந்து தனித்துவமான படைப்புகளை பாராட்டி வாங்கி பார்வையாளர்களுக்கு காட்சிப்படுத்துகின்றனர்.



Click it and Unblock the Notifications