Latest Updates
-
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்!
நியூமராலஜி படி இந்த 5 தேதிகளில் பிறந்தவங்க தலைக்கனம் நிறைந்த பெரிய முட்டாளாக இருப்பார்களாம்...!
Numerology: எண் கணிதம் என்பது ஒரு நபரின் பிறந்தநாளைப் பயன்படுத்தி அவர்களின் சில குணாதிசயங்களையும் விருப்பங்களையும் தீர்மானிக்கும் ஒரு பழமையான அறிவியல் ஆகும். நியூமராலஜியின் படி சில தேதிகளில் பிறந்தவர் மிகவும் கர்வமுள்ளவர்களாக இருப்பார்கள், மேலும் தற்பெருமை மற்றும் அதீத நம்பிக்கையின் மிகைப்படுத்தப்பட்ட உணர்வை அடிக்கடி வெளிப்படுத்துபவர்களாக இருப்பார்கள்.
சில தேதிகளில் திமிர்பிடித்தவர்களாக இருப்பார்கள் என்று எண் கணிதம் வெளிப்படுத்துகிறது. இந்த பதிவில் எந்தெந்த தேதிகளில் பிறந்தவர்கள் திமிர்பிடித்தவர்களாகவும் மற்றும் அதீத தன்னம்பிக்கைக் கொண்டவர்களாகவும் இருப்பார்கள் என்று தெரிந்து கொள்வோம்.

எண் 3 (அனைத்து மாதத்திலும் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் அடிக்கடி தங்களை அகங்காரத்தை வெளிப்படுத்துகிறார்கள் மற்றும் கவனத்தை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளனர். தங்கள் சிந்தனைக்கும், புத்திக்கூர்மைக்கும் யாரும் இணையில்லை என்று நினைப்பதால், அவர்கள் கர்வம் கொண்டவர்களாகத் தோன்றலாம்.
எண் 3- பிறந்தவர்கள் கவனத்தின் மையமாக இருப்பதை விரும்பலாம், அவர்கள் அளவில்லாத தன்னம்பிக்கையும், சுயநலத்தையும் வெளிப்படுத்துவார்கள்.
எண் 9 (அனைத்து மாதத்திலும் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)
அவர்களின் தாராள மனப்பான்மைக் காரணமாக, இந்த எண்ணில் பிறந்தவர்கள் மிகவும் கர்வம் கொண்டவர்காளகத் தோன்றலாம். அவர்கள் மற்றவர்களுக்கு உதவ முயற்சிப்பதால் இரக்கம் இல்லாத மற்றவர்களை விட அவர்கள் தார்மீகரீதியாக தங்களை உயர்ந்தவர்கள் என்று நினைக்கலாம்.
எண் 9-ல் பிறந்தவர்கள், உலகை ஒரு சிறந்த இடமாக மாற்றுவதற்கு மற்றவர்கள் போதுமான அளவு செயல்படவில்லை என்று அவர்கள் நம்புவதால் தங்களின் இரக்க உணர்வு மீது தற்பெருமைக் கொள்ளலாம்.
எண் 1 (அனைத்து மாதத்திலும் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)
இந்த எண்ணில் பிறந்தவர்கள் தங்களின் உள்ளார்ந்த தலைமைத்துவ திறன்கள் அவர்களை பெருமைப்பட வைக்கலாம். அவர்கள் தங்கள் திறமைகள் மீது அதீத நம்பிக்கைக் கொண்டிருக்கலாம் மற்றும் எப்போதும் தலைமைப் பொறுப்பில் இருக்க வேண்டும் என்ற வலுவான விருப்பம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
எண் 1-ல் பிறந்தவர்கள் எப்போதும் தங்கள் எண்ணங்களும், பார்வையும் மற்றவர்களை விட சிறந்ததாக இருக்க வேண்டும் என்று கர்வத்துடன் இருப்பார்கள். ஆனால் இந்த கர்வத்தால் இவர்களின் தலைமைத்துவ திறன்கள் பிற்போக்குத்தனமாக இருக்கும் இருக்கும்.
எண் 5 (அனைத்து மாதத்திலும் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)
இந்த எண்களில் பிறந்தவர்கள் சுதந்திரமான ஆன்மாக்கள் மற்றும் அதீத தைரியம் கொண்டவர்கள். அவர்கள் அதிகாரம் அல்லது வழக்கமான மரபுகளை மீறி, சமூக விதிமுறைகளைப் பின்பற்றுவதை விட தாங்கள் உயர்ந்தவர்கள் என்று நினைக்கும் போது, அவர்கள் ஆணவத்தை வெளிப்படுத்தலாம்.
வாழ்க்கைப் பாதை எண் 5 உள்ளவர்கள், தங்களின் தனித்துவமான கண்ணோட்டத்தின் காரணமாக மற்றவர்களை விட தாங்கள் சிறந்தவர்கள் என்று அகங்காரம் கொள்ளலாம்.
எண் 8 (அனைத்து மாதத்திலும் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)
இந்த தேதிகளில் பிறந்தவர்களின் போட்டி மற்றும் லட்சிய ஆளுமைகள் அவர்கள் ஆணவத்தை வெளிப்படுத்த காரணமாக இருக்கலாம். அவர்கள் தங்களின் வெற்றி மற்றும் சாதனைக்காக பாடுபடும் திறனில் அதீத நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கலாம்.
வாழ்க்கைப் பாதை எண் 8 உள்ளவர்கள் தங்களின் வெற்றிகளால் தலைக்கனம் கொண்டவர்களாக இருக்கலாம், மற்றவர்களிடம் தங்களிடம் இருக்கும் லட்சிய உணர்வு மற்றும் திறமை இல்லை என்று அவர்கள் நினைப்பதால் தலைக்கனம் கொள்ளலாம், இதனால் அவர்கள் மற்றவர்களை தாழ்வாக நடத்தலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
