Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
நியூமராலஜி 2024: உங்க பிறந்த தேதி என்னனு சொல்லுங்க? 2024 உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்...!
Numerology 2024: 2024 ஆண்டை எதிர்கொள்ள தயாராகுங்கள். இந்த ஆண்டின் கூட்டுத்தொகை 8. இந்த 8 ஆம் நம்பர் ஆண்டு முரண்பாடுகள், தைரியம், வலிமை போன்றவற்றை அளவில்லாமல் தரப்போகிறது. இதனால் ஏற்படும் விளைவுகள் அவரவர் பிறந்த தேதியைப் பொறுத்து சக்தகமாகவும், பாதகமாகவும் மாறும்.
2024 ஆம் ஆண்டின் வாசலில் நாம் அடியெடுத்து வைக்கும் போது, நம்மில் பலர் எதிர்காலத்தில் இருக்கும் மர்மங்களை வெளிக்கொணர ஆர்வமாக உள்ளோம். எண்களின் சக்தி மற்றும் அவை கொண்டிருக்கும் ஆற்றலை நீங்கள் நம்பினால், உங்கள் விதியின் ரகசியங்களைத் திறப்பதற்கு எண் கணிதம் முக்கிய கருவியாக இருக்கும்.

இந்த பதிவில் 1 முதல் 9 வரையிலான உங்கள் பிறந்த தேதியின் அடிப்படையில் 2024 உங்களுக்காக என்ன ஆச்சரியத்தைத் தரப்போகிறது என்று தெரிந்து கொள்ளலாம்.
எண் 1
உங்கள் பிறந்த தேதி 1 ஆக இருந்தால், புதிய தொடக்கங்கள் மற்றும் தலைமை பதவிகள் தேடிவரும் ஒரு வருடத்திற்கு தயாராகுங்கள். எண் 1 இன் ஆற்றல் என்பது உங்கள் வாழ்க்கையின் துவக்கம் மற்றும் ஆட்சியைப் பற்றியது. இந்த வருடம் மாற்றத்தை ஏற்றுக்கொள்ள தயாராக இருங்கள், வெற்றிகள் தொடரும் ஆண்டாக இது இருக்கும்.
எண் 2
உங்கள் பிறந்த தேதி 2 ஆக இருந்தால், 2024 உள்ளவர்களுக்கு நல்லிணக்கம் மற்றும் ஒத்துழைப்பின் உணர்வைத் தருகிறது. தனிப்பட்ட உறவையும் மற்றும் தொழில்ரீதியாக உங்கள் உறவுகளை வலுப்படுத்துங்கள், மேலும் சமநிலையைப் பராமரிப்பதில் கவனம் செலுத்துங்கள். உங்கள் வெற்றிக்கான படிக்கட்டுகளை கட்டுவதற்கான ஆண்டு இது.
எண் 3
உங்கள் பிறந்த தேதி 3 ஆக இருந்தால், 2024 என்பது உங்கள் படைப்பாற்றலை அதிகரிக்கும் ஒரு வருடமாக இருக்கும். உங்கள் எண்ணங்களை சுதந்திரமாக வெளிப்படுத்துங்கள், உங்கள் கலைப் பக்கத்தை ஆராய்ந்து, அதிலிருந்து வரும் மகிழ்ச்சியைத் தழுவுங்கள். நீங்கள் பிரகாசிக்க வேண்டிய நேரம் இது.
எண் 4
உங்கள் பிறந்த தேதி 4 ஆக இருந்தால், 2024 உறுதியான அடித்தளத்தை உருவாக்குவதற்கான ஆண்டாகும். உங்கள் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை இரண்டிலும் ஸ்திரத்தன்மையில் கவனம் செலுத்துங்கள். பொறுமையும் கடின உழைப்பும் நீடித்த வெற்றிக்கான அடித்தளத்தை அமைக்கும்.
எண் 5
பிறந்த தேதி 5-யைக் கொண்டவர்களுக்கு, 2024 சாகச மற்றும் ஆய்வுக்கான ஆண்டாகும். மாற்றத்தைத் ஏற்றுக் கொள்ளுங்கள், கவனமாக ரிஸ்க் எடுங்கள், புதிய வாய்ப்புகளை ஏற்றுக்கொள்ள தயாராகுங்கள். உங்கள் நெகிழ்வான தன்மை உங்கள் மிகப்பெரிய சொத்தாக இருக்கும்.
எண் 6
உங்கள் பிறந்த தேதி 6 ஆக இருந்தால், 2024 குடும்பம் மற்றும் வீட்டில் கவனம் செலுத்த வேண்டிய ஆண்டாகும். அன்புக்குரியவர்களுடன் உங்கள் பிணைப்பை வலுப்படுத்துங்கள், சுய பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுங்கள். உங்கள் நேர்மறையான ஆற்றல் உங்கள் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் சிறந்த பலன்களை அளிக்கும்.
எண் 7
உங்கள் பிறந்த எண் 7 ஆக இருந்தால், 2024 சுய கண்டறிதலுக்கான ஆண்டாகும். உங்கள் சுயத்தை உணர்ந்து, அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டிய ஆண்டு இது, உங்கள் உள்ளுணர்வை நம்புங்கள். உங்கள் உள் ஞானத்துடன் இணைவதற்கான நேரம் இது.
எண் 8
உங்கள் பிறந்த எண் 8 ஆக இருந்தால், 2024 சாதனைகளின் ஆண்டாகும். லட்சிய இலக்குகளை அமைக்கவும், கடினமாக உழைக்கவும், உங்கள் முயற்சிகளின் பலனை அறுவடை செய்யவும் இந்த ஆண்டு உங்களுக்கு வாய்ப்புகளை வழங்கும். நிதிரீதியான வெற்றி மற்றும் அங்கீகாரம் உங்கள் கைக்கெட்டும் தூரத்தில் இருக்கும்.
எண் 9
உங்கள் பிறந்த எண் 9 ஆக இருந்தால், நீங்கள் 2024-ல் மற்றவர்களுக்குச் சேவை செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் இரக்கத்தை அர்த்தமுள்ள விஷயங்களில் வெளிப்படுத்துங்கள் மற்றும் நேர்மறையான மாற்றத்திற்காக அதனை பயன்படுத்துங்கள். இந்த ஆண்டு உங்களின் செயல்கள் உங்களை சுற்றியிருப்பவர்கள் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
