Latest Updates
-
உங்ககிட்ட இந்த 5 காலை பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. அது உடம்பில் கெட்ட கொழுப்பை அதிகரிக்கும்! -
டக்குன்னு சமையலை முடிக்கணுமா? அப்ப தயிர் இருந்தா, 10 நிமிஷத்துல இப்படி குழம்பு செய்யுங்க.. -
12 ஆண்டுகள் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் குருபகவான்: அக்டோபர் முதல் இந்த 3 ராசிகளின் கஷ்டங்கள் தீர போகுது! -
இன்றைய ராசிபலன் 29 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம் -
பூரிக்கு ஒருவாட்டி இந்த பக்குவத்துல உருளைக்கிழங்கு மசாலா செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
செப்டம்பர் 01-ல் சனி-குருவால் உருவாகும் நவபஞ்ச ராஜயோகம்: தொழிலில் அபார வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிகள்! -
சுக்கிரன் துலாம் ராசிக்கு செல்வதால் அக்டோபர் வரை ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
சுரைக்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
கர்நாடகா சுரைக்காய் சட்னி ரெசிபி - இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு செமையா இருக்கும் -
செப்டம்பரில் நிகழும் குரு-செவ்வாய் சேர்க்கை: இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க..
Numerology: இந்த தேதிகளில் பிறந்தவர்கள் நிறைய பணத்தை சம்பாதிப்பாங்களாம்.. உங்களோட பிறந்த தேதி என்ன?
Numerology In Tamil: நியூமராலஜி அல்லது எண் கணிதம் ஜோதிடத்தின் ஒரு முக்கியமான கிளையாகும். எப்படி ராசிகள், நட்சத்திரங்கள், கிரகங்கள் போன்றவை ஒருவரது வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறதோ, அதேப் போல் ஒருவரது பிறந்த தேதியும் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஒருவரது பிறந்த தேதியின் அடிப்படையில் தான் அந்நபரின் விதி எண் கணக்கிடப்படுகிறது.
எண் கணிதத்தில் மொத்தம் 1 முதல் 9 எண்கள் உள்ளன. இந்த 9 எண்களும் நவகிரகங்களில் ஏதேனும் ஒரு கிரங்களுடன் தொடர்புடையதாக கருதப்படுகிறது. இந்த ஒன்பது எண்களும் ஒருவரது பிறந்த தேதியின் கூட்டுத் தொகையின் ஒற்றை இலக்க எண்ணாகும்.

எண்கணிதத்தில் குறிப்பிட்ட தேதிகளில் பிறந்தவர்கள் பண விஷயத்தில் மிகவும் அதிர்ஷ்டசாலிகளாக உள்ளனர். அதுவும் சில தேதிகளில் பிறந்தவர்கள் நிறைய பணத்தை சம்பாதிக்கும் ஆற்றலைக் கொண்டவர்களாக உள்ளனர். இப்போது நிறைய பணத்தையும், புகழையும் சம்பாதிக்கும் திறன் கொண்டவர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
விதி எண் 9
நியூமராலஜியில் விதி எண் 9 மிகவும் சக்தி வாய்ந்த, வலிமையான மற்றும் அதிர்ஷ்ட எண்ணாக கருதப்படுகிறது. ஒரு மாதத்தில் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய விதி எண் 9. இந்த மூன்று தேதிகளில் பிறந்தவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகளாக கூறப்படுகிறது. குறிப்பாக பண விஷயத்தில் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டமானவர்கள்.
பண பற்றாக்குறையே இருக்காது
எண் கணிதத்தின் படி, விதி எண் 9-ஐ சேர்ந்தவர்கள் மிகவும் புத்திசாலிகள் மற்றும் வலுவான ஆற்றலைக் கொண்டவர்கள். இவர்கள் தங்களின் இலக்கை அடையாமல் விடமாட்டார்கள். வாழ்வில் எதை சாதிக்க நினைக்கிறார்களோ, அதை நிச்சயம் சாதித்து காட்டுவார்கள். இவர் வாழ்க்கையில் இப்படி சாதனை புரிய காரணம், அவர்களின் புத்திசாலித்தனமும், வலிமையும் தான்.
இவர்கள் எந்த துறையில் பணிபுரிந்தாலும், அங்கு உயர் பதவியில் இருப்பார்கள். வாழ்வின் அடுத்த நிலைக்கு முன்னேறிக் கொண்டே இருப்பார்கள். இதனால் இவர்கள் கையில் பணம் எப்போதும் நிலைத்திருப்பதோடு, சமூகத்தில் நல்ல பெயரோடும், புகழோடும் திகழ்வர். முக்கியமாக இந்த எண்ணிற்கு உரியவர்களுக்கு வாழ்வில் பணப் பற்றாக்குறையே வராது.
தைரியமானவர்கள்
விதி எண் 9-ஐக் கொண்டவர்கள் நல்ல செல்வ செழிப்பான வாழ்க்கையை வாழ்வார்கள். இவர்கள் தங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுக்காக நிறைய பணத்தை செலவிடுவார்கள். மிகவும் தைரியமானவர்கள் மற்றும் அதிக கோபக்காரர்களும் கூட.
ஆனால் மற்றவர்கள் இவர்களைப் பற்றி என்ன நினைத்தாலும், அதைப் பற்றி இவர்கள் கவலைப்படமாட்டார்கள். இவர்கள் தங்களுக்கு என்ன பிடிக்குமோ அதை செய்து, தங்கள் இஷ்டப்படியே வாழ்வார்கள். ஆனால் இவர்களின் திருமண வாழ்க்கை சற்று மோசமாகவே இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications