Latest Updates
-
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க... -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பணத்தை அலட்சியமாக தண்ணீர் போல செலவழிப்பார்களாம் - உங்க பிறந்த மாதம் என்ன? -
சிம்ம ராசிக்கு செல்லும் சுக்கிரன்: ஜூலையில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது...
மே மாதம் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் பண விஷயத்தில் ரொம்பவும் ஜாக்கிரதையா இருக்கணும்...
Numerology: ஒவ்வொரு மாதத்தில் நுழையும் போதும், அந்த மாதம் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள பலருக்கும் ஆவல் இருக்கும். இப்படி ஒருவரது எதிர்காலத்தை அறிய ஜோதிடம் மற்றும் அதன் கிளையான எண் கணிதம் பெரிதும் உதவி புரிகிறது. இவற்றில் ராசியைக் கொண்டு எதிர்காலத்தைக் கணித்து கூறுவது ஜோதிடம், எண்களைக் கொண்டு, அதுவும் ஒருவரது பிறந்த தேதியைக் கொண்டு கணித்து கூறுவது எண் கணிதம்.
இந்த எண் கணிதத்தில் 1-9 வரையிலான விதி எண்கள் உள்ளன. இந்த விதி எண்களானது பிறந்த தேதியின் கூட்டுத் தொகையின் ஒற்றை இலக்க எண். உதாரணமாக, ஒருவர் 24 ஆம் தேதி பிறந்ததால், அந்நபரின் விதி எண் 2+4=6 ஆகும். இதுப் போன்று உங்களது பிறந்த தேதிக்குரிய விதி எண்ணைக் கணக்கிட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

தற்போது 2024 ஆம் ஆண்டின் ஐந்தாவது மாதமான மே மாதத்தில் நுழைந்துள்ளோம். இந்த மாதத்தில் குறிப்பிட்ட தேதியில் பிறந்தவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். அதுவும் பண விஷயத்தில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். தொழில் ரீதியாக சவாலாக இருக்கும். இப்போது மே மாதத்தில் எந்த தேதிகளில் பிறந்தவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
எண் 4
4,13,22,31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 4. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு மே மாதம் சாதகமாக இருக்காது. இம்மாதத்தில் சாதகமான பலன்களைப் பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். நல்ல திட்டங்களை உருவாக்கினாலும் வெற்றி கிடைக்காது. நீங்கள் ஒரு நல்ல திட்டத்தை வகுத்து அதில் கடினமாக உழைத்தால் மட்டுமே நீங்கள் விரும்பிய முடிவைப் பெற முடியும். இம்மாதத்தில் எந்த விஷயத்திலும் அவசரப்பட்டு வேலை செய்யாதீர்கள், வேலை செய்யும் போது பொறுமையாக இருங்கள். மேலும், உங்கள் ஆற்றல் சமநிலையில் இருக்க வேண்டும். இதைச் செய்வதன் மூலம், சாதகமான முடிவுகளைப் பெறுவதில் தாமதங்கள் மற்றும் சவால்களை நீங்கள் எதிர்கொள்ளலாம். ஆனால் உங்கள் இலக்குகளை முழுமையாக அடைவதில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். இம்மாதத்தில் உண்மையாக இருப்பவர்களையும் உங்களுடன் இருப்பது போல் நடிப்பவர்களையும் வேறுபடுத்திப் பார்க்க முடியும். இந்த மாதத்தில் குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது நல்லது.
எண் 5
5,14,23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 5. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் இம்மாதம் எதையும் நன்கு சிந்தித்து செய்ய வேண்டும். கவனமாக எந்த முடிவுகளை எடுக்க வேண்டும். உங்கள் வேலையில் சில நிச்சயமற்ற நிலைகள் இருக்கலாம். ஆனால் நீங்கள் முழு உத்தியுடன் முன்னேறினால், நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும். இம்மாதத்தில் உங்கள் ஆற்றலைத் தக்கவைத்துக்கொள்வது உங்களுக்கு மிகவும் முக்கியம், ஏனென்றால் அவசரத்திலும் ஆணவத்திலும் உங்கள் நிலைமை மோசமாகலாம். முழுமையடையாத வேலையை இம்மாதத்தில் செய்ய வேண்டும். ஏனெனில் வரக்கூடிய நாட்களில் நீங்கள் சில முக்கியமான வேலை அல்லது பொறுப்புகளைப் பெறலாம்.
எண் 6
6,15,24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 6. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு இம்மாதம் சுமாராக இருக்கும். நிதி வாழ்க்கையில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இம்மாதத்தில் சிந்தித்து பணத்தை செலவிக்காமல் இருந்தால், பெரிய நஷ்டத்தை சந்திப்பீர்கள். முதலீடு செய்யும் எண்ணம் இருந்தால், இம்மாதத்தில் அதை தவிர்ப்பது நல்லது. பணியிடத்தில் வேலைப்பளு மற்றும் பொறுப்புகள் அதிகரிக்கலாம். இருப்பினும், அந்த பொறுப்புகளை உங்களால் சரியாக கையாள முடியாமல் போக வாய்ப்புகள் உள்ளன. உங்கள் பெற்றோர் மற்றும் வீட்டில் உள்ள பெரியவர்கள் உங்களின் பெரிய பிரச்சனைக்கு உதவுவார்கள். அவசரம் மற்றும் ஆணவத்திலிருந்து விலகி இருந்தால், உங்கள் இலக்கை நீங்கள் பெரிய அளவில் அடைய முடியும்.
எண் 8
8,17,26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 8. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் இம்மாதத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் செலவுகள் அதிகரிக்கலாம், ஏனெனில் உங்கள் தாயின் ஆரோக்கியத்திற்காக நிறைய பணம் செலவழிக்க வேண்டியிருக்கும். சொந்தக்காரர்கள் சொத்து தகராறில் ஈடுபட நேரிடலாம். வெற்றி பெற பல சவால்களை எதிர்கொள்ள நேரிடும். தொழிலில் முன்னேற்றத்தைக் காண வேலையை மாற்ற திட்டமிடலாம். இருப்பினும் கஷ்டப்படாமல் அந்த வெற்றியைப் பெற முடியாது. இம்மாததில் சிந்தனையுடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்படுகிறது. எந்தவொரு விஷயத்திலும் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால், வயதில் மூத்தவர்களிடம் வழிகாட்டுதலைப் பெற தயங்காதீர்கள். இதைச் செய்வதன் மூலம் நல்ல பலன்களைப் பெறுவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications