Numerology: இந்த 5 தேதில பிறந்தவங்க சிறந்த இராஜதந்திரிகளாம்... இவங்களால செய்ய முடியாதது எதுவுமே இல்லையாம்...!

Numerology: எண்களை அடிப்படையாகக் கொண்டு பின்பற்றப்படும் பழங்கால ஜோதிட முறையான நியூமராலஜி ஒருவரின் பிறந்த எண்ணை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் எப்படிப்பட்டவர்கள், அவர்களிடம் இருக்கும் நல்ல மற்றும் தீய குணங்கள் என்ன மற்றும் அவர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை நிர்ணயிக்கவும் உதவுகிறது.

நியூமராலஜி படி, சில பிறந்த தேதிகளில் பிறந்தவர்கள் மைண்ட் கேம்களை விளையாடுவதில் ஆர்வமுள்ளவர்களாகவும், சிறந்தவர்களாகவும் இருப்பார்கள். இந்த பதிவில், மைண்ட் கேம் விளையாடுவதில் சிறந்தவர்களாகவும் மற்றும் உறவுகளில் உளவியல் சூழ்ச்சிகள் செய்பவர்களாகவும் இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

Numerology Which Date Born People Are Expert in Playing Mind Games in Tamil

பிறந்த தேதி மற்றும் மைண்ட் கேம்கள்

சில தேதிகளில் பிறந்தவர்கள், மற்றவர்களுடனான அவர்களின் தொடர்புகளில் மைண்ட் கேம் விளையாடும் பண்புகளை வெளிப்படுத்துவதாக நியூமராலஜி கூறுகிறது. இந்த எண்ணில் பிறந்தவர்கள் தந்திரமான சிந்தனை மற்றும் கையாளுதல் ஆகியவற்றில் அதிக ஆர்வத்தையும், புத்திசாலித்தனத்தையும் கொண்டிருக்கலாம்.

அனைத்து மாதத்திலும் 2 ஆம் தேதியில் பிறந்தவர்கள்

அனைத்து மாதத்திலும் 2 ஆம் தேதி பிறந்தவர்கள் இராஜதந்திரம், உள்ளுணர்வு மற்றும் உணர்திறன் ஆகியவற்றுடன் தொடர்புடையவர்கள். நியூமராலஜியில், எண் 2 சமநிலை மற்றும் நல்லிணக்கத்தைக் குறிக்கிறது.

இருப்பினும், இந்த தேதியில் பிறந்தவர்ர்கள் சில சமயங்களில் சூழ்நிலைகளை கையாளவும் தங்கள் உறவுகளில் நன்மைகளைப் பெறவும் தங்கள் புத்திக்கூர்மையை பயன்படுத்தலாம். அவர்கள் மற்றவர்களின் விசுவாசத்தையும் அர்ப்பணிப்பையும் சோதிக்க மைண்ட் கேம்களை விளையாடலாம்.

அனைத்து மாதத்திலும் 3 ஆம் தேதியில் பிறந்தவர்கள்

நியூமராலஜியில் எண் 3 படைப்பாற்றல், தொடர்பு மற்றும் சமூகத்தில் இணக்கம் போன்ற குணங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. 3 ஆம் தேதி பிறந்தவர்கள் பெரும்பாலும் வசீகரமாகவும், எளிதில் மற்றவர்களை சம்மதிக்க வைக்கக் கூடியவர்களாகவும் இருப்பார்கள்.

அவர்கள் மற்றவர்களுடன் பழகுவதை அனுபவிக்கும் அதே வேளையில், உரையாடல்களை கையாளவும், அவர்களின் விருப்பங்களுக்கு அனைவரையும் நடக்க வைக்கவும் அவர்கள் தங்கள் புத்திசாலித்தனத்தையும், பேச்சாற்றலையும் பயன்படுத்தலாம்.

அனைத்து மாதத்திலும் 5 ஆம் தேதியில் பிறந்தவர்கள்

5 ஆம் தேதி பிறந்தவர்கள் சாகச மற்றும் ஆர்வமுள்ள இயல்புக்கு பெயர் பெற்றவர்கள். நியூமராலஜி படி எண் 5 சுதந்திரம் மற்றும் சாகசம் ஆகியவற்றைக் குறிக்கிறது. இருப்பினும், இந்த எண்ணில் பிறந்தவர்கள் சில சமயங்களில் தங்கள் நடத்தை மற்றும் மனப்பான்மையை சரிசெய்வதற்கு வெவ்வேறு சூழ்நிலைகளில் நன்மையைப் பெறுவதற்கு தங்கள் இராஜதந்திரத்தைப் பயன்படுத்தலாம். தங்களின் அதிகாரத்தை நிலைநாட்ட அவர்கள் மற்றவர்களுடன் மைண்ட் கேம்களை விளையாடுவார்கள்.

அனைத்து மாதத்திலும் 7 ஆம் தேதியில் பிறந்தவர்கள்

நியூமராலஜியில், எண் 7 ஆன்மீகம், உள்நோக்கம் மற்றும் பகுப்பாய்வு சிந்தனையுடன் தொடர்புடையது. அனைத்து மாதத்திலும் 7 ஆம் தேதி பிறந்தவர்கள் ஆழ்ந்த சிந்தனையாளர்களாக இருப்பார்கள், ஆனால் அவர்கள் உணர்ச்சிரீதியாக தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான ஒரு வழியாக மைண்ட் கேம்களை விளையாட விரும்புவார்கள். அவர்கள் தங்கள் அறிவாற்றலைப் பயன்படுத்தி மற்றவர்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம் மற்றும் அவர்களின் உறவுகளில் எப்போதும் ஆதிக்கம் செலுத்துபவராக இருக்கலாம்.

அனைத்து மாதத்திலும் 9 ஆம் தேதியில் பிறந்தவர்கள்

அனைத்து மாதத்திலும் 9 ஆம் தேதி பிறந்தவர்கள் கருணை, தாராள மனப்பான்மை மற்றும் இலட்சிய உணர்வு கொண்டவர்களாக இருப்பார்கள். எண் கணிதத்தில் 9 என்பது தன்னலமற்ற தன்மை மற்றும் பச்சாதாபத்தை குறிக்கிறது.

இருப்பினும், இந்த நபர்கள் சில சமயங்களில் மற்றவர்களின் நோக்கங்களின் நம்பகத்தன்மையை சோதிப்பதற்கு அல்லது அவர்கள் விரும்பிய விளைவுகளை உருவாக்குவதற்கு சூழ்நிலைகளைக் கையாளுவதற்கான வழிமுறைகளாக மைண்ட் கேம்களை விளையாடலாம்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Desktop Bottom Promotion