அக்டோபர் மாதம் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல ரொம்பவும் கவனமா இருக்கணும்..

October 2023 Monthly Financial Money Horoscope In Tamil: 2023 ஆம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில் நுழையவுள்ளோம். ஒவ்வொரு மாதமும் கிரகங்கள் தங்கள் நிலைகளில் மாற்றங்களை ஏற்படுத்தும். அந்த வகையில் அக்டோபர் மாதத்தில் பல முக்கியமான கிரகங்கள் ராசியை மாற்றவுள்ளன.

அதுவும் மாதத்தின் தொடக்கத்திலேயே புதன், சுக்கிரன், செவ்வாய் ஆகிய கிரகங்கள் ராசியை மாற்றவுள்ளன. அதைத் தொடர்ந்து சூரியன் மற்றும் ராகு-கேது பெயர்ச்சிகள் நிகழவுள்ளன. இப்படி கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படுவதால், அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.

October 2023 Monthly Financial Money Horoscope In Tamil

அதுவும் இந்த தாக்கம் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கையில் மட்டுமின்றி, நிதி நிலையிலும் காணப்படும். அதில் சில ராசிக்காரர்களுக்கு நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டாலும், சிலர் பண பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இப்போது அக்டோபர் மாதத்தில் மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிக்காரர்களின் நிதி நிலை எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் அக்டோபர் மாதத்தில் தங்கள் நிதி நிலையில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். பணியிடத்தில் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். வணிகர்களுக்கு ஒரு பெரிய ஒப்பந்தம் தேடி வந்தாலும், அதை ஒப்புக் கொள்ளும் முன் நன்கு சரிபார்க்க வேண்டும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதமானது நிதி ரீதியாக சாதகமாக இருக்கும். திடீர் பண ஆதாயம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் சில சிறப்பான வேலைகளால் நிதி நன்மைகள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. சிலருக்கு கூட்டுத் தொழில் செய்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். இந்த கூட்டுத் தொழில் மூலம் உடனடி பலனைக் காண முடியாவிட்டாலும், எதிர்காலத்தில் நல்ல நிதி நன்மைகளைத் தரும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் அக்டோபர் மாதத்தில் நல்ல நிதி நன்மைகளைப் பெறுவார்கள். எதிர்பாராத பண ஆதாயத்தைப் பெற வாய்ப்புள்ளது. இம்மாதத்தில் ரு பெரிய கூட்டு தொழிலைச் செய்யலாம். இதன் மூலம் ஆரம்பத்தில் நல்ல லாபத்தைப் பெற முடியாவிட்டாலும், போக போக நிதி நன்மைகளைப் பெறக்கூடும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதமானது நிதி ரீதியாக நன்றாக இருக்கும். புதிய வேலையை ஆரம்பிக்க விரும்புவீர்கள். பணிபுரிபவர்கள் சம்பள உயர்வைப் பெறலாம். வணிகர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் மூலம் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெற வாய்ப்புள்ளது.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் அக்டோபர் மாதத்தில் வருமானத்தில் உயர்வைக் காண வாய்ப்புள்ளது. உங்களின் தடைபட்ட வேலைகள் மீண்டும் தொடங்கப்பட்டு, அது நல்ல பண வரவைத் தரக்கூடும். கூட்டு தொழில் செய்பவர்கள் தங்கள் கூட்டாளரை சரியாக தேர்ந்தெடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். இம்மாதத்தில் நண்பர்களிடம் இருந்து நல்ல நிதி உதவி கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். ஷேர் மார்கெட்டில் முதலீடு செய்பவர்களுக்கு இம்மாதத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் அக்டோபர் மாதத்தில் ஆரோக்கிய பிரச்சனைகளால் நிதி பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வியாபாரிகள் இம்மாதத்தில் தங்கள் வியாபாரத்தில் மாற்றங்களை செய்வது நல்லதல்ல. இம்மாதத்தில் எந்த ஒரு முடிவை எடுப்பதாக இருந்தாலும் நன்கு யோசித்து பின்னர் எடுக்க வேண்டும். இம்மாதத்தில் நிதி நிலையை சமாளிக்க கடன் வாங்க வேண்டிய சூழல் உருவாகலாம்.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் அக்டோபர் மாதத்தில் நிதி நிலையில் சரிவை காண்பார்கள். இதனால் கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படலாம். வியாபாரிகள் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். வணிகர்கள் இம்மாதத்தில் பெரிய ரிஸ்க் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். வேலையை மாற்ற நினைத்தால், அதை இம்மாதத்தில் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் அக்டோபர் மாதத்தில் எதையும் யோசிக்காமல் முதலீடு செய்வதைத் தவிர்க்க வேண்டும். பணிபுரிபவர்கள் தங்களுடன் வேலை செய்வோருடன் நல்லுறவைப் பேற அறிவுறுத்தப்படுகிறது. இல்லாவிட்டால், அதன் காரணமாகவே நஷ்டத்தை சந்திக்கக்கூடும். வியாபாரிகள் எந்த ஒரு முடிவையும் சிந்தித்து எடுக்க வேண்டும். முக்கியமாக சொத்துக்களை வாங்க நினைத்தால், கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதமானது நிதி ரீதியாக நன்றாக இருக்கும். புதிய வேலைகளை தொடங்கினால், நல்ல லாபத்தைப் பெறலாம். பழைய கடன்களில் இருந்து விடுபடுவீர்கள். பணிபுரிபவர்கள் கூட்டு தொழில் செய்வதற்கான முன்மொழிவைப் பெறலாம். இது இந்த ராசிக்காரர்களின் நிதி நிலைமையை மேம்படுத்தும்.

மகரம்

மகர ராசிக்காரர்கள் அக்டோபர் மாதத்தில் நிதி நிலையில் சரிவைக் காண்பார்கள். இதனால் மூன்றாம் நபரின் உதவியைப் பெற வேண்டியிருக்கும். வியாபாரிகள் உடல்நல பிரச்சனையால் வேலையில் கவனம் செலுத்த முடியாமல் பெரிய நஷ்டத்தை சந்திக்க நேரிடும். வணிகர்கள் இம்மாதத்தில் ரிஸ்க் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். வேலையை மாற்ற நினைத்தால், இதை இம்மாதத்தில் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய நிதி சிக்கலில் சிக்க நேரிடும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதமானது நிதி ரீதியாக மோசமாக இருக்கும். இந்த ராசிக்காரர்கள் தங்கள் பணியிடத்தில் பெரிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இதனால் வேலையை இழக்க நேரிட்டு, நிதி பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இம்மாதத்தில் முதலீடு செய்வதாக இருந்தால், நன்கு சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். இல்லாவிட்டால் பண இழப்பை சந்திக்க நேரிடும்.

மீனம்

மீன ராசிக்காரர்கள் அக்டோபர் மாதத்தில் வருமானத்தில் நல்ல உயர்வைக் காண்பார்கள். மேலும் இம்மாதத்தில் நிலுவையில் உள்ள வேலைகள் மீண்டும் தொடங்கப்பட்டு, நல்ல நிதி நன்மைகளை வழங்கும். பணிபுரிபவர்கள் இம்மாதத்தில் நல்ல சம்பளத்துடன் ஒரு வேலை வாய்ப்பைப் பெறுவார்கள். ஷேர் மார்கெட்டில் பணத்தை முதலீடு செய்தால், அதில் நல்ல லாபம் கிடைக்கும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Saturday, September 30, 2023, 23:10 [IST]
Desktop Bottom Promotion