Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
நியூமராலஜி படி, 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு 2024 எப்படி இருக்கப் போகுது-ன்னு தெரியுமா?
Numerology 2024 Prediction: நமது வாழ்க்கையில் எண்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அப்படிப்பட்ட எண்களைக் கொண்டு ஒருவரது எதிர்காலத்தைக் கணித்து கூறும் ஜோதிடம் தான் எண் கணிதம். இந்த எண் கணித்தில் ஒருவரது விதி எண்ணானது அவரது பிறந்த தேதியைக் கொண்டு பெறப்படுகிறது.
எப்படி ஜோதிடத்தில் 9 கிரகங்களைக் கொண்டு ஒருவரது எதிர்காலம் கணித்து கூறப்படுகிறதோ, அதேப் போல் எண் கணிதத்தில் 1 முதல் 9 வரையிலான எண்களைக் கொண்டு ஒருவரது எதிர்காலம் கணித்து கூறப்படுகிறது.

ஜோதிடத்தைப் போன்றே, எண் கணிதத்திலும் ஒருவரது பிறந்த தேதியின் படி 2024 ஆம் ஆண்டு எப்படி இருக்கும் என்று கணித்து கூறப்பட்டுள்ளது. உங்களின் விதி எண் 3 என்றால், அந்த விதி எண்ணிற்கு உரியவர்களுக்கு 2024 ஆம் ஆண்டு எப்படி இருக்கும் என்பதை இப்போது காண்போம்.
விதி எண் 3-க்கு 2024 ஆம் ஆண்டு எப்படி இருக்கும்?
3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய விதி எண் தான் 3. எண் கணிதத்தின் படி, வருகிற 2024 ஆம் ஆண்டில் இந்த எண்ணிற்கு உரியவர்கள் சில சிறந்த முடிவுகளைப் பெறுவார்கள். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் சிறப்பாக செயல்படுவார்கள்.
இந்த ஆண்டில் புதிதாக, வித்தியாசமாக ஏதாவது ஒன்றை செய்ய வேண்டுமென்று உங்களுக்கு தோன்றும். அதற்காக முயற்சிகளையும் எடுப்பீர்கள். அந்த முயற்சிகள் நல்ல பலனைத் தருவதாக இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, இந்த எண்ணிற்கு உரியவர்களுக்கு சிறப்பாக இருக்கும்.
விதி எண் 3-க்கு காதல் வாழ்க்கை எப்படி இருக்கும்?
எண் 3-க்கு உரியவர்களின் காதல் வாழ்க்கையைப் பொறுத்தவரை, மிகவும் சிறப்பாக இருக்கும். காதல் வாழ்க்கையாக இருந்தாலும், திருமண வாழ்க்கையாக இருந்தாலும், இரண்டுமே இனிமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும். சிங்கிளாக இருப்பவர்கள் மிங்கிளாக நினைத்தால், இந்த ஆண்டில் அதற்கான வாய்ப்புக்கள் அமையும். இந்த ஆண்டு உங்களுக்கு அதிர்ஷ்டமானது என்பதை நிரூபிக்கும் வகையில் இருக்கும்.
விதி எண் 3-க்கு தொழில் வாழ்க்கை எப்படி இருக்கும்?
நியூமராலஜியின் படி, 2024 ஆம் ஆண்டு விதி எண் 3-க்கு உரியவர்களுக்கு தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். சிலர் புதிய வாகனத்தை வாங்குவதற்கான வாய்ப்புக்களைப் பெறுவார்கள். நிலம் அல்லது வீடு வாங்க விரும்பினால், இந்த ஆண்டில் அதை வாங்க வாய்ப்புக்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு தேடி வரும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications