Latest Updates
-
வார ராசிபலன் (09 August 2026- 15 August 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
மணமணக்கும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
மழைக்காலத்தில் பார்லர் போக நேரமில்லையா? அப்ப இந்த 5 ஃபேஸ் ஸ்க்ரப்பை யூஸ் பண்ணுங்க.. -
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
சேனைக்கிழங்கு வாங்குனா இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பு ருசியில் இருக்கும்.. -
இந்த 5 பிரச்சனை இருந்தால் பப்பாளியை தொடாதீங்க.. இல்லன்னா உங்க நிலைமை மோசமாயிடும்.. -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் சூரியன்: ஆகஸ்ட் 17 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது!
நீங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. எந்த தேதியில பிறந்தவங்கள கல்யாணம் பண்ணுனா சந்தோஷமா இருப்பீங்கன்னு சொல்றோம்..
Numerology And Life Partner In Tamil: எண்களை அடிப்படையாக கொண்டு கணித்து கூறப்படுவது தான் எண் கணிதம். ஜோதிடத்தைப் போன்றே எண் கணிதத்தைக் கொண்டும் ஒருவரது குணாதிசயங்கள், எதிர்காலம், திருமண வாழ்க்கை, காதல் வாழ்க்கை, நிதி நிலை, தொழில் வாழ்க்கை போன்றவற்றை கணிக்க முடியும். எண் கணிதத்தில் 1 முதல் ஒன்பது கூட்டு எண்கள் உள்ளன. ஒவ்வொரு எண்களும் அதிபதிகளைக் கொண்டுள்ளன.
நீங்கள் திருமண வயதில் உள்ளவரா? நீங்கள் உங்களின் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுப்பதில் குழப்பத்தில் உள்ளீர்களா? இம்மாதிரியான சூழ்நிலையில், நீங்கள் உங்களின் குணாதிசயங்களுக்கு ஏற்ற வாழ்க்கையைத் துணையைப் பெற விரும்பினால் மற்றும் உங்கள் திருமண வாழ்க்கை இனிமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க விரும்பினால், உங்கள் பிறந்த தேதிக்கு ஏற்ற வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுத்துங்கள்.

இப்படி பிறந்த தேதிக்கு ஏற்ற வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் போது, இருவருக்கும் உள்ளான பிணைப்பு இன்னும் வலுவாகவும் மற்றும் இருவரும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து வாழ்க்கையை சந்தோஷமாக நடத்துவர். இப்போது எந்த தேதிகளில் பிறந்தவர்கள் எந்த தேதிகளில் பிறந்தவர்களை திருமணம் செய்தால் நன்றாக இருக்கும் என்பதைக் காண்போம்.
விதி எண் 1
1,10,19,28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 1. இந்த எண்ணிற்கு உரியவர்கள் 1, 4 அல்லது 7 ஆகிய விதி எண்களைக் கொண்டவர்களை வாழ்க்கைத் துணையாக கொண்டால் சந்தோஷமாக இருக்கலாம். இந்த எண்ணைச் சேர்ந்தவர்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க ஆசைப்பட்டால், இந்த விதி எண்களைக் கொண்டவர்களை திருமணம் செய்தால் நல்ல உறவைப் பேணலாம்.
விதி எண் 2
எண் கணிதத்தின் படி, 2,11,20,29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 2. இந்த எண்ணிற்கு உரிய ஆண் அல்லது பெண் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களை திருமணம் செய்தால் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும் மற்றும் இவர்கள் மிகச்சிறந்த வாழ்க்கை துணையாக இருப்பார்கள்.
விதி எண் 3
3,12,21,30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள், பிப்ரவரி 19 முதல் மார்ச் 21 மற்றும் நவம்பர் 21 முதல் டிசம்பர் 21 வரை பிறந்தவர்களுள் விதி எண் 3-ஐ கொண்டவர்களை திருமணம் செய்து கொண்டால், அவர்களின் திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.
விதி எண் 4
எண் கணிதத்தின் படி, 4,13,22,31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் விதி எண் 4. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் மார்ச் 21 முதல் ஏப்ரல் 28 வரை அல்லது ஜூலை 10 முதல் ஆகஸ்ட் 20 வரை பிறந்தவர்களுள் விதி எண் 4-ஐ கொண்டவர்களை தங்கள் வாழ்க்கைத் துணையாக கொண்டால், வாழ்க்கை மிகவும் சந்தோஷமாகவும், இனிமையாகவும் இருக்கும்.
விதி எண் 5
5,14,23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் விதி எண் 5. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் மே 21 முதல் ஜூன் 20 வரை அல்லது ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 20 வரை பிறந்தவர்களுள் விதி எண் 5-ஐ கொண்டவர்களை திருமணம் செய்தால், அவர்கள் சிறந்த வாழ்க்கை துணையாகவும், நல்ல நண்பராகவும் இருப்பார்கள்.
விதி எண் 6
6,15,24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் விதி எண் 6. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் செப்டம்பர் 21 முதல் அக்டோபர் 19 வரை அல்லது ஏப்ரல் 20 முதல் மே 18 வரை பிறந்தவர்களுள் விதி எண் 6-ஐ கொண்டவர்களை திருமணம் செய்தால், வாழ்க்கை நன்றாக இருக்கும்.
விதி எண் 7
7,16,25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் விதி எண் 7. இந்த தேதிகளில் பிறந்தவர்கள், விதி எண் 1-ஐ கொண்டவர்களை திருமணம் செய்தால் தான் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். அதுவும் இவர்கள் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் பிறந்ந்த எண் 1-ஐ விதி எண்ணாக கொண்டவர்களை திருமணம் செய்வது அதிர்ஷ்டமானதாக இருக்கும்.
விதி எண் 8
8,17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் விதி எண் 8. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு விதி எண் 8-ஐ கொண்டவர்களை வாழ்க்கைத் துணையாக ஆக்கிக் கொண்டால் தான், வாழ்நாள் முழுவதும் அவருடன் நல்லுறவைப் பேண முடியும் மற்றும் வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும்.
விதி எண் 9
9,18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் விதி எண் 9. இந்த தேதிகளில் பிறந்தவர்கள், விதி எண் 9-ஐ கொண்டவர்களை வாழ்க்கை துறை அல்லது காதல் துணையாக கொண்டால், அவர்களது வாழ்க்கை சந்தோஷமாக எதிர்பார்த்தபடி இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications