Latest Updates
-
1 கப் தட்டப்பயறும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா.. இப்படி கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்கும் செமயா இருக்கும்.. -
விந்தணுக்களின் நிறமும், அதற்கான அர்த்தங்களும் - விளக்கும் டாக்டர்! -
மழைக்காலத்தில் மணி பிளாண்ட் செடியை இப்படி வைங்க! பணவரவு குறையாமல் இருக்க வாஸ்து ரகசியங்கள் இதோ -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சியால் ஜூன் 16 முதல் இந்த 4 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
ஜவ்வரிசி தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 11 ஜூன் 2026: இன்று உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
ஜூன் 11-ல் நிகழும் 3 கிரகங்களின் அரிய சேர்க்கை: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சகல நன்மைகளும் கிடைக்கப்போகுதாம் -
விவாகரத்து இனி சுலபம்! உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு தம்பதிகளுக்குக் கொடுக்கும் நிம்மதி என்ன? -
தக்காளி இருந்தா இந்த மாதிரி ஹைதராபாத் தக்காளி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
ஹனிமூனுக்குப் பெற்றோரையும் கூட்டிச் சென்ற கணவர்! விவாகரத்து கோரி நீதிமன்றம் சென்ற மனைவி - என்ன நடந்தது?
நோஸ்ட்ராடாமஸ் கணிப்புகளின் படி 2025-ல் நடக்கப்போகும் 3 பேரழிவுகள்... இதில் 2 அழிவுகள் ஏற்கனவே தொடங்கிருச்சு...
பாபா வாங்கா பற்றி உலகம் முழுவதும் நன்கு அறிவார்கள். ஆனால் பாபா வாங்காவிற்கு முன்னரே எதிர்காலத்தை துல்லியமாக கணித்த ஒருவர் இருந்தார், அவர்தான் நோஸ்ட்ராடாமஸ். 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரெஞ்சு ஜோதிடரும் தீர்க்கதரிசியுமான நோஸ்ட்ராடாமஸ், எதிர்கால நிகழ்வுகளை கணித்ததற்காக புகழ் பெற்றார்.
அவரது எழுத்துக்களின் விளக்கங்கள் தன்னிச்சையானவை மற்றும் அடிக்கடி சர்ச்சைகளை உருவாக்கக் கூடியவை. அவரது முன்கணிப்புகள் சில 2025 நடக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. நெப்போலியனின் வெற்றி, உலகப் போர்கள் மற்றும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி போன்ற வரலாற்று நிகழ்வுகள் அவர் சரியாகி கணித்த நிகழ்வுகளில் முக்கியமானவை. 2025- ஆம் ஆண்டுக்கான அவரது நடுங்க வைக்கும் கணிப்புகள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

இயற்கை பேரழிவுகள் மற்றும் காலநிலை மாற்றம்
2025 ஆம் ஆண்டிற்கான நோஸ்ட்ராடாமஸின் ஆபத்தான தீர்க்கதரிசனங்களில் ஒன்று "பூகம்பங்கள்" மற்றும் "நிரம்பி வழியும் ஆறுகள்" என்று குறிப்பிடுகிறது, இது வரவிருக்கும் சுற்றுச்சூழல் பேரழிவுகளின் அறிகுறியாக இருக்கலாம். ஏற்கனவே உலகின் பல நாடுகளில் பூகம்பங்கள் ஏற்பட்டுள்ளதை நாம் மறந்து விடக்கூடாது. மேலும் இது உலகளவில் காலநிலை மாற்றம் ஒரு சர்ச்சைக்குரிய பிரச்சினையாக மாறியுள்ளது.
துருவ பனிக்கட்டிகள் உருகுவது மற்றும் அதிகரித்து வரும் உலகளாவிய வெப்பநிலை காரணமாக, வெள்ளம், வறட்சி மற்றும் காட்டுத்தீ போன்ற அடிக்கடி வானிலை நிகழ்வுகளை தொடர்ந்து நிகழ்ந்த வண்ணம் உள்ளது. நோஸ்ட்ராடாமஸின் இந்த விளக்கங்கள் பூமியின் வேகமாக மாறிவரும் காலநிலை குறித்த தற்போதைய கவலைகளுடன் ஒத்துப்போகின்றன.
சிறுகோளுடன் மோதல்
"Harbinger of Fate" என்று அழைக்கப்படும் ஒரு சிறுகோள் சம்பந்தப்பட்ட ஒரு பெரிய வானியல் பேரழிவை நோஸ்ட்ராடாமஸ் கணித்துள்ளார். இந்த தீர்க்கதரிசனத்தின்படி, பூமி இந்த சிறுகோளுடன் மோதுவதற்கு ஆபத்தான முறையில் நெருங்கி வரக்கூடும், இது உலகம் முழுவதும் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தும் மற்றும் உலகளாவிய பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். இந்த சிறுகோள் துல்லியமான தாக்கம் எங்கு நிகழும் என்று இன்னும் தெரியவில்லை என்றாலும், சிறுகோளின் அருகாமையால் பூமியின் ஈர்ப்பு விசை மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை கணிசமாக பாதிக்கப்படலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய மோதல்கள்
நோஸ்ட்ராடாமஸின் குறிப்புகளில் ஐரோப்பா முழுவதும் "கொடூரமான போர்கள்" மூளும் என்று சில குறிப்புகள் உள்ளன. சிலர் இந்த சர்ச்சைகள் ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் உட்பட நடந்து வரும் புவிசார் அரசியல் பதட்டங்களுடன் ஒத்துப்போகிறது. "பெரும் சக்திகள்" மற்றும் "கொடூரமான போர்கள்" இடையேயான மோதல்கள் மற்றொரு தீர்க்கதரிசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.
மருத்துவ முன்னேற்றம்
நோஸ்ட்ராடாமஸ் கணிப்புகளின்படி, 2025-ல் மருத்துவத் துறையில் பெரிய முன்னேற்றங்கள் ஏற்படும் என்று கூறப்படுகிறது. 2025 ஆம் ஆண்டில் குறிப்பிடத்தக்க மருத்துவ முன்னேற்றம் ஏற்படும், இது சிறந்த நோய் தடுக்கும் வழிமுறைகள் மற்றும் நாள்பட்ட நோய்களுக்கான புதிய சிகிச்சைகளுக்கு வழிவகுக்கும். இந்த முன்னேற்றங்கள் பல தனிநபர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தலாம் மற்றும் மருத்துவத் துறையில் பெரிய புரட்சியை ஏற்படுத்தும்.
சைபர் தாக்குதல்கள்
நோஸ்ட்ராடாமஸ் கணிப்புகள், "உலகளாவிய உள்கட்டமைப்பில் சைபர் தாக்குதல்" ஏற்படக்கூடும் என்ற தற்போதைய காலகட்டத்தில் அதிகரித்து வரும் சைபர் பாதுகாப்பு ஆபத்துகள் குறித்த மற்றொரு தீர்க்கதரிசனத்தையும் கணித்துள்ளன. டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் பயன்பாடு அதிகரிக்கும் போது ஏற்படும் பாதுகாப்பு மீறல்கள் அரசாங்கங்களையும் நிறுவனங்களையும் கடுமையான ஆபத்தில் ஆழ்த்தக்கூடும். தற்போது அதிகரித்து வரும் AI பயன்பாடு இந்த ஆபத்தை மேலும் அதிகரிக்கும்.



Click it and Unblock the Notifications
