Latest Updates
-
வாஸ்துப்படி இந்த 5 சிலைகளை வீட்டுல வாங்கி வையுங்க.. வீட்டில் பணப்பிரச்சனையே வராது.. -
தலையணைக்கு அடியில் இந்த 5 பொருட்களில் ஒன்றை வைத்து தூங்குவது உங்களுக்கு சகல நன்மைகளையும் கொடுக்குமாம் -
1 கப் அவலும், 1 வாழைப்பழமும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
2 முட்டை இருந்தா இந்த மாதிரி அவிச்ச முட்டை ஆம்லெட் ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா வேற லெவலில் இருக்கும் -
உங்க தலைமுடி வறண்டு தேங்காய் நார் போல் இருக்கா? அப்ப வீட்டிலேயே இந்த கெரட்டின் ஹேர் மாஸ்க்கை போடுங்க.. -
பீர்க்கங்காய் வெச்சு இப்படி ஒருடைம் பருப்பு கறி செய்யுங்க.. சாதம், இட்லி, தோசைக்கும் செமயா இருக்கும்.. -
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கணுமா? அப்ப நெல்லிக்காயை இந்த 5 பொருட்களுடன் சேர்த்து சாப்பிடுங்க.. -
குழந்தை பெற்றுக்கொள்ள இலட்சக்கணக்கில் மானியம் கொடுக்கும் நாடுகள் - டிக்கெட்டை உடனே போடுங்க -
Aippasi Matha Rasi Palan 2026: ஐப்பசி மாசம் இந்த 3 ராசிக்காரங்களை வெச்சு செய்யப்போகுது.. உஷார்.. -
கல்யாண வீட்டு தக்காளி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. தாறுமாறா இருக்கும்..
உங்கள் கையில் விதி ரேகை இல்லாமல் இருப்பது அதிர்ஷ்டமா? துரதிர்ஷ்டமா? உண்மை என்னனு தெரிஞ்சிக்கோங்க
ஜோதிடம் போலவே கைரேகை சாஸ்திரமும் ஒருவரின் ஆளுமை மற்றும் எதிர்காலத்தைப் பற்றி தெரிந்து கொள்ள உதவுகிறது. கைரேகை சாஸ்திரத்தின் படி நம் கைகளில் உள்ள ஒவ்வொரு ரேகைக்கும், சின்னத்திற்கும் ஒரு அர்த்தம் உண்டு. கைரேகை சாஸ்திரத்தில் 'அதிர்ஷ்ட ரேகை' என்றும் அழைக்கப்படும் 'விதி ரேகை', ஒருவரின் தொழில், வாழ்க்கைப்பாதை மற்றும் ஒட்டுமொத்த வெற்றி குறித்த தகவல்களை வெளிப்படுத்துகிறது.

உள்ளங்கையின் அடிப்பகுதியிலிருந்து சனி மேடு நோக்கி செங்குத்தாகச் செல்லும் இந்த ரேகை, தொழில் வளர்ச்சி மற்றும் நல் அதிர்ஷ்டத்தைக் குறிக்கிறது. ஆனால் சிலருடைய உள்ளங்கைகளில் இந்தக் 'விதி ரேகை' இருப்பதில்லை. இது அந்த நபர் ஒரு குறிப்பிட்ட பாதையைத்தான் பின்பற்ற வேண்டும் என்ற கட்டாயத்திற்கு உட்பட்டவர் அல்ல என்பதைக் குறிக்கிறது. விதி ரேகை இல்லாமல் இருப்பதன் அர்த்தம் என்ன என்பதையும், அது உண்மையில் அசுபமானதாகக் கருதப்படுகிறதா என்பதையும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
விதி ரேகை இல்லாமல் இருப்பதன் அர்த்தம் என்ன?
உள்ளங்கையில் விதி ரேகை இல்லாமல் இருப்பது, வாழ்க்கை திசையோ நோக்கமோ இல்லாமல் இருப்பதைக் குறிக்க வேண்டிய அவசியமில்லை, அதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளது. அவர் தனது சொந்த விதியைத் தானே உருவாக்குவார். மற்றவர்களால் உருவாக்கப்பட்ட பாதையைப் பின்பற்றுவதற்குப் பதிலாக, அவர்கள் தங்கள் சொந்த முடிவுகளை தாங்களே எடுக்கிறார்கள், தங்கள் தொழிலை வடிவமைக்கிறார்கள் மற்றும் தங்கள் தனிப்பட்ட விருப்பங்களின் மூலம் தங்கள் வாழ்க்கையை உருவாக்குகிறார்கள்.
கையில் விதி ரேகை இல்லாதவர்கள் பொதுவாக அடிக்கடி தொழில் மாற்றங்களையோ அல்லது நிரந்தரமான வேலை இல்லாமலிருப்பதையோ அனுபவிப்பார்கள், இது அவர்களை சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ளும் திறனுடையவர்களாக மாற்றுகிறது. அவர்கள் சுதந்திரமானவர்கள், சமூகத்தின் எதிர்பார்ப்புகளை ஒரு பொருட்டாகவே கருதாதவர்கள்.
ஆண்களின் கையில் 'விதி ரேகை' இல்லாமல் இருப்பதன் அர்த்தம் என்ன?
ஆண்களின் கையில் விதி ரேகை இல்லாமல் இருப்பதற்கான அர்த்தங்கள் என்னவெனில்,
- தங்கள் வாழ்க்கைப் பாதையைத் தாங்களே உருவாக்கிக்கொள்ளவும், தங்கள் எதிர்காலத்தை வடிவமைத்துக்கொள்ளவும் அவர்கள் சுதந்திரப் பறவைகளாக இருப்பார்கள்.
- தங்கள் இலக்குகளை அடைவதில் அவர்கள் சிரமங்களைச் சந்திக்க நேரிடலாம்.
- தங்கள் எதிர்காலத்தைப் பற்றிய தெளிவான தொலைநோக்குப் பார்வை அவர்களிடம் பெரும்பாலும் இருக்காது. அத்துடன், தங்கள் தொழில் அல்லது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான முடிவுகளை எடுப்பதில் அவர்கள் சிரமப்படலாம்.
பெண்களின் கையில் 'விதி ரேகை' இல்லாமல் இருப்பதன் அர்த்தம் என்ன?
- தனது வாழ்க்கைப் பாதையைத் தீர்மானிப்பதில் அவர்கள் மற்றவர்களை விட அதிக சவால்களைச் சந்திக்க நேரிடலாம். விதி குறித்த தெளிவான அறிகுறி இல்லாததால், வாழ்க்கையில் தனது பாதையை அமைத்துக்கொள்ள அவர் கூடுதல் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.
- விதி ரேகை இல்லாமல் இருப்பது உறவுகளில் ஏற்படும் சிரமங்களையும் குறிக்கலாம்.
- பெண்களின் கையில் விதி ரேகை இல்லாதது அவர்களை மாற்றங்களுக்கு ஏற்பத் தகவமைத்துக்கொள்ளும் திறன் கொண்டவர்களாக மாற்றுகிறது. மேலும், தங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகளைச் சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்ளும் திறனும் அவர்களிடம் இருக்கும்.
கையில் விதி ரேகை இல்லாமல் இருப்பது துரதிர்ஷ்டமா?
ஒருவரின் கையில் விதி ரேகை இல்லாதது அவர்களுக்கு அதிர்ஷ்டம் இல்லை என்றோ அல்லது அவரால் வெற்றி பெற முடியாது என்றோ அர்த்தமல்ல. மாறாக, விதி ரேகை இல்லாதது ஒரு வரையறைக்கப்பட்ட சூழலிருந்து விடுபடுவதைக் குறிக்கிறது. இதன் அர்த்தம், அவர்கள் தங்கள் சொந்த நிபந்தனைகளின்படி வெற்றியை அடைய முடியும். அவர்கள் ஒரு நிலையான தொழில் பாதையால் கட்டுப்படுத்தப்படுவதில்லை, மேலும் மற்றவர்களை விட அதிக வாய்ப்புகளை பெற முடியும்.



Click it and Unblock the Notifications

