Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
நியூமராலஜி படி, இந்த 6 தேதிகளில் பிறந்தவர்களுக்கு 2024 ரொம்பவும் சூப்பரா இருக்கப்போகுது..
Numerology 2024: எண்களை அடிப்படையாக கொண்டு கணித்து கூறப்படுவது தான் எண் கணிதம். இந்த எண்களானது ஒருவரது பிறந்த தேதியில் இருந்து பெறப்படுகிறது. ஜோதிடத்தைப் போன்றே, எண் கணிதத்தைக் கொண்டும் ஒருவரது எதிர்காலத்தை கணித்து கூற முடியும்.
இன்னும் ஒரு வாரத்தில் 2024 ஆம் ஆண்டில் நுழையவுள்ளோம். எண் கணிதத்தின் படி, 2024 ஆம் ஆண்டின் எண் 8 என்பதால் சனி பகவானின் ஆதிக்கம் அதிகம் இருக்கும். மேலும் சனி பகவானின் நண்பன் சுக்கிரன் என்பதால், இந்த 2024 ஆம் ஆண்டு 6 மற்றும் 8-ஐ விதி எண்ணாக கொண்டவர்களுக்கு சிறப்பாக இருக்கும்.

அதாவது 6, 15, 24, 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் இந்த புத்தாண்டில் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். இது தவிர பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் ஆகிய மாதங்களில் பிறந்தவர்களுக்கும் இந்த ஆண்டு சாதகமாக இருக்கும். இப்போது 6, 15, 24, 8, 17, 26 ஆகிய பிறந்த தேதிகளை கொண்டவர்களுக்கு 2024 ஆம் ஆண்டு எப்படி இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
மாணவர்கள் சிறந்து விளங்குவார்கள்
நியூமராலஜியின் படி, 6, 15, 24, 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்த மாணவர்களுக்கு 2024 ஆம் ஆண்டு சிறப்பாக இருக்கும். இந்த ஆண்டில் போட்டி தேர்வுகளில் கலந்து கொள்ளும் மாணவர்கள் நல்ல வெற்றியைப் பெறுகூர்கள்.
வாழ்வில் நல்ல அனுபவம் வாய்ந்தவர்களின் உதவியுடன் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த வாய்ப்புக்களைப் பெறுவீர்கள். சனி பகவானின் அருளால் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். ஆண்டின் இறுதியில் படிப்பை முடித்து வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
தொழில் சிறக்கும்
6, 15, 24, 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்த வியாபாரிகள் 2024 ஆம் ஆண்டில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். தொழிலதிபர்கள் புதிய ஆர்டர்கள் மூலம், நல்ல நிதி நன்மைகளைப் பெறுவார்கள். நிலுவையில் உள்ள பணம் கைக்கு வந்து சேரும். உங்களின் தைரியம் அதிகரிக்கும். வணிகர்கள் எதிர்பார்த்த கடனை வங்கியில் இருந்து பெறுவார்கள்.
புதிய வேலையைத் தொடங்க நினைத்தால், அதை இந்த ஆண்டில் தொடங்கினால் நல்ல பலனைப் பெறலாம். வேலை செய்து கொண்டிருப்பவர்கள், நீண்ட நாட்களாக வேலையை மாற்ற நினைத்தால், இந்த ஆண்டில் புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். திருமணமானவர்கள் குழந்தைகளால் நல்ல செய்தியைப் பெறுவார்கள்.
வெளிநாடு செல்ல வாய்ப்புள்ளது
சனி பகவானின் அருளால் 6, 15, 24, 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள், 2024 ஆம் ஆண்டில் வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணத்தை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளது. இந்த பயணமானது நல்ல நிதி ஆதாயங்களைத் தருவதாக இருக்கும். முக்கியமாக இந்த ஆண்டில் செய்யும் முதலீடுகள், எதிர்காலத்தில் நல்ல நிதி நன்மைகளைத் தருவதாக இருக்கும். ஆனால் ஆரோக்கிய விஷயத்தில் மட்டும் கூடுதல் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications