Latest Updates
-
பட்டாணி மசாலா சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, பிரியாணி மாதிரியே இருக்கும் -
சனி பகவான் உதயமாகியிருப்பதால் இன்று முதல் இந்த 5 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் உங்க உடலில் நீரின் அளவு ஆபத்தான கட்டத்திற்கு சென்றுவிட்டதாம் - ஜாக்கிரதை -
கோடை வெயிலில் வீடு அனல் பறக்குதா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும்… குளிர்ச்சியும் அதிர்ஷ்டமும் தேடி வரும்! -
வாஸ்துப்படி மணி பிளாண்ட் வைக்கும் திசை இதுவா? பணவரவு தடையின்றி கொழிக்க இதை உடனே மாற்றுங்க! -
கசப்பில்லாத பொன்னாங்கண்ணி கீரை கூட்டு - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க.. -
மே மாதத்தில் உருவாகும் கப்பார் யோகத்தால் பெரிய ஆபத்துகளையும், நஷ்டத்தையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் -
வெறும் 5 ரூபாயில் கிடைக்கும் இந்த பொருள் கோடையில் சந்திக்கும் பாதி பிரச்சனையை தடுக்குமாம் - கூறும் டாக்டர்! -
அடிச்சது ஜாக்பாட் - தென்னிந்தியாவின் இந்த மாநிலத்தில் மிகப்பெரிய தங்கச் சுரங்கம் கிடைத்திருக்காம் -
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சியால் ஏப்ரல் 27 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் லாபமும், வெற்றியும் குவியப்போகுது..
உங்க பிறந்த தேதியின் படி, 2024 ஆம் ஆண்டு எப்படி இருக்கும்-ன்னு தெரியுமா?
Numerology 2024 Prediction In Tamil: 2023 ஆம் ஆண்டின் இறுதியில் உள்ளோம். இன்னும் சில நாட்களில் 2024 ஆம் ஆண்டிற்குள் நுழையவுள்ளோம். ஒவ்வொரு ஆண்டில் நுழையும் போதும், அந்த ஆண்டு எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள நிச்சயம் ஒவ்வொருவருக்குமே ஆவல் இருக்கும். அதில் முக்கியமாக அனைவரும் எதிர்பார்ப்பது நிதி நிலைமை, தொழில் வாழ்க்கை, ஆரோக்கியம், திருமண வாழ்க்கை போன்றவற்றைப் பற்றியதாகவே இருக்கும்.
நீங்கள் இதுவரை உங்கள் ராசிக்கேற்ப 2024 ஆம் ஆண்டு எப்படி இருக்கும் என்பதைத் தெரிந்திருப்பீர்கள். வெறும் கிரகங்கள் மட்டும் ஒருவரது எதிர்காலத்திலோ, வாழ்க்கையிலோ தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. எண்களும் ஒருவரது வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த எண்களை அடிப்படையாக கொண்டு கணித்து கூறும் ஜோதிடம் தான் நியூமராலஜி என்னும் எண் கணிதம். இதில் ஒருவரது பிறந்த தேதியைக் கொண்டு எதிர்காலம் கணித்து கூறப்படுகிறது. அந்த வகையில் உங்கள் பிறந்த தேதிப்படி 2024 ஆம் ஆண்டில் தொழில் வாழ்க்கை, நிதி நிலைமை, ஆரோக்கியம், திருமண வாழ்க்கை போன்றவை எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் தொடர்ந்து படியுங்கள்.
எண் 1
1,10,19,28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 1. இந்த எண்ணிற்கு உரியவர்களுக்கு 2024 ஆம் ஆண்டு அதிர்ஷ்டம் நிறைந்த ஆண்டாக இருக்கும். திருமணமானவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். இந்த ஆண்டு உங்களுக்கு ஒரு நல்ல தொழில் மாற்றம் இருக்கும். இதன் மூலம் நீங்கள் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். ஆண்டின் நடுப்பகுதியில் ஆரோக்கியம், படிப்பு மற்றும் வணிகத்தில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஆனால் ஆண்டின் இறுதியில் ஒரு நல்ல பலனைப் பெறுவீர்கள்.
எண் 2
2,11,20,29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 2. இந்த எண்ணிற்கு உரியவர்கள் 2024 ஆம் ஆண்டில் அதிகமாக உணர்ச்சிவசப்படுவதால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். முக்கியமாக உணர்ச்சிவசப்படுவதால் திருமணம் மற்றும் குடும்ப உறவுகளை பராமரிப்பதில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மேலும் கல்வி, தொழில், வியாபாரம் ஆகியவற்றில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். இந்த புத்தாண்டில் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த ஆண்டில் அதிகம் உணர்ச்சிவசப்படுவதைக் கட்டுப்படுத்தினால், இந்த ஆண்டு சிறப்பாக இருக்கும்.
எண் 3
3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 3. இந்த எண்ணிற்கு உரியவர்கள் 2024 ஆம் ஆண்டில் பல நல்ல பலன்களைப் பெறுவார்கள். குறிப்பாக திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். குடும்ப உறவுகள் மற்றும் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். கல்வி, தொழில் மற்றும் வணிகத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எதிர்பார்த்தவாறு எதுவுமே நடக்காது.
எண் 4
4,13,22,31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 4. இந்த எண்ணிற்கு உரியவர்கள் இந்த ஆண்டில் வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். திருமண வாழ்க்கையில் சில சிக்கல்களை சந்திக்க நேரிடும். ஆனால் ஆண்டின் நடுப்பகுதியில் அது மேம்படும். தொழில், கல்வி, வியாபாரம் போன்றவற்றில் சில முக்கிய முடிவுகளை எடுக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். எந்த முடிவை எடுக்கும் போதும், புத்திசாலித்தனமாக யோசித்து சிறந்த முடிவுகளை எடுக்க அறிவுறுத்தப்படுகிறது.
எண் 5
5,14,23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 5. இந்த எண்ணிற்கு உரியவர்கள் 2024 ஆம் ஆண்டில் விசுவாசமாகவும், மிகவும் நட்பாகவும் இருப்பார்கள். அனைவருடனும் நல்லுறவை பேண முயற்சிப்பீர்கள். ஆனால் இந்த ஆண்டில் உறவுகளை கையாள்வதில் சில சிக்கல்கள் இருக்கும். குறிப்பாக காதல் மற்றும் திருமண வாழ்க்கை உறவுகளை கையாள்வதில் சில சிக்கல்கள் இருக்கும். கல்வி, தொழில், வியாபாரம், பணம் மற்றும் பலவற்றிற்கு உங்கள் வாழ்க்கையில் ஒரு பிரச்சனையும் இருக்காது. அனைத்தும் நீங்கள் எதிர்பார்த்தபடி நடக்கும்.
எண் 6
6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 6. இந்த எண்ணிற்கு உரியவர்கள் 2024 ஆம் ஆண்டில் சிறந்த ஆளுமை மற்றும் ஆக்கப்பூர்வமான யோசனைகளைக் கொண்டு இருப்பார்கள். இதனால் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான சிறந்த வாய்ப்புக்கள் கிடைக்கும். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்ப வாழ்க்கை மற்றும் திருமண வாழ்க்கை இந்த ஆண்டில் மகிழ்ச்சியாகவும், இனிமையாகவும் இருக்கும்.
எண் 7
7,16,25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 7. இந்த எண்ணிற்கு உரியவர்களுக்கு 2024 ஆம் ஆண்டு மிகவும் நன்றாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு ஆண்டின் தொடக்கத்தில் பதவி உயர்வு கிடைக்கும். வணிகர்கள் நல்ல வெற்றியைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. வியாபாரிகள் நிறைய பணத்தை சம்பாதிப்பார்கள். ஆனால் ஆண்டின் நடுப்பகுதியில் கவனக்குறைவால் படிப்பு மற்றும் ஆரோக்கியத்தில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். திருமண வாழ்க்கையில் புரிதல் பிரச்சனையால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஆனால் அவை அனைத்தும் எளிதில் தீர்க்கப்படும்.
எண் 8
8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 8. இந்த எண்ணிற்கு உரியவர்களுக்கு 2024 ஆம் ஆண்டு வாய்ப்புகள் நிறைந்ததாகவும், வாழ்க்கையில் புதிய பாதையாகவும் இருக்கும். குடும்பத்தினருடன் போதுமான நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். மாணவர்களுக்கு இந்த ஆண்டு அதிர்ஷ்டமானதாக இருக்கும். படிப்பில் சிறந்து விளங்குவார்கள். இந்த புத்தாண்டில் உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் இருக்க, கடினமாக உழைக்க வேண்டும்.
எண் 9
9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 9. இந்த எண்ணிற்கு உரியவர்களுக்கு 2024 ஆம் ஆண்டு நல்லது, கெட்டது என இரண்டுமே கலந்திருக்கும். காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் சில பிரச்சனைகளை சந்திப்பீர்கள். ஏனெனில் அதில் நீங்கள் கவனம் செலுத்தமாட்டீர்கள். இதைத் தவிர்க்க வேண்டுமானால், உங்கள் அன்புக்குரியவர்களுடன் சிறிது நேரத்தை செலவிடுங்கள். இது தவிர ஆரோக்கியம், பணம், தொழில், வியாபாரம் அனைத்தும் நன்றாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டில் எதற்கும் பிடிவாதம் பிடிக்காதீர்கள். இல்லாவிட்டால் பெரிய இழப்பை சந்திக்க நேரிடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications