Latest Updates
-
செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு செல்வம் பெருகும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanti 2026: இந்த 4 ராசிக்காரங்க பகவான் கிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் -
1 கப் அவலும், 1/4 கப் எள்ளும் இருந்தா.. கிருஷ்ண ஜெயந்திக்கு இந்த ஸ்வீட் செய்யுங்க.. -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் உன்னியப்பம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - நெய் மணக்க சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் அவங்க முன்னாள் காதலை மறக்கவே மாட்டார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்திக்கு என்னலாம் செய்வாங்க-ன்னு தெரியுமா? -
2026-ன் சூப்பர் எல் நினோ இந்தியாவிலும், உலகிலும் ஏற்படுத்தப்போகும் பாதிப்புகள் - எச்சரிக்கும் விஞ்ஞானிகள் -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
முகலாய அரசர்கள் விரும்பி சாப்பிட்ட ஷாஹி புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
கால்களில் இந்த பிரச்சனைகளை அடிக்கடி சந்திக்கிறீங்களா? அப்ப உடம்புல இந்த பிரச்சனை இருக்க வாய்ப்பிருக்கு.. உஷார்
1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு 2024 ஆம் ஆண்டு எப்படி இருக்கப் போகுதுன்னு தெரியுமா?
Numerology 2024 Prediction: எண்கள் நமது வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அந்த எண்களைக் கொண்டு ஒருவரது வாழ்க்கையைக் கணித்து கூறும் ஜோதிடம் தான் எண் கணிதம். இந்த எண் கணித்தில் ஒருவரது விதி எண்ணானது அவரது பிறந்த தேதியைக் கொண்டு பெறப்படுகிறது.
எப்படி ஜோதிடத்தில் 9 கிரகங்களைக் கொண்டு ஒருவரது எதிர்காலம் கணித்து கூறப்படுகிறதோ, அதேப் போல் எண் கணிதத்தில் 1 முதல் 9 வரையிலான எண்களைக் கொண்டு ஒருவரது எதிர்காலம் கணித்து கூறப்படுகிறது.

ஜோதிடத்தைப் போன்றே, எண் கணிதத்திலும் ஒருவரது பிறந்த தேதியின் படி 2024 ஆம் ஆண்டு எப்படி இருக்கும் என்று கணித்து கூறப்பட்டுள்ளது. உங்களின் விதி எண் 1 என்றால், அந்த விதி எண்ணிற்குரியவர்களுக்கு 2024 ஆம் ஆண்டு எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள விரும்பினால், தொடர்ந்து படியுங்கள்.
விதி எண் 1-ஐ சேர்ந்தவர்களின் குணாதிசயங்கள்
1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 1. நீங்கள் எந்த மாதத்திலும் இந்த தேதிகளில் பிறந்திருந்தால், உங்களின் விதி எண் 1 ஆகும். இந்த விதி எண்ணிற்கு உரியவர்கள் மிகவும் தைரியமானவர்கள், கடின உழைப்பாளிகள். கடினமாக உழைக்க பயப்படாதவர்கள். எந்த ஒரு முடிவையும் திறம்பட எடுப்பதிலும் வல்லவர்கள். நல்ல தலைமைப் பண்பைக் கொண்டவர்கள். முக்கியமாக இந்த எண்ணிற்கு உரியவர்கள் சமூகத்தில் நல்ல மரியாதையைப் பெற்றிருப்பார்கள்.
விதி எண் 1-க்கு 2024 ஆம் ஆண்டு எப்படி இருக்கும்?
விதி எண் 1-ஐ கொண்டவர்களுக்கு 2024 ஆம் ஆண்டு மிகவும் மங்களகரமானதாக இருக்கப் போகிறது. எந்த துறையில் வேலை செய்தாலும், அதில் நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களின் செயல்திறன் இந்த ஆண்டில் மேம்படும்.
எந்த ஒரு வேலையை கையில் எடுத்தாலும், அதில் வெற்றி பெறுவீர்கள். உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சியுடன் தொடர்புடையவர்கள் இந்த ஆண்டில் ஒரு பெரிய சாதனையை புரிவார்கள். குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். மொத்தத்தில் இந்த ஆண்டு எல்லாவிதத்திலும் மிகவும் சிறப்பான ஆண்டாக இருக்கும்.
எண் கணிதத்தின் படி, 2024 ஆம் ஆண்டிற்கு உரிய எண் 8. இந்த 8-க்கு அதிபதி சனி பகவான். அதே சமயம் எண் 1-ன் அதிபதி சூரியன். 2024 ஆம் ஆண்டிற்கான நியூமராலஜி கணிப்புகளின் படி, எண் 1-க்கு உரியவர்கள் 2024 ஆம் ஆண்டில் வெற்றியைக் காண மிகவும் கடினமாக உழைக்க வேண்டும். சுருக்கமாக கூற வேண்டுமானால், கடின உழைப்பை இந்த ஆண்டில் போட்டால், நல்ல பலனை இந்த ஆண்டில் பெறலாம்.
அதிர்ஷ்ட எண்கள் மற்றும் அதிர்ஷ்ட கற்கள்
எண் கணிதத்தின் படி, எண் 1-க்கு உரியவர்களுக்கு ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை மிகவும் அதிர்ஷ்டமான நாட்களாகும். இந்த எண்ணிற்கு உரியவர்களின் அதிர்ஷ்ட நிறம் என்றால் அது மஞ்சள் நிறம். இந்த எண்ணைச் சேர்ந்தவர்கள் ரூபி ரத்தின கற்களை அணிந்தால், அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெற்று, நல்ல பலன்களைப் பெறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications